ஹைதராபாத்: 18 வயது நிரம்பிய மனைவியை வீட்டிற்குள் அடைத்து வைத்துவிட்டு அவருடன் உல்லாசமாக இருக்க 3 நண்பர்களை இளைஞர் ஒருவர் அனுப்பி வைத்ததும், அவரது நண்பர்கள் 3 பேரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தது தொடர்பான திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
மியான்மரை சேர்ந்தவர் முகமது பயாஸ். இவர் வங்கதேசத்தின் காக்ஸ் பஜாரில் தங்கி வேலை செய்து வந்தார். அப்போது 18 வயது நிரம்பிய மியான்மரை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் மியான்மரை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த பழக்கம் நாளைடைவில் காதலாக மலர்ந்தது.
வீட்டுக்கு தெரியாமல் இருவரும் காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில் தான் முகமது பயாஸ் தனது காதலியிடம், ''இந்தியாவின் ஹைதராபாத்தில் நண்பர்கள் உள்ளனர். அங்கு சென்று திருமணம் செய்து கொள்ளலாம்'' என்று கூறினார். இதை நம்பிய அந்த பெண் தனது வீட்டில் உள்ளவர்களிடம் எந்த தகவலும் சொல்லாமல் முகமது பயாஸ் உடன் ஹைதரபாத் வந்தார். ஹைதராபாத் வந்த சில நாட்களில் முகமது பயாஸ், அந்த இளம்பெண்ணை திருமணம் செய்தார். இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். சில மாதங்களுக்கு பிறகு முகமது பயாஸ் தனது மனைவியை வீட்டிற்கள் வைத்து வெளியே பூட்டிவிட்டு செல்வதும், அதன்பிறகு அவருடன் உல்லாசம் அனுபவிக்க 3 நண்பர்களை அனுப்பி வைப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. நண்பர்களான மியான்மரை சேர்ந்த அகமதுமுஜீப், நூர் கமல், ஜியா உர் ரஹ்மான் ஆகியோரை அனுப்பி உள்ளார். இவர்கள் 3 பேரும் அந்த 18 வயது பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி 2சம்பவம் குறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். இதனால் அந்த பெண் தனது உயிருக்கு பயந்து யாரிடமும் சம்பவம் பற்றி தெரிவிக்கவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட முகமது பயாஸ், தனது மனைவியை நண்பர்கள் 3 பேருக்கும் தாரைவார்த்துள்ளார். மனைவி எவ்வளவு சொல்லியும் முகமது பயாஸ் இந்த செயலை கைவிடவில்லை. இதனால் அந்த இளம்பெண் நொந்துப்போனார். கடந்த 23ம் தேதி மனைவியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு கணவர் முகமது பயாஸ் சென்றார். அதன்பிறகு அவரது நண்பர்கள் அகமது முஜீப், நூர் கமல், ஜியா உர் ரஹ்மான் ஆகியோரை வீட்டிற்கு அனுப்ப தயாரானார். ஆனால் அதற்குள் வீட்டின் உரிமையாளர் அங்கு வந்தார். முகமது பயாஸ் வாடகை பாக்கி வைத்துள்ளதால் அதனை வசூல் செய்வதற்காக அவர் வந்தார். வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்ததும், வீட்டிற்குள் முகமது பயாஸின் மனைவி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வீட்டின் உரிமையாளர் கதவை உடைத்து அந்த பெண்ணை மீட்டார். அப்போது அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி உதவி கோரினார். அதோடு பக்கத்தில் இருந்தவரிடம் செல்போன் வாங்கி தனது உறவினரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறினார். உறவினர் முகமது ரஷீத் வந்து அந்த பெண்ணை போலீஸ் நிலையம் அழைத்து சென்று புகாரளித்தார். இந்த புகாரை தொடர்ந்து கணவர் முகமது பயாஸ், அவரது நண்பர்களான அகமது முஜீப், நூர் கமல், ஜியா உர் ரஹ்மான் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பாலியல் பலாத்காரம், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், கொலை மிரட்டல் என பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது 4 பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.ட்ரோன் வைத்து பக்கத்து வீட்டு பெண்ணை.. கடைசியில் அதிர்ச்சி ! டிரோன்ஸ் படம் எப்படி இருக்கு?
ஆன்லைனில் சேட் செய்த பெண்ணை பார்க்க சொத்துகளை விற்று 1,900 கிமீ போன நபர்.. நேரில் பார்த்தால் ஷாக்