ஹைதராபாத்: தெலங்கானாவில் 25 வயது நிரம்பிய சாப்ட்வேர் பெண் இன்ஜினியர் இரவில் ஆடைகள் ஏதுமின்றி ஓடிச்சென்று கோவில் குளத்தில் விழுந்தார். தண்ணீரில் மூழ்கி பெண் இன்ஜினியர் இறந்த நிலையில் அதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆந்திர மாநிலம் விழிநகரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தேஜஸ்வினி (வயது 25). சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சமீபத்தில் அவர் பணியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தான் அதிகாலையில் தெலங்கானா மாநிலம் மேடிபள்ளி டவுனில் உள்ள கோவில் குளத்தில் தேஜஸ்வினியின் உடல் மிதந்தது. அவரது உடலில் ஆடைகள் எதுவும் இல்லை. நிர்வாணமாக அவர் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் மேடிபள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேஜஸ்வினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்டமாக போலீசார் கோவிலை சுற்றிய இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது திடுக்கிட வைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அதாவது தேஜஸ்வினி உடலில் ஆடைகள் ஏதுமின்றி நிர்வாணமாக இரவில் கோவில் குளத்தை நோக்கி ஓடிவந்து விழுந்தது தெரியவந்தது.இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகின. இதுபற்றி மேடிபள்ளி போலீசார் கூறுகையில், ''தேஜஸ்வினி பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் அவர் தனது பணியை ராஜினாமா செய்தார். கடந்த 6 மாதமாக அவர் பணியின்றி இருந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக தேஜஸ்வினி தனது தாயுடன் பீரடிகுடா பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினர். கடந்த வெள்ளிக்கிழமை இரவில் தேஜஸ்வினியும், அவரது தாயும் சேர்ந்து இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கினர். நள்ளிரவு 2.30 மணிக்கு திடீரென்று தேஜஸ்வினி கண்விழித்தார். தனது தாயை அறையில் வைத்து பூட்டிவிட்டு வெளியேறி சாலைகளில் நடந்து சென்றுள்ளார். 2.35 மணிக்கு அவர் ஆடைகளின்றி நிர்வாணமாக நடந்து சென்றார். அப்போது கையில் சேலையை வைத்திருந்தார். 2.45 மணிக்கு பீரப்பா கோவிலில் தனது கையில் சிலையை வைத்து வேண்டினார். அதன்பிறகு 3 மணிக்கு கோவில் குளத்தில் விழுந்து இறந்துள்ளார். மறுநாள் காலையில் தேஜஸ்வினியின் தாய் கண்விழித்து தனது மகளைன தேடினார். கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் அக்கம் பக்கத்தினரிடம் உதவி கோரினார். பக்கத்து வீட்டுக்காரர்கள் கதவை திறந்த நிலையில் அனைவரும் தேடினர். அப்போது கோவில் குளத்தில் தேஜஸ்வினியின் உடல் மிதந்தது. சமீபகாலமாக தேஜஸ்வினி மனஉளைச்சலில் இருந்துள்ளார். மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். குறிப்பிட்ட விஷயத்தை நினைத்து பயந்து கொண்டே இருந்துள்ளார். இது தற்கொலையாக தான் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தேஜஸ்வினி தனது வீட்டில் இருந்து வெளியேறி கோவில் குளத்தில் விழுந்தது வரை அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதில் மற்றவர்கள் சம்பந்தப்பட்டதாகதெரியவில்லை. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கையாக காத்திருக்கிறோம்'' என்று கூறினர். இதன்மூலம் தேஜஸ்வினி மனஉளைச்சலில் கோவில் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.