நெல்லூரில் சிவனை சுற்றி வந்த 3 நாகப்பாம்புகள்.. அடுத்த நொடி நம்ப முடியாத ஆச்சரியம்! பக்தர்கள் பரவசம்

  • ஹைதராபாத்: ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ஒரு சிவன் கோயிலில் அதிகாலையில் நடந்த காட்சி, அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.. கண்ணால் காண்பது கனவா? நனவா? என்று திக்குமுக்காடி போயிருக்கிறார்கள்.. ஒரே நேரத்தில் 3 நாகப்பாம்புகள் சிவலிங்கத்தை சுற்றி வலம் வந்ததுடன், அங்கேயே படமெடுத்தும் நின்றுள்ளன.. இதை கேள்விப்பட்டதுமே கோயிலில் பக்தர்கள் கூட்டம் குபுகுபுவென திரண்டுவிட்டது.. என்ன நடந்தது நெல்லூரில்?

    Advertisement

    நெல்லூர் மாவட்டம் மனுபோலு மண்டலம், சேர்லோபள்ளி ரயில்வே கேட் அருகே ஸ்ரீ காசி விஸ்வநாத சுவாமி கோயில் உள்ளது... இது சுற்றுவட்டாரத்தில் புகழ்பெற்ற கோயிலாகும்..

    Advertisement

    இன்று அதிகாலையில் கோயிலுக்குள் நுழைந்த 3 நாகப்பாம்புகள், நேராக சிவலிங்கம் இருக்கும் இடத்துக்கு வந்துள்ளன... பிறகு சிவலிங்கத்தைச் சுற்றி பிரகாரம் செய்வது போல வலம் வந்துள்ளன. சிறிது நேரம் சிவலிங்கம் அருகிலேயே படமெடுத்து நின்ற 3 பாம்புகளும், அதன்பிறகு கோயிலுக்குள் இருந்த புற்றுக்குள் சென்றுவிட்டன.

    நெல்லூர் சிவன் கோயில்

    இந்தக் காட்சியை பார்த்ததுமே சில பக்தர்கள் வெலவெலத்து போனார்கள்.. சிவலிங்கம் அருகிலேயே 3 பாம்புகளும் படமெடுத்தபடி நின்றதால், பூஜை செய்ய வந்த அத்தனை பேரும் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். பிறகு தங்களது செல்போனில் இதை வீடியோவாகவும் எடுத்து விட்டனர்.

    Advertisement

    இந்த வீடியோ பரவியதும், 3 நாகப்பாம்புகள் கோயிலுக்குள் வந்த தகவல் வேகமாகப் பரவியது... இதையடுத்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு திரண்டு வந்தனர். பாம்புகள் அங்கிருந்து சென்ற சில நிமிடங்களுக்கு பிறகுதான் பக்தர்கள் சிவலிங்கத்துக்கு பூஜை செய்ய முடிந்ததாம்.

    3 நாகப்பாம்புகள்

    இந்தக் கோயிலில் பாம்புகள் வருவது இப்போது முதல்முறை கிடையாது. கடந்த 2025-ம் ஆண்டு மே 17-ம் தேதி, அபிஷேகம் நடந்த பிறகு ஒரு நாகப்பாம்பு சிவலிங்கத்தின் மீது படமெடுத்து நின்றது. அந்த காட்சியும் அப்போது வைரலானது. அதே ஆண்டு அக்டோபரில் நாகுல சவிதி நாளிலும் 2 நாகப்பாம்புகள் சிவலிங்கம் அருகே வந்து படமெடுத்து நின்றன. அவை சிறிது நேரத்துக்குப் பிறகு கோயிலின் பின்புறம் இருந்த புற்றுக்குள் சென்றதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

    Advertisement

    அதற்குப் பிறகு 2025 நவம்பர் மாதம் கார்த்திகை காலத்திலும் இதேபோல ஒரு சம்பவம் நடந்தது. பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து கொண்டிருந்த நேரத்தில் ஒரு நாகப்பாம்பு சிவலிங்கம் அருகே வந்து படமெடுத்து நின்றது. அப்போதும் பாம்பு சிறிது நேரம் அங்கேயே இருந்துவிட்டு, அருகிலிருந்த புற்றுக்குள் சென்று விட்டதாம்.. கடந்த ஆண்டு மட்டும் இதே கோயிலில் நாகப்பாம்புகள் தொடர்பான சம்பவங்கள் பலமுறை நடந்துள்ளன.

    சிவலிங்கம் - ஆச்சரியம்

    பாம்புகள் அடிக்கடி கோயிலுக்குள் வருவதை கவனித்த கோயில் நிர்வாகத்தினர், வளாகத்தில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியிருக்கிறார்கள்.. இந்த முறை அந்த கேமராவில் 3 பாம்புகளும் சிவலிங்கம் முன்பு இருந்த காட்சியும் பதிவாகியுள்ளது.

    Advertisement

    சிவலிங்கத்துக்கு அருகிலேயே புற்று இருப்பதால், பாம்புகள் அந்தப் பகுதியில் அடிக்கடி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரே நேரத்தில் 3 நாகப்பாம்புகள் சிவலிங்கத்தைச் சுற்றி வலம் வந்ததை பார்த்த பக்தர்கள், இதை சாதாரண நிகழ்வாக பார்க்காமல் சிவனின் அருள், நாகதேவதையின் அனுகிரகம் என்று நம்புகிறார்கள்.. இந்த காட்சி தொடர்பான வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் வேகமாகப் பரவி வருகின்றன...!!

    English Summary

    3 Cobras Spotted at Nellore Temple.. What Happened After They Circled the Shiva Lingam? Devotees Amazed