ஈரோடு: ஈரோட்டை சேர்ந்த 17 வயது மாணவர் பிரணவ் இளங்கோ, அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற பிரவுன் பல்கலைக்கழகத்தில் படிக்க தேர்வாகியிருக்கிறார். இந்த படிப்புக்காக அவருக்கு ரூ.3.55 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஐவி லீக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான பிரவுன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பிற்காக ரூ.3.55 கோடி மதிப்பிலான முழு கல்வி உதவித்தொகையை வென்று பிரணவ் இளங்கோ சாதனை படைத்திருக்கிறார்.
ஈரோட்டை சேர்ந்த இவர், அங்குள்ள சி.எஸ்.அகாடமியில் பயின்று வந்தார். சிறுவயது முதல் கல்வியில் டாப் டக்கராக இருந்து வந்த இவர், கேம்பிரிட்ஜ் IGCSE கணித தேர்வில் உலக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்திருந்தார். தற்போது அமெரிக்காவின் ரோட் தீவில் அமைந்திருக்கும் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொது சுகாதாரம் மற்றும் பயன்பாட்டுக் கணிதம் ஆகிய துறைகளில் தனது இளங்கலை படிப்பை தொடர உள்ளார். பிரணவ் பெற்றிருக்கும் இந்த ரூ.3.55 கோடி கல்வி உதவித்தொகையானது அவரது 4 ஆண்டு கால படிப்பிற்கான கல்விக்கட்டணம், தங்குமிடம், உணவு மற்றும் இதர வாழ்க்கை செலவுகள் அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியதாகும். இவர் சாதாரண மாணவர் கிடையாது. 13 வயதில் டெக்ஸ்டெரிட்டி குளோபல் என்கிற அமைப்பின் வழிகாட்டுதல் திட்டத்தில் இணைந்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான தீவிர பயிற்சி பெற்றிருந்தார். கல்வியை தவிர சதுரங்கம் விளையாடுவது, புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுப்பது என சமூக பணிகளில் இவர் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தன்னுடைய குடும்பத்திலிருந்து, வெளிநாடு சென்று கல்வி பயிலும் முதல் நபர் நான் என்று பெருமையாக கூறும் பிரணவ், பல ஆண்டு கால உழைப்பு கிடைத்த பலன்தான் இந்த வாய்ப்பு என்று கூறியிருக்கிறார். இந்த மாணவனின் சாதனை, தமிழகத்தில் அனைத்து பெற்றோர்களுக்கும் ஊக்கமளித்திருக்கிறது. கல்வி மட்டும்தான் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்பதை பிரணவின் சாதனை விளக்கியிருக்கிறது என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.யார் இந்த பிரணவ் இளங்கோ?
கை கொடுத்த உதவித்தொகை