ஜூஸ் கசக்குது..ங்க.. வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிய மனைவி.. அமெரிக்காவில் இந்திய ஐடி கணவர் சிக்கியது எப்படி

  • ஹைதராபாத்: தெலங்கானா இளைஞர் ஒருவர் ஐடி படித்திருக்கிறார். அமெரிக்காவிலும் வேலை பார்த்து வருகிறார்.. மெத்த படித்து என்ன பிரயோஜனம்? செய்திருக்கும் காரியத்தை பாருங்க.. கட்டின மனைவி என்றும் பாராமல், வரப்போகும் விளைவுகளை பற்றியும் யோசிக்காமல், கொடூரமான ஒரு காரியத்தை செய்துள்ளார்.. இந்த செய்திதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.

    Advertisement

    தெலங்கானாவைச் சேர்ந்த 30 வயது இளைஞர் அவினாஷ் நர்னே.. இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள பெல்லெவியூ நகரில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.

    Advertisement

    கல்யாணத்துக்கு வந்த கள்ளக்காதலி

    இவருக்கும் 27 வயதான ராஜிதா சப்பாரெனி என்பவருக்கும் கடந்த வருடம் கல்யாணம் நடந்தது. ஆனால், திருமணத்திற்கு முன்பே இந்தியாவில் உள்ள ஒரு பெண்ணுடன் அவினாஷ் ரகசியத் தொடர்பில் இருந்துள்ளார்.. இந்த பெண்ணுடன் திருமணத்துக்கு பிறகும் பழகி வந்துள்ளார்.. அந்தப் பெண் இவர்களது கல்யாணத்துக்கும் வந்து சென்றுள்ளார்.

    கடந்த அக்டோபர் மாதம், அவினாஷ் திடீரென போலீசாருக்கு எமர்ஜென்சி என்று போன் செய்தார்.. தன்னுடைய மனைவி, பாத்ரூமுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டதாகவும், கூப்பிட்டும் குரல் கொடுக்கவில்லை என்றும் பதறியபடி சொன்னார்..

    இதைக்கேட்ட போலீசாரும், உடனே விரைந்து வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது ராஜிதா சடலமாக கிடந்தார். இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.. அப்போதுதான், ராஜிதா கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சுத்திணறி கொலை செய்யப்பட்டது ரிப்போர்ட்டில் உறுதியானது.

    Advertisement

    வசமாக சிக்கிய அவினாஷ்

    இதையடுத்து, அவினாஷிடம் தங்கள் விசாரணையை போலீசார் நடத்தினார். ஆனால், எந்த பதற்றமும் இல்லாமல் பலவிதமான கதைகளை சொல்லி, போலீசாரை நம்ப வைக்க முயன்றார் அவினாஷ்..

    குறிப்பாக, சம்பவத்தன்று தான் வெளியே சென்றுவிட்டு 40 நிமிடங்கள் கழித்து வீட்டுக்கு வந்ததாக சொன்னார்.. ஆனால், வீட்டின் டிஜிட்டல் பாதுகாப்பு பூட்டை போலீசார் ஆய்வு செய்தபோது, அவினாஷ் வெளியே சென்ற நேரத்தில் வேறு யாரும் வீட்டிற்குள் வரவில்லை என்பது தெரிந்தது. அப்போதுதான், அவினாஷ் இந்த குற்றத்தை செய்தார் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

    கடைசி நாளிலும் கள்ளக்காதலிக்கு போன்

    Advertisement

    அதுமட்டமல்ல, ராஜிதா இறப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்பு கணவருக்கு நிறைய மெசேஜ்களை அனுப்பியிருக்கிறார்.. அதையும் போலீசார் மீட்டுள்ளனர்.. அதில், அவினாஷ் தயாரித்து கொடுக்கும் ஸ்மூத்தி மற்றும் ஜூஸ்கள் தித்திப்பாக இல்லாமல், கசப்பாக இருப்பதாக வாட்ஸ்அப்பிலேயே புகார் செய்துள்ளார். கடைசியாக இறந்த நாளிலும்கூட, கசப்பான ஸ்மூத்தியையை குடிக்க தந்தாராம்.

    இதை பற்றி போலீசார் அவினாஷிடம் கேட்டதற்கு, தன் மனைவி இருமல் மருந்து குடித்து மயங்கி விழுந்திருக்கலாம் என அவினாஷ் கூறியிருக்கிறார்.. இதுவும் போலீசாருக்கு சந்தேகத்தை உறுதிப்படுததியது.

    மனைவியின் மரண போட்டோ

    பிறகு அவினாஷின் செல்போனை சோதனை செய்துள்ளனர்.. அப்போது ராஜிதா பாத்ரூமில் பூட்டிக்கொண்டதாக சொல்லப்பட்ட நேரத்தில், இந்தியாவில் உள்ள தன் காதலிக்கு 4 முறை போன் செய்துள்ளார். ராஜிதா இறந்த மறுநாள், மனைவியின் சடலத்தை போட்டோ பிடித்துக் காதலிக்கும் அனுப்பி வைத்துள்ளார்.. இதுகுறித்தெல்லாம் போலீசார் கேட்டபிறகுதான், அவினாஷ் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

    Advertisement

    ஆனால், இவ்வளவு விவரங்களையும் சேரிக்க பெல்லெவியூ போலீசாருக்கு 8 மாதங்கள் ஆயிற்றாம்.. இதையடுத்து அவினாஷ் கைதானார்.. ஆனால் அவருக்கு 5 மில்லியன் டாலர் அதாவது 48 கோடி ரூபாய் பிணைத்தொகை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கச் சட்டப்படி இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவினாஷூக்கு ஆயுள் தண்டனை கன்பார்ம் என்கிறார்கள்..!!

    FAQ's

    அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தெலங்கானாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் யார்?

    தெலங்கானாவைச் சேர்ந்த 30 வயதான அவினாஷ் நர்னே வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள பெல்லெவியூ நகரில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வரும் நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அவினாஷின் மனைவி ராஜிதா சப்பாரெனி எவ்வாறு உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கை கூறுகிறது?

    ராஜிதா கழுத்து நெரிக்கப்பட்டு, மூச்சுத்திணறல் காரணமாகவே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று மருத்துவ அறிக்கை உறுதி செய்ததாக கூறப்பட்டுள்ளது.

    சம்பவ தினத்தில் அவினாஷ் போலீசாரிடம் என்ன தகவல் தெரிவித்தார்?

    அவினாஷ், சம்பவத்தன்று வெளியே சென்றுவிட்டு 40 நிமிடங்கள் கழித்து தான் வீட்டிற்கு வந்ததாக தெரிவித்தார். ஆனால், டிஜிட்டல் பாதுகாப்பு பூட்டின் ஆய்வில் வெளியே இருந்த நேரத்தில் யாரும் வீட்டிற்குள் நுழையவில்லை என்று போலீசார் கண்டறிந்தனர்.

    ராஜிதா இறப்பதற்கு முன்பும் இறந்த நாளும் தொடர்புடைய தகவல்கள் என்ன?

    ராஜிதா, அவினாஷிற்கு அனுப்பிய வாட்ஸ்அப் செய்திகளில் ஸ்மூத்தி மற்றும் ஜூஸ்கள் கசப்பாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவள் இறந்த அன்று கூட கசப்பான ஸ்மூத்தியையே குடிக்கக் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவினாஷ் மீது எவ்வளவு பிணைத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது மற்றும் சாத்தியமான தண்டனை என்ன?

    அவினாஷிற்கு 5 மில்லியன் டாலர் (சுமார் 42 கோடி ரூபாய்) பிணைத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கச் சட்டத்தின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    English Summary

    A shocking case of domestic violence from Washington, US, where an Indian software engineer, Avinash Narne, has been arrested for murdering his wife, Rajitha Sappareni. The accused attempted to mislead police with false stories, but forensic evidence and a digital trail ultimately exposed his guilt, leading to severe legal consequences and potential life imprisonment.