11:21 மணி முதல் 11:27 மணிக்குள்! 6 நிமிட கேப்பில் தெலுங்கானா குடும்பமே காலி! கேமராவில் அந்த காட்சி?

  • ஹைதராபாத்: காதல் என்ற பெயரில் டார்ச்சர் தந்துள்ளார் ஒரு தெலுங்கானா இளைஞர்.. இதனால் அவரது தொல்லை தாங்காமல் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் தந்துள்ளார்கள்.. இப்படி புகார் கொடுத்த ஒரே காரணத்திற்காக, மொத்த பேரையுமே வெட்டி சாய்த்துவிட்டார் அந்த காமுகன்.. அதுவும் ஒரே இரவில், 6 பேரையும் மனசாட்சியே இல்லாமல் கொன்றுவிட்டார்.. இந்த அதிர்ச்சி சம்பவத்தின் பல்வேறு தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி, பொதுமக்களை நிலைகுலைய வைத்து வருகிறது.

    Advertisement

    தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த ராய்வலகூடா கிராமத்தில் வசிப்பவர் 28 வயதான ராஜ் குமார்... இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி சிறுமியை ஒருதலையாக காதலித்துள்ளார்.. அத்துடன் அந்த சிறுமியின் பின்னாடியே சென்று, தன்னை காதலிக்குமாறும் வற்புறுத்தி, தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    Advertisement

    நாளுக்கு நாள் ராஜ்குமாரின் தொல்லை அதிகமானதால், பொறுமையிழந்த சிறுமி, தன்னுடைய பெற்றோரிடம் இந்த விஷயத்தை சொல்லி உள்ளார்.. இதைக்கேட்டு ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர், கடந்த மே மாதம் ஷாபாத் போலீசில் புகார் அளித்தனர். இதையடுதது, போலீசாரும் ராஜ்குமாரை போக்சோவில் கைது செய்தனர்..

    தெலுங்கானாவை உறைய வைத்த 10.45 மணி

    ஆனால், கடந்த ஜூன் ராஜ்குமார் ஜாமீனில் வெளியே வந்தார்.. தன்னை ஜெயிலில் தள்ளிய சிறுமியின் குடும்பத்தை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்தார்.. இதற்காக நேற்றிரவு இரவு சுமார் 10.45 மணிக்கு, ராஜ்குமார் தனது கிராமத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஷாபாத் நகருக்குத் காரில் கிளம்பி சென்றார். கையோடு கத்தியையும் கொண்டு சென்றார்.

    Advertisement

    சிறுமியின் வீட்டு கதவையும் தட்டினார்.. கதவைத் திறந்த சிறுமியின் 42 வயது அம்மாவை கத்தியால் குத்தினார்.. அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த சிறுமியின் 60 வயது பாட்டியையும் கத்தியால் குத்தினார். சிறுமியின் 20 வயது மாற்றுத்திறனாளி சகோதரியை மட்டும் எதுவும் செய்யாமல் விட்டுவிட்டு, 16 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக தனது காரில் கடத்தி சென்றான்.

    காரில் கடத்தப்பட்ட சிறுமியை, வழியிலிருந்த ஒரு விவசாய நிலத்திற்கு இழுத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.. இவளால்தானே நாம் ஜெயிலுக்குப் போனோம் என்ற ஆத்திரத்தில், அங்கேயே கத்தியால் குத்தி கொன்று, அருகிலிருந்த ஏரிக்கரையில் சடலத்தை வீசி எறிந்தார்.

    Advertisement

    வெறும் 6 நிமிட இடைவெளி

    அப்போதும் வெறி அடங்காத ராஜ் குமார், இரவு 11.21 மணிக்கு தனது வீட்டிற்குள் நுழைந்தான்.. படுக்கையறையில் தூங்கி கொண்டிருந்த 31 வயது மனைவி, 4 வயது மகன், 18 மாதக் பச்சிளம் குழந்தை என அனைவரையுமே வெட்டி சாய்த்தார்.. வெறும் ஆறு நிமிட இடைவெளியில் அதாவது இரவு 11.27 மணிக்குள் தன்னுடைய மனைவி, 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொன்றார்.

    கொலைகளை செய்து முடித்ததுமே, ராஜ்குமார் தன்னுடைய அப்பாவுக்கு போனை போட்டு, "நான் 2 குடும்பங்களையும் முடித்துவிட்டேன், நானும் சாகப் போகிறேன்" என்று கூறியுள்ளார்.. இதைக்கேட்டு பதறிப்போன தந்தை போலீசுக்குத் தகவல் கொடுத்தார்.

    Advertisement

    சிசிடிவியில் சிக்கிய அந்த காட்சி

    சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தங்களது விசாரணையை துவங்கினார்கள்.. ஷாபாத் நகரில் உள்ள வீட்டின் அருகிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சிறுமியை ராஜ் குமார் வலுக்கட்டாயமாகக் காரில் கடத்திச் செல்லும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியிருந்தது.. இதனைத் தொடர்ந்து, மோப்ப நாய்கள், தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, விவசாய நிலம் மற்றும் வீடுகளில் இருந்து ரத்தக்கறை படிந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

    தப்பியோடிய கொலையாளி ராஜ்குமாரைப் பிடிக்க, பல மாவட்டங்களில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. 2 கொலைகள் நடந்த கிராமங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது....!!!

    English Summary

    A gruesome incident in Telangana's Ranga Reddy district has shocked the region. A man released on bail in a POCSO case brutally murdered six individuals, including a schoolgirl, due to rage over unrequited love. The tragedy has sparked widespread outrage, while police have launched a massive investigation into the heinous crime.