மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் AK-203 உட்பட பயங்கர ஆயுதங்கள் திருட்டு.. சிக்கிய முன்னாள் வீரர்!

  • ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள இந்திய ராணுவ முகாமில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் திருடப்பட்ட சம்பவத்தில் முன்னாள் ராணுவ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா போலீசார் மேற்கொண்ட விரிவான விசாரணையில் திருடப்பட்ட அனைத்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற ராணுவ பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

    Advertisement

    தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் போலாரம் பகுதியில் உள்ள 20 மெட்ராஸ் ரெஜிமென்ட் தலைமையகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏகே 47 உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் திருட்டு போய் இருந்தது. இது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    Advertisement

    என்ன நடந்தது!

    கடந்த ஆகஸ்ட் 30 மற்றும் 31ம் தேதி இரவில் இந்த திருட்டு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ முகாமில் இருந்து அதிக அளவிலான ஆயுதங்கள் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார், உளவுத்துறை அமைப்புகள் மற்றும் ராணுவம் இணைந்து விசாரணையை தொடங்கின. 4 ஏகே-203 துப்பாக்கிகள், ஒரு INSAS துப்பாக்கி, 7 கைத்துப்பாக்கிகள் திருட்டு போய் இருந்தது.. மேலும் 5 ஏகே மேகசின்கள், 3 INSAS மேகசின்கள், 13 கைத்துப்பாக்கி மேகசின்கள் மற்றும் கணிசமான அளவு வெடிமருந்துகளும் காணாமல் போயிருந்தன.

    மேலும், இரவு நேரத்தில் பயன்படுத்தப்படும் நைட் விஷன் பைனாகுலர் ஒன்றும் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ராணுவத் தரத்திலான ஆயுதங்கள் என்பதால் இந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியது. எதற்காக திருடினார்கள்.. இதை வைத்து வேறு எதாவது மோசமான தாக்குதலை நடத்தும் திட்டம் எதாவது இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது.

    Advertisement

    விசாரணை

    முதற்கட்டமாக ராணுவ முகாமின் முக்கிய பகுதிகளுக்குள் செல்லும் ஆக்சஸ் வைத்திருந்த சுமார் 16 பேர் மீது விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் குவிக் ரியாக்ஷஷன் டீம் வீரர்கள், ஒப்பந்த ஊழியர்கள், ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள், சமீபத்தில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டது. மேலும், பலரது செல்போன் நம்பர்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. சிசிடிவி காட்சிகள், கைரேகைகள் மற்றும் தடயவியல் ஆதாரங்களும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன.

    முன்னாள் ராணுவ வீரர்

    இறுதியில் ஹவில்தார் பதவியில் இருந்த முன்னாள் வீரர் மல்லேஷ் என்கிற ராஜு மீது போலீசாரின் சந்தேகம் திரும்பியது. அவர் கடந்த ஜூன் 30ம் தேதி ஒழுங்கு நடவடிக்கை மற்றும் உடல்நலம் தொடர்பான காரணங்களால் ராணுவ பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராணுவ முகாமின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவருக்கு நன்கு தெரிந்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆகஸ்ட் 28 மற்றும் 29ம் தேதிகளில் அவர் முகாமை நோட்டமிட்டதாகவும், சிசிடிவி கேமராக்களின் கண்காணிப்பு இல்லாத பகுதிகள் மற்றும் இருட்டான இடங்களை அடையாளம் கண்டதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

    Advertisement

    இந்தச் சூழலில் தான் ஆகஸ்ட் 30ம் தேதி இரவு சுமார் 11 மணியளவில் மல்லேஷ், முகாமுக்குள் சென்று ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை திருடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. முதலில் அவற்றை தனது மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற அவர், பின்னர் காருக்கு மாற்றியதாக கூறப்படுகிறது. யாரும் தன்னை சந்தேகப்படக்கூடாது என்பதற்காக சாலையில் நின்று கொண்டு இருந்தவர்களையும் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிறகு திருடி ஆயுதங்களை அவர் மண்ணில் புதைத்து வைத்தாகவும் கூறப்படுகிறது. விசாரணை தீவிரமடைந்த நிலையில் திருடிய ஆயுதங்களை பலமுறை இடம் மாற்றியதாகவும் கூறப்படுகிறது.

    கைது

    இந்தச் சூழலில் தான் கடந்த செப்டம்பர் 10ம் தேதி குடும்பத்தினர் மற்றும் போலீசார் முன்னிலையில் மல்லேஷிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, ஆயுதங்களை திருடியதை அவர் ஒப்புக்கொண்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடம் குறித்த தகவலையும் அவர் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திருடப்பட்ட அனைத்து துப்பாக்கிகள், வெடிமருந்துகள், மேகசின்கள் மீட்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸ் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    English Summary

    Former Army personnel has been arrested in connection with the theft of AK-203 rifles(தெலுங்கானா ஆயுத முகாம் துப்பாக்கி திருட்டு): Hyderabad Army Camp Theft news in tamil.