நாகப்பாம்பை வாயால் கடித்துக் கொன்ற பாக்ஸர் நாய்.. ஆந்திராவில் அடுத்து நடந்தது என்ன

  • ஹைதராபாத்: ஆந்திராவில் தன் உயிரைப் பணையம் வைத்து நாகப் பாம்புடன் சண்டையிட்டு உரிமையாளர் குடும்பத்தை காப்பாற்றியிருக்கிறது அவர்களது செல்ல பாக்ஸர் நாய்.. நச்சு பாம்பு தந்த அச்சுறுத்தலால் நடந்த இந்த சம்பவம் ஆந்திர மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.. இதேபோல தென்காசியிலும் இன்று ஒரு நாம்பு பீதியை தந்துள்ளது. அவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

    Advertisement

    தென்காசி மாவட்டம் குற்றாலம் அடுத்துள்ள மேலகரம் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது வீட்டின் சமையலறைக்குள் இன்று காலை 5 அடி நீளமுள்ள ஆபத்தான நாகப் பாம்பு ஒன்று புகுந்து விட்டது..

    Advertisement

    தென்காசி 5 அடி நாகப்பாம்பு

    கிச்சன் பொருட்களுக்கு இடையே மறைந்திருந்த அந்த நாகப் பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், வீட்டை விட்டு வெளியேறி உடனடியாக குற்றாலம் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறை போலீசார், அந்த பாம்பை லாவகமாகப் பிடித்தனர். பிறகு மீட்கப்பட்ட நாகப் பாம்பு, செங்கோட்டை அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.

    இதேபோல, ஆந்திர மாநிலத்திலும் நாகப்பாம்பு ஒன்று பீதியை கிளப்பிவிட்டது.. காக்கிநாடா மாவட்டம் பித்தாபுரம் தொகுதியில் உள்ளது கோத்தபள்ளி என்ற கிராமம்.. இங்கு ஸ்ரீனிவாஸ் என்பவர் "பாக்ஸர்" இன நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இவர் வீட்டுக்கு அருகில், காலியிடத்திலிருந்து பெரிய நாகப்பாம்பு ஒன்று திடீரென ஸ்ரீனிவாஸின் வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளது..

    Advertisement

    பாக்ஸர் நாய்

    பாம்பு சீறிக்கொண்டு கடிக்க முயன்றதை கண்டு குடும்பத்தினர் அலறி கதறியிருக்கிறார்.. இந்த சத்தத்தைக் கேட்ட அவர்களது பாக்ஸர் செல்ல நாய், எங்கிருந்தோ தாவி ஓடிவந்தது.. வாசலிலேயே பாம்பை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியது.

    இதனால் நாயை சீண்ட பாம்பு முயன்றது.. அப்போது பாம்பு படமெடுத்து, நாயின் முகவாயில் கடித்து விட்டது.. ஆனாலும், நச்சுப்பாம்பு கடித்த வலியையும் பொருட்படுத்தாத அந்த நாய், வாயாலேயே பாம்பை பலமாக கடித்து தரையில் அடித்துக் கொன்றது.

    பாம்பை கடித்து துப்பி ..

    பாம்பு இறந்த சில நிமிடங்களிலேயே நாய்க்கு விஷம் உடம்பெல்லாம் ஏறிவிட்டது. இதில் நாய் சோர்வடைந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர் ஸ்ரீனிவாசும் அவரது சகோதரர் சுரேஷும் உடனடியாக நாயை காக்கிநாடாவில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    தங்கள் உயிரைக் காப்பாற்றத் தன் உயிரையே பணையம் வைத்த செல்ல நாய் விரைவில் குணமடைய குடும்பத்தினரும், உள்ளூர் மக்களும் பிரார்த்தனை செய்து பாராட்டி வருகிறார்களாம்...!!

    English Summary

    Boxer Dog Killed a Cobra With Its Mouth.. What Happened Next at Owner's Home in Andhra pradesh?