ஹைதராபாத் சமையலறையில் அத்துமீறிய ஐடி ஊழியர்.. அலறி அடித்து ஓடிய நெதர்லாந்து பெண்

  • ஹைதராபாத்: ஹைதராபாத் பகுதியில் தங்கியிருந்த 36 வயது நெதர்லாந்து பெண் நர்ஸூக்கு, ஐடி ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை மற்றும் அச்சுறுத்தல் அளித்துள்ளார்... தாயகம் திரும்பிய பிறகு, அந்த பெண் இந்திய தூதரகத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காச்சிகபௌலி காவல்துறையினர் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். என்ன நடந்தது?

    Advertisement

    நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வருகிறார்.. இந்த காதலன் ஹைதராபாத்தில் உள்ள கொண்டாபூர் பகுதியில் வசித்து வருகிறார்.

    Advertisement

    நெதர்லாந்து பெண் இந்தியா வருகை

    தனது காதலனை சந்திப்பதற்காக கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்துள்ளார் நெதர்லாந்து பெண்.. 20 நாள் காதலனுடன் அறையில் தங்கியிருக்கவும் முடிவு செய்தார்.. காதலன் தங்கியிருந்த அதே வீட்டில், பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆதித்யா ஆனந்த் என்பவரும் தங்கியிருந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.

    அங்கு தங்கியிருந்த நாட்களில், ஆதித்யா ஆனந்த் தினமும் காலையில் கதவுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு, அந்த நெதர்லாந்து பெண்ணை நோட்டம் விட்டு வந்துள்ளார்... அதுமட்டுமல்லாமல், காதலன் வீட்டில் இல்லாத நேரங்களில், அந்த பெண்ணின் அருகில் வருவதும், அவரது அனுமதியின்றித் தொட்டு அத்துமீறுவதுமாகத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது.

    Advertisement

    சமையலறையில் அத்துமீறல்

    அதுமட்டுமல்ல, பெண் டான்ஸ் ஆடும்போது, ஆபாசமான சைகைகள் செய்வது, வம்பிழுக்கும் வார்த்தைகளை பயன்படுத்துவது என்ற அவரது அத்துமீறல்கள் எல்லை மீறி சென்றுள்ளன.

    ஒருமுறை காதலன் வெளியில் சென்றிருந்தபோது, கிச்சனில் இருந்த அந்த பெண்ணிடம் ஆதித்யா ஆனந்த் அரைகுறை ஆடையுடன் சென்று தவறாக நடந்து கொள்ளவும் முயன்றுள்ளார்.. அப்போது திடீரென காதலன் வீட்டிற்குள் வந்துவிட்டதால், ஆதித்யா சமையலறை விட்டு வெளியே வந்துவிட்டாராம்.

    அதற்குமேல் பொறுமை இழந்த அந்த பெண், காதலனிடம் தனக்கு நேர்ந்த தொல்லைகள் அனைத்தையும் சொல்லி அழுதுள்ளார்.. எனினும், இதுபோன்ற தொடர் சம்பவங்களால் அதிர்ச்சியும் பயமும் அடைந்த அந்தப் பெண், உடனடியாக இந்தியாவில் இருந்து நெதர்லாந்துக்கு திரும்பி சென்றார்..

    Advertisement

    இந்திய தூதரகத்தில் புகார்

    அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகாரும் தந்தார்.. தூதரகத்தின் வழிகாட்டுதலின்படி, மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட நெதர்லாந்து பெண், ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலி போலீஸ் ஸ்டேஷனில் நேற்றைய தினம் நேரில் ஆஜராகி முறைப்படி புகார் தந்துள்ளார்.

    அவர் அளித்த புகாரின் பேரில், கச்சிபவுலி போலீசார் மென்பொருள் பொறியாளர் ஆதித்யா ஆனந்த் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

    ஆனால், போலீஸார் வழக்குப்பதிவு செய்தது தெரிந்ததுமே, ஆதித்யா ஆனந்த் தன்னுடைய செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.. எனவே அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    Advertisement

    காதலனிடம் புகார் சொன்னபோதே, போலீசிலும் புகார் தர நினைத்துள்ளார் நெதர்லாந்து பெண்.. ஆனால், தாயகம் திரும்பும் அவசரப் பயணத் திட்டங்கள் காரணமாக, உள்ளூர் போலீசில் புகார் அளிக்க முடியாமல் போய்விட்டதாம்.. அதற்கு பிறகே, இந்தியத் தூதரகத்திடம் அப்பெண் முறைப்படி புகார் அளித்தார்.

    ஐடி ஊழியர் எங்கே

    இப்போது தூதரகம் மூலம் தகவல் ஹைதராபாத் காவல்துறையினருக்கு அனுப்பப்பட்டதை அடுத்து, உடனடி சட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன... விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு காவல்துறை சார்பில் ஆதித்யா ஆனந்த் மீது சம்மன் அனுப்பப்பட்டது.. ஆனாலும் அவர் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளதால், அவரை பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது..

    Advertisement

    வெளிநாட்டு பெண்ணிற்கு நேர்ந்த இந்தச் சம்பவம் ஹைதராபாத் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!!!

    English Summary

    Hyderabad IT Employee Hides Behind Kitchen Door; Netherlands Woman Runs Away in Panic