ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் வேட்பாளரிடம் தோல்வியடைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ரெட்டி பிரசாத், தேர்தலில் வாக்களிப்பதற்காக தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்காவிட்டால் வாக்காளர்களின் வீடு முன்பு தர்ணா போராட்டம் நடத்துவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆக மொத்தம் இந்த உள்ளாட்சி தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது அம்பலமாகியுள்ளதாக ஆளும் கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள்.
ஆந்திராவில் கடந்த நவம்பர் 1ஆம் தேதி மாநகராட்சி, நகராட்சி, நகர பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 3 ஆம் தேதி எண்ணப்பட்டன. அதில் மாநகராட்சி மேயர் பதவிக்கான 13 இடங்கள், நகராட்சி தலைவர் பதவிக்கான 87 இடங்கள், ஆக மொத்தம் 100 இடங்களில் 93 இடங்களை என்டிஏ கூட்டணி கைப்பற்றியுள்ளது. சித்தூர் மாவட்டத்தில் உள்ள பலமனேரு மாநகராட்சியில் மொத்தம் உள்ள 36 வார்டுகளில் தெலுங்கு தேசம் கட்சி 26 இடங்களிலும், ஒய்எஸ்ஆர் 8 இடங்களிலும் ஜனசேனா 2 இடங்களிலும் வென்றது. இந்த மாநகராட்சியின் 32 ஆவது வார்டில் ஜனசேனாவை சேர்ந்த பூலா சைதன்யா மோகன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கே.ரெட்டி பிரசாத் போட்டி போட்டார். இதில் பூலா சைதன்யாவிடம் ரெட்டி பிரசாத் தோல்வியடைந்தார். இதனால் கடும் கோபமடைந்த அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் "அதிக வட்டிக்கு ரூ 10 லட்சம் கடன் வாங்கி ஓட்டுக்கு தலா ரூ 1000 என கொடுத்தேன். ஆனால் பணத்தை வாங்கிக் கொண்டு 400 வாக்காளர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை என்பது தேர்தல் முடிவுகளில் தெரிகிறது. பணத்தை வாங்கிக் கொண்டு எனக்கு வாக்களிக்காதவர்கள் உடனே பணத்தை திருப்பி தர வேண்டும். இல்லாவிட்டால் அவர்களது வீட்டு வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்துவேன். இந்த தேர்தலில் எனக்கே வாக்களிப்பதாக சில வாக்காளர்கள், மாரியம்மன் மீது சத்தியம் செய்து பணத்தை பெற்றனர். ஆனால் எனக்கு வாக்களிக்காமல் என்னை எதிர்த்து போட்டியிட்டவர்களுக்கு வாக்களித்துவிட்டனர். எனவே பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டு போடாதவர்கள் என் பணத்தை மாரியம்மன் கோயிலில் வந்து திருப்பி கொடுக்க வேண்டும். இந்த வார்டு மக்களுக்காக குடிநீர், சாலை, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க உறுதியளித்திருந்தேன். ஆனால் என்னை சூழ்ச்சியால் தோற்கடித்துவிட்டார்கள். எது எப்படியோ வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த வார்டுக்கு நல்லது செய்ங்க என புலம்பி தள்ளிவிட்டார். உள்ளாட்சி தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பணம் கொடுத்ததாக ஆதாரத்துடன் தெலுங்கு தேசம் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க முடிவு செய்தது. இந்த நிலையில் ரெட்டி பிரசாத்தின் பேச்சால் கொந்தளித்த ஜெகன் மோகன் ரெட்டி, கட்சி நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக அவரை கட்சியில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளார்.என்டிஏ கூட்டணி அமோகம்
பலமனேரு மாநகராட்சி
ஒய்எஸ்ஆர் வேட்பளர் தோல்வி
கோபமடைந்த வேட்பாளர்
வாக்களிக்காதவர்கள்
பணத்தை திருப்பி தாங்க
நல்ல திட்டங்களை வைத்திருந்தேனே!
புகார் அளிக்க முடிவு