சட்ட மாணவர்கள் பதிவை நிறுத்த சொல்லிய சர்ச்சை.. கடும் எதிர்ப்பால் பணிந்த பார் கவுன்சில் தலைவர்!

  • ஹைதராபாத்: தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள நல்சார் சட்ட பல்கலைக்கழகஹ்திற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்ததால், மாணவர்களின் பதிவை நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்டு சர்ச்சையில் சிக்கிய பார் கவுன்சில் தலைவர், மனன் குமார் மிஸ்ரா தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். முன்னதாக சுற்றறிக்கையை சில மணி நேரங்களில் திரும்ப பெற்ற நிலையில், தற்போது மன்னிப்பும் கேட்டுள்ளார்.

    Advertisement

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேலையில்லாத இளைஞர்க்ளை பற்றி கூறிய வார்த்தையை வைத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற இயக்கமே தோன்றியது. சமூக வலைத்தளங்களில் வேடிகையாக தொடங்கப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற பக்கத்திற்கு இளைஞர்கள் பெரும் ஆதரவு அளிக்கவே, இயக்கமாக மாறியது.

    Advertisement

    நீட் முறைகேடுகளை கண்டித்தும், தர்மேந்திர பிர்தான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தால் பணிந்த மத்திய அரசு தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வைத்தது. இதற்கிடையே, 2026 ஆம் ஆண்டு சட்ட படிப்பை முடித்து வெளியேறும் நால்சால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, பட்டமளிக்கும் விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அழைக்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்து இருந்தது.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கோபம்

    ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 450 மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியிருந்தனர். அந்த கடிதத்தில், தலைமை நீதிபதி சூர்ய காந்தை அழைப்பதில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறியிருந்தனர். ஜந்தர் மந்தரில் மத்திய அரசை கண்டித்து நடத்திய போராட்டத்தின் போது, மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து வழக்கறிஞர்கள் வீடியோ ஆதாரத்தை சமர்ப்பிக்க முயன்றபோது, வீடியோக்களை பார்க்க ஆர்வம் இல்லை என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறியிருந்தார்.

    Advertisement

    இந்த விவகாரத்தையும் மாணவர்கள் தங்கள் கடிதங்களில் சுட்டிக்காட்டியிருந்தனர். இதனால், அப்செட் ஆன பார் கவுன்சில், 2026-ல் நல்சார் பல்கலையிலிருந்து பட்டம் பெறும் யாரையும், மாநில பார் கவுன்சில்கள் பதிவு செய்யக்கூடாது என்று, இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, மாநில பார் கவுன்சில்களுக்கு உத்தரவிட்டார். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இதற்கிடையே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் இவ்விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் போது தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

    மன்னிப்பு கேட்டார்

    மாணவர்களுக்கும் எனக்கும் இடையேயான விவகாரம். இதில் பார் கவுன்சில் தலையிட என்ன உரிமை உள்ளது? என்று கேட்டு இருந்தார். பார் கவுன்சில் தலைவர் அறிவிப்புக்கு நாலாபக்கமும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வந்த நிலையில், நேற்று பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா மன்னிப்பு கேட்டார்.

    Advertisement

    பாஜக எம்பியாகவும் உள்ள இவர், இது தொடர்பாக கூறுகையில், "என் வார்த்தைகள் அல்லது கடிதங்கள், நமது சட்ட மாணவர்களின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், வருத்தம் தெரிவிக்கிறேன். சுதந்திரமான சிந்தனை கண்டிப்பாக மதிக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    English Summary

    Bar Council Chairman Manan Kumar Mishra has apologized for the controversy he sparked by ordering the suspension of student registrations after they opposed the Chief Justice of India's visit to NALSAR University of Law in Hyderabad, Telangana. He had previously withdrawn the circular within a few hours and has now issued an apology.