மதிய சாப்பாட்டுக்கு டக்னு வீட்டுக்கு வந்த கணவர்.. போனை பார்த்து அலறிய ஓட்டம்.. யாரந்த கூரியர் பாய்?

  • ஹைதராபாத்: ஹைதராபாத் கூரியர் பாயுடன், பவானி என்ற திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலில் வந்து முடிந்துள்ளது.. ஒருநாள் மனைவியின் செல்போனை எடுத்து பார்த்துவிட்டு, ஆடிப்போய்விட்டார் அப்பாவி கணவர்.. உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு அலறி அடித்து ஓடியிருக்கார்.. ஏன்?

    Advertisement

    தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டத்தில் உள்ளது சிலாகோடு கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் காடே ராஜேஸ்வர் ராவ். இவர் அருகிலுள்ள கம்மம் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

    Advertisement

    ஹைதராபாத்

    இவருக்கும் பவானி என்ற பெண்களுக்கும் கடந்த 2016ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தில் எந்தக் குறையும் இல்லாமல் வாழ்க்கை போய்க்கொண்டிருந்த நிலையில்தான், அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது.

    வழக்கமாக வேலைக்கு சென்றுவிட்டால், மதியம் சாப்பிட வீட்டுக்கு வர மாட்டாராம் ராஜேஸ்வர்.. ஆனால் கடந்த ஜூலை 27ம் தேதி, வேலைக்கு சென்றவர், மதியம் சாப்பிடுவதற்காக திடீரென வீட்டிற்கு வந்துள்ளார்.. அப்போ தன்னுடைய மனைவி பவானி, இன்னொரு நபருடன் தவறான உறவில் இருந்ததை நேரில் கண்டு உறைந்துபோனார்.

    Advertisement

    தெலுங்கானா கூரியர் பாய்

    இந்த விவகாரம் பெரியவர்களுக்கு சென்றது.. அவர்கள் இதனை கிராம பஞ்சாயத்துக்காரர்களிடம் கொண்டு சென்றார்கள்.. அப்போதுதான் அந்த நபரின் பெயர் சைதுலு என்பதும், கூரியர் நிறுவனத்தில் டெலிவரி பாயாகப் வேலை பார்த்து வருவதும் தெரியந்தது..

    ஆனால், கதை இத்துடன் முடியவில்லை. இந்த கிராமப் பஞ்சாயத்தில் தன்னுடைய அண்ணனும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவரை அழைக்க பக்கத்து ஊருக்கு கிளம்பி சென்றார் ராஜேஸ்வர் ராவ்.. உடனே கூரியர் காதலன் சைதுலு, பின்னாடியே சென்று அவரை கொலை செய்ய முயன்றுள்ளார்.. சுதாரித்துக் கொண்ட ராஜேஸ்வர் ராவ், அவரிடமிருந்து எப்படியோ தப்பித்து வீடு திரும்பினார்.

    Advertisement

    செல்போனை கண்டு அலறிய கணவன்

    எனினும், ஏதோ பெரிய ஆபத்து வரப்போகிறது என்று அச்சமடைந்த ராஜேஸ்வர், மனைவி பவானியின் செல்போனை எடுத்து சோதித்தார்.. அப்போதுதான் மனைவியின் மாஸ்டர் மைண்ட் பிளான் தெரியவந்தது.. மனைவி பவானிக்கும், கள்ளக்காதலன் சைதுலுவிற்கும் இடையே வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் நடந்த உரையாடல்களைப் பார்த்து ராஜேஸ்வர் ராவ் நிலைகுலைந்து போனார்.

    அதில் பவானி, "என் புருஷனை ரோடு ஆக்சிடென்ட் பண்ணிக் கொன்னுடு.. இல்லாவிட்டால் நான் தற்கொலையே செய்து செத்துடுவேன்... சம்பவத்தை வீட்டிற்கு வெளியே வச்சுதான் செய்யணும்.. போலீஸ் பார்த்தா, டிட்டோ விபத்து மாதிரியே இருக்கணும்" என்றும் ஐடியா தந்திருந்தார்.

    Advertisement

    வாட்ஸ்அப் சேட்டிங்

    உடனடியாக அந்த வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சாட்களைத் தனது போனில் ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஆதாரமாக சேகரித்தார் ராஜேஸ்வர் ராவ். ஆகஸ்ட் 1ம் தேதி நேரடியாகத் தோர்ணக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, "என் உயிருக்கு ஆபத்து இருக்கு.. எனக்குப் பாதுகாப்பு கொடுங்க!" என்று கண்ணீருடன் புகார் அளித்தார்.

    புகாரைப் பெற்றுக்கொண்ட தோர்ணக்கல் போலீஸார் உடனடியாக "ஜீரோ எஃப்.ஐ.ஆர்" (Zero FIR) பதிவு செய்து, மேல் விசாரணைக்காக வழக்கை கம்மம் கிராமப்புறக் காவல் நிலையத்திற்கு மாற்றினார்கள்.. ஆனால், வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் அப்செட் ஆன ராஜேஸ்வர் ராவ், மீண்டும் கம்மம் கிராமப்புறக் காவல் அதிகாரிகளை சந்தித்துச் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

    Advertisement

    இப்போது இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ராஜேஸ்வர் ராவ் கொடுத்த ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. "விரைவில் இருவரிடமும் விசாரணை நடத்தி அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்காதலுக்காக கணவனையே விபத்து போல சித்தரித்து கொல்ல துணிந்த மனைவியின் செயலும், அதற்காக அவர் போட்டு தந்த கொலை ஸ்கெட்ச்சும் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....!!

    English Summary

    Hyderabad Husband Comes Home for Lunch, Sees Something on Wife’s Phone: Who Is the Courier Boy?