எம்பி மகன் ஓட்டிய சொகுசு கார்.. மின்னல் வேகத்தில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த இளம்பெண்!

  • ஹைதராபாத்: "ஸ்டாப்.. ஸ்டாப்.." என ஒருவர் பதற்றத்துடன் கத்தும்போதே, பெண் ஒருவர் மீது சொகுசு கார் மோதியது. அந்த கார் மோதியதில் 26 வயது பெண் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    வாழ்க்கையில் நாம் கண் மூடி திறப்பதற்குள் எதிர்பாராத சம்பவங்கள் நடந்துவிடும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மதிய உணவுக்காக வெளியே சென்றிருந்த பரதிமுகி என்ற இளம்பெண் தான் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டார்.

    Advertisement

    சொகுசு கார் மோதி விபத்து

    மதிய உணவை சாப்பிட வெளியே வந்த அந்த பெண் மீண்டும் வேலைக்கு செல்ல சாலையை கடந்துள்ளார். அப்போது வேகமாக வந்த ஆஸ்டன் மார்ட்டின் சொகுசு கார் அவர் மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே பெண்ணின் தலையில் இருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறியது.

    இந்த விபத்துக்கு பிறகு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் சாலையில் ரத்த வெள்ளத்தில் அந்த பெண் கிடப்பது தெரிகிறது. அவருக்கு அருகில் இருக்கும் மற்றொரு பெண், அதிர்ச்சியில் கதறி அழுகிறார். இதற்கிடையே அந்த சொகுசு காரில் இருந்து வெளியே வந்த நபர், கீழே விழுந்திருந்த பெண்ணை நோக்கி செல்கிறார். பின்னர் மீண்டும் காருக்கு சென்று தனது செல்போனை எடுத்து வருகிறார்.

    Advertisement

    உயிரிழப்பு

    ஒடிசாவின் மயூர்பஞ்ச் பகுதியைச் சேர்ந்த பரதிமுகி, ஹைதராபாத்தில் உள்ள பிரபல மால் ஒன்றில் துணிக்கடையில் பணியாற்றி வந்ததாக அவரது தாயார் ஆனந்தினி முகி தெரிவித்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த அவரை ஜூப்ளி ஹில்ஸில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    யார் அவர்?

    இது தொடரப்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மாதப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் காரை ஒட்டியது 21 வயதான லிங்கமனேனி சஞ்சுஷ் என்பது தெரியவந்தது. இவர் தொழிலதிபரும், ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்பியுமான லிங்கமேனி ரமேஷ் என்பவரின் மகன் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    விபத்துக்கு பிறகு குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான சோதனைகள் நடத்தப்பட்டன. அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அதில் அவர் மது போதையில் இல்லை என்றே ரிப்போர்ட் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் தொடர்புடைய சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    போலீஸ் நடவடிக்கை

    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவருக்கு நோட்டீஸ் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. இது விபத்து என்பதால் இது ஜாமீனில் வெளிவரக்கூடியது வழக்கு என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இதில் அதிகபட்ச தண்டனை 7 ஆண்டுகளுக்கும் குறைவாக இருப்பதால் கைது செய்யப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளார். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    இது தொடர்பாக பரதியின் தாயார் ஆனந்தினி முகி கூறுகையில், "கொரோனா ஊரடங்கால் எனது மகளின் படிப்பு பாதிக்கப்பட்டபோதும் அவர் மனம் தளரவில்லை. குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்ற உறுதியுடன் ஹைதராபாத்துக்கு வந்து வேலை சேர்ந்தார். அவருக்கு இதுபோல நடந்ததை ஏற்கவே முடியவில்லை" என்றார்.

    நமது இந்திய சட்டப்படி விபத்தில் ஒருவர் உயிரிழந்தாலும் டிரைவர் மதுபோதையில் இல்லை. அல்லது இடித்துவிட்டு நிற்காமல் போகவில்லை என்றால் ஜாமீன் கிடைக்கும். விசாரணையில் அந்த நபர் மீது தவறு என்று நிரூபிக்கப்பட்டால் மட்டுமே ஜெயில் தண்டனை கிடைக்கும். எதிர்பாராத விபத்தாக இருந்தால் தண்டனை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    A 26-year-old woman was killed after being hit by an Aston Martin in Hyderabad(ஹைதராபாத்தில் நடந்த மோசமான கார் விபத்து): Hyderabad Aston Martin Crash latest news in tamil.