ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ஐடி கம்பெனி ஊழியர் என்று சொல்லிக்கொண்டு, பெண் ஒருவர் டேட்டிங் செயலியில் அறிமுகமாகியிருக்கிறார்.. உடனே 27 வயது வழக்கறிஞர், அந்த பெண்ணிடம் நட்பு வைத்துள்ளார்.. மெசேஜ்களை அனுப்பி இருவருமே நட்பை வளர்த்துள்ளனர்.. கடைசியில் தலையில் இடி விழுந்தது போல உட்கார்ந்துள்ளார் அந்த வழக்கறிஞர்.. என்ன நடந்தது ஹைதராபாத்தில்?
ஹைதராபாத்தின் இஸ்ஸத்நகர் பகுதியைச் சேர்ந்தவர் இந்த 27 வயது வழக்கறிஞர்.. கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம், திஷா என்ற பெண் அறிமுகமாகி உள்ளார்.. சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்வதாக சொல்லியிருக்கிறார்..
ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த பேச்சு, கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமான பேச்சாக மாறியிருக்கிறது. இருவரும் தனிப்பட்ட விஷயங்களை ஷேர் செய்து கொள்ளும் அளவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.. பிறகு ஒருநாள், தன்னுடைய அப்பா இறந்துவிட்டதாகவும், இறுதிச்சடங்குக்கு உடனடியாக பணம் தேவைப்படுவதாகவும் வழக்கறிஞரிடம் திஷா கூறியுள்ளார். இறுதிச்சடங்குக்கூட பணம் இல்லையா? என்று பதறிப்போன வழக்கறிஞரும் பணம் தந்து உதவியிருக்கிறார்.. இதற்கு பிறகு வேறு வேறு காரணங்களை சொல்லி திஷா பணம் கேட்டுள்ளார்.. இப்படியாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் யுபிஐ மூலம் பணம் அனுப்பியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்தப் பணம் சுமார் ரூ.4.3 லட்சத்தை எட்டியுள்ளது. அதற்கு பிறகும், திஷா பணம் கேட்டுள்ளார்.. ஆனால், வழக்கறிஞர் கொடுக்க மறுத்து விட்டார்.. உடனே தன்னுடைய சுயரூபத்தை காட்டியிருக்கிறார் திஷா.. பணம் தராவிட்டால், எனக்கு அனுப்பின அந்தரங்க வாட்ஸ்அப் மெசேஜ்களை குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்து, சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டு விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்.. அதுமட்டுமல்ல, தன்னுடைய உண்மையான பெயர் அலினா என்றும், தான் ஒரு திருநங்கை என்றும் சொல்லி உள்ளார். இதைக்கேட்டு ஆடிப்போய்விட்டார் வழக்கறிஞர்.. உடனே அந்த பெண்ணின் செல்போன் நம்பரையே பிளாக் செய்துவிட்டார். ஆனால் மீண்டும் வழக்கறிஞரை விரட்ட ஆரம்பித்தார் திஷா.. 2026 ஜூலையில் திஷாவிடம் இருந்து வேற நம்பரில் போன் வந்திருக்கிறது... தன் அம்மாவுக்கு மூளையில் ரத்தக்கட்டி ஏற்பட்டுள்ளதாக கூறி பணம் கேட்டிருக்கிறார். ஆனால் அதே மிரட்டலுடன் கேட்டிருக்கிறார்.. இதனால் பயந்துபோன மீண்டும் பணம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் வழக்கறிஞர்.. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்த பணம் எவ்வளவு தெரியுமா? 2025 ஆகஸ்டு முதல் 2026 செப்டம்பர் 15-ந்தேதி வரை மட்டும் சுமார் 241 தவணைகளாக வங்கி மூலம் பணம் அனுப்பியிருக்கிறார். மொத்தம் ரூ.4,91,48,900.. கிட்டத்தட்ட ரூ.5 கோடி தந்திருக்கிறார். வங்கி கணக்கில் பணம் அனுப்பியது மட்டும் இல்லை.. நேரிலும் பணம் திஷாவுக்கு கொடுத்திருக்கிறார். தான் இதுவரை பாடுபட்டு உழைத்து சேமிப்பு பணத்தைதான் திஷாவின் மிரட்டலுக்கு பயந்து தந்திருக்கிறார்.. பிறகு குடும்பத்தினரின் சேமிப்பையும் பயன்படுத்தியிருக்கிறார்.. அதுமட்டுமல்ல, ஒரு வீட்டையே விற்றிருக்கிறார். அந்த வீட்டை விற்று கிடைத்த பணத்தையும் திஷாவுக்கே தந்திருக்கிறார். ஆனால், இவ்வளவு பணம் கொடுத்தும், திஷாவின் மிரட்டல் மட்டும் நிற்கவில்லை. ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் குடும்பத்தினரிடம் நடந்ததை சொல்லியிருக்கிறார் வழக்கறிஞர். அதன்பிறகுதான், கடந்த வாரம் 19-ந்தேதி சைபர் கிரைமில் ஆன்லைனில் புகார் தரப்பட்டது. போலீசாரும் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.. தெலங்கானா சைபர் பாதுகாப்பு பிரிவு இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. வழக்கறிஞரின் வங்கி பரிவர்த்தனைகளையும் போலீசார் ஆய்வு செய்திருக்கிறார்கள். அப்போது ஆன்லைன் மூலம் அனுப்பப்பட்ட பணம் அனைத்தும் ஒரே பயனாளியின் வங்கி கணக்குக்குச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இதனால், திஷா என்ற பெயரில் அறிமுகமான அந்த நபர் மட்டும்தான் இந்த வேலையை செய்தாரா? அல்லது பின்னால் இன்னும் ஒரு பெரிய நெட்வொர்க்கே இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. அந்த கோணத்திலும் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். ஒரு சாதாரண டேட்டிங் ஆப்பில் தொடங்கிய பழக்கம்.. நெருக்கமான பேச்சாக மாறி, அந்த அந்தரங்க பேச்சே பின்னர் மிரட்டலாக மாறி, கடைசியில் தன்னுடைய சேமிப்பு, குடும்பத்தினர் சேமிப்பு, வீடு என மொத்தத்தையும் இழந்துள்ளார் இளைஞர்.. அதுவும் படித்த ஒரு வழக்கறிஞர் இப்படி ஏமாந்து நிற்பது வியப்பாக உள்ளது.. 5 கோடியை இழக்கும் அளவுக்கு திஷாவிடம் அப்படியென்ன அந்தரங்கத்தை பேசியிருப்பார் இந்த வழக்கறிஞர்???ஹைதராபாத் ஐடி ஊழியர் திஷா
அந்தரங்க வாட்ஸ்அப் மெசேஜ்
241 தவணைகள்
சேமிப்பு, வீடு போச்சே
5 கோடி இழந்த வக்கீல்?