கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி.. ஓசூர் அருகே டாடா நிறுவனத்தில் சோகம்!

  • கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே தனியார் நிறுவனத்தில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கியதில் மூன்று பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே வன்னியபுரம் பகுதியில் ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் டாடா எல்க்ட்ரானிக்ஸ் நிறுவனம் (மேரி கோல்ட் பிளாண்ட்) செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் வேலை செய்து வருகிறார்கள்.

    Advertisement

    இந்த நிறுவனத்தின் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில், 'நானோ-பில்ட்ரேஷன் பீட் டேங்க்' என்ற தொட்டி உள்ளது. இதில் பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணி இன்று மாலை நடைபெற்றது.

    இதற்காக நால்கோ என்ற தனியார் நிறுவனம் மூலம் பெல்ராம்பட்டி கிராமத்தை சேர்ந்த சாரதிகுமார் (25), தின்னூரை சேர்ந்த அக்மல் (28), ஜம்பூத் கிராமத்தை சேர்ந்த காவேரி (31) ஆகிய மூவரும் ஒப்பந்த தொழிலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

    அவர்கள் மாலை 5 மணி அளவில் கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில் மூவரும் தொட்டியில் மயங்கி விழுந்துள்ளனர்.

    Advertisement

    தொட்டியில் இருந்து அவர்களை மீட்ட டாடா நிறுவன நிறுவன ஊழியர்கள், ஆம்புலன்ஸ் மூலம் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    உயிரிழந்த மூன்று பேரின் உடல்களும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ராயக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து தனியார் நிறுவனத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

    English Summary

    Three people have died after being overcome by toxic gas while cleaning a septic tank at a private company near Hosur—an incident that has caused shock.