என்னது சிக்கன் பிரியாணி கெட்டதா.. லாஜிக் இல்லாமல் பேசும் திமுக.. ராஜ்மேகன் பதிலடி

  • ஈரோடு: தவெக ஆட்சியமைத்து 3 மாதங்களாகிறது. லஞ்சம், ஊழலற்ற ஆட்சியை கொடுப்போம் என கூறியுள்ளனர். குறிப்பிடத்தக்க சில மாற்றங்களையும் ஏற்படுத்தி வருகிறார்கள். பள்ளிகளில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி போடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிக்கன் பிரியாணி ஒவ்வாமை என சொல்லும் ஒரே நபர் டிகேஎஸ் இளங்கோவன் தான் என ராஜ்மோகன் பதிலடி கொடுத்துள்ளார்.

    Advertisement

    ஈரோட்டில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகம் முழுவதும் ஏற்கனவே நீதிகட்சி உணவு கொடுத்தது. காமராஜர் ஆட்சியில் இதை இலவச உணவாக, மதிய உணவாக கொடுத்தார். புரட்சி தலைவர் எம்ஜிஆர் அதை சத்துணவு திட்டமாக கொண்டு வந்தார். கலைஞர் கருணாநிதி அதில் முட்டையை இணைத்து ஊட்டச்சத்து உணவாக மாற்றினார். புரட்சி தலைவி அம்மா அதை வாரம்தோறும் கொடுப்பதை உறுதி செய்தார்.

    Advertisement

    சிக்கன் பிரியாணி ஒவ்வாமையா

    இப்படி கல்வி புரட்சியும், உணவு புரட்சியும் சேர்ந்தே வந்தது. அந்த வகையில் எனக்கு ஒரு ஆசை வந்தது. முதலமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பள்ளிகளில் வாரத்துக்கு ஒருமுறை சிக்கன் பிரியாணி போட வேண்டும் என சொன்னேன். அதில் நிதி பிரச்சனை, நிர்வாக பிரச்சனை உள்ளது. உணவு என்பது ஒரு உயிர் பொருள். இது வெறும் உணவு பொருள் இல்லை. இதை செயல்படுத்துவதற்கு இன்னும் நிறைய வேலை இருக்கிறது.

    முதலமைச்சர் பரிசீலனை செய்கிறார். அதிகாரிகளும் இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். அவர்களின் பரிசீலனைக்காக என்னுடைய கோரிக்கையை வைத்துள்ளேன். முன்னாள் எம்பி டிவிகேஎஸ் இளங்கோவன், பள்ளிகளில் சிக்கன் பிரியாணி போடக்கூடாது. சைவம் சாப்பிடுவோர் இதை எடுத்து சாப்பிடுவார்கள் என்கிறார். சிக்கன் பிரியாணி ஒவ்வாமை என்று சொல்லும் முதல் மனிதர் இளங்கோவன் தான்.

    Advertisement

    புரதச்சத்து அவசியம்

    சைவம் சாப்பிடும் குழந்தைகள் சைவம் சாப்பிடட்டும். அவர்களுக்கு சத்துணவு இருக்கிறது. புரதச்சத்து மிகவும் முக்கியம். சிக்கன் பிரியாணி சாப்பிட்டு ஒரு குழந்தை கெட்டுவிடுமா என்ன. சிக்கன் பிரியாணி சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. ஊட்டச்சத்து நிறைந்துள்ள சிக்கன் பிரியாணி சாப்பிட்டால் வலிமை பெற முடியும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு. தயவு செய்து இதில் அரசியலை கலக்க வேண்டாம். இதை அமல்படுத்த வழிமுறைகள் உள்ளன. உரிய ஆய்வு செய்து நல்ல முடிவை முதலமைச்சர் எடுப்பார்.

    உணவில் மட்டுமல்ல சீருடையிலும் மாற்றம் கொண்டு வர நினைத்துள்ளேன். குழந்தைகள் காலம் காலமாக ஒரே சீருடையை அணிகிறார்கள். மாறி வரும் காலத்திற்கேற்ப, நெசவாளர்களுக்கும் பயனளிக்கிற வகையில் மாற்றம் செய்ய நினைக்கிறோம். பட்ஜெட்டில் பல நல்ல அறிவிப்புகள் வெளியாகும். உறுதி செய்யப்படாத தகவல்களை பற்றி பேச முடியாது. ஒரு இடத்திற்கு அவசரமாக செல்லும் நீர்வளத்துறை அமைச்சரிடம் கேள்வி கேட்டால் எப்படி. பேசி பேசி மக்களை கெடத்துள்ளனர். இவர் பேசாமல் சத்தமில்லாமல் சாதிப்பார்" என்றார்.

    English Summary

    Minister Rajmohan said, DMK TKS Elangovan saying Not to provide Chicken Biriyani in schools. But protein is important for them.