வேலுமணி கம்பேக்.. ஈரோட்டை அதிரவைத்த அணிவகுப்பு.. எடப்பாடி பிளான் சக்சஸா

  • ஈரோடு: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. திமுக ஆதரவில் ஆட்சியமைக்க எடப்பாடி முயற்சித்ததாக கூறி, வேலுமணி, சி.வி சண்முகம் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் தவெகவுக்கு ஆதரவளித்தனர். இதனால் அவர்களுக்குள் பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் வேலுமணியை சமாதானப்படுத்துவதற்காக தீரன் சின்னமலை நினைவு நாளில் அவருக்கு முக்கியத்துவம் வழங்கும் அறிவிப்பை எடப்பாடி வெளியிட்டார். அதை ஏற்று வேலுமணி தன்னுடைய ஆதரவாளர்கள் புடை சூழ, 50க்கும் மேற்பட்ட கார்களில் பிரம்மாண்ட அணிவகுப்பில் ஈரோடு சென்றார்.

    Advertisement

    சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியை விட்டு விலகி வருகிறார்கள். கோவை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் அவரை மாற்றிவிட்டு முன்னாள் அமைச்சர் செ.ம வேலுசாமியை மாவட்ட செயலாளராக்கினார் எடப்பாடி. கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளிலும் வேலுமணி புறக்கணிக்கப்பட்டார். அவர்களின் பழைய பதவிகளை பறித்து, டம்மியான பதவி வழங்கப்பட்டது.

    Advertisement

    எடப்பாடி வேலுமணி மோதல்

    சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் வேலுமணி, தங்கமணி கலந்து கொள்ளவில்லை. முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் போல வேலுமணியும் தவெகவில் இணையவுள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை அவர் அதிமுகவில் தான் இருக்கிறார். கட்சி கொடி, எடப்பாடியின் புகைப்படம் இல்லாமல் அவர் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதிமுகவில் இருந்து கொண்டே எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுப்பதை வேலுமணி திட்டமாக வைத்துள்ளார்.

    சமூகவலைதளங்களில் எடப்பாடி, வேலுமணி ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. வேலுமணியின் ஆதரவாளர்களின் பதவிகளையும் பறித்து, அந்த இடங்களில் தன்னுடைய ஆதரவாளர்களை எடப்பாடி நியமித்து வருகிறார். அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் வெளியேறி வரும் நிலையில், மறுபக்கம் வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து கொண்டே எடப்பாடிக்கு பாடம் கற்பிக்க முயற்சித்து வருகிறார்கள்.

    Advertisement

    சமாதான தூது

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு இன்று நினைவு நாள். இதையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிண்டியில் உள்ள சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில், துணைப்பொதுச் செயலாளர் வேலுமணி மரியாதை செலுத்துவார் என எடப்பாடி அறிவித்திருந்தார்.

    எடப்பாடி வழங்கிய பதவியை ஏற்காமல், கட்சி நடவடிக்கைகளில் இருந்து வேலுமணி விலகியிருந்ததால் எடப்பாடி அறிவிப்புபடி, வேலுமணி ஈரோடு செல்வாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் இன்று காலை வேலுமணி கோவையிலிருந்து தன்னுடைய ஆதரவாளர்கள் படை சூழ ஈரோடு கிளம்பினார். 50 க்கும் மேற்பட்ட வாகனங்களில் எஸ்.பி.வேலுமணி பிரம்மாண்ட அணிவகுப்புடன் சென்றார்.

    Advertisement

    மாஸ் அணிவகுப்பு

    தன்னுடைய ஆதரவாளர்கள், அதிமுக நிர்வாகிகளுடன் ஈரோடு மாவட்டம் ஓடாநிலைக்கு சென்று தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தினார். அவருக்கு ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் வரவேற்பளித்தனர். தன்னுடைய பவரை காண்பிப்பதற்காக வேலுமணி ஆதரவாளர்களுடன் சென்று மாஸ் காட்டியதாக அவரின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
    எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை ஏற்று ஓடாநிலைக்கு சென்றுள்ளதால், வேலுமணி அதிமுகவில் கம்பேக் கொடுத்து இனி கட்சி பணிகளில் ஈடுபடுவார் என இபிஎஸ் ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.

    English Summary

    Former ADMK Minister SP Velumani went Erode with his followers on Dheeran Chinnamalai memorial day. Edappadi Palanisamy Plan success.