அசந்த நேரத்தில் ஆந்திரா பக்கம் போன முதலீடுகள்! ஒரு வழியாக விழித்து கொண்ட ஹைதராபாத்! மெகா பிளான் ரெடி

  • ஹைதராபாத்: சமீபத்திய ஆண்டுகளாக ஹைதராபாத்திற்கு போட்டி போடும் வகையில் தெலுங்கானா தொடர்ந்து முதலீடுகளை ஈர்த்து வந்தது. இதற்கிடையே இப்போது விழித்து கொண்டுள்ள தெலுங்கானா அரசு மீண்டும் முதலீடுகளை ஈர்க்க முழு வீச்சில் இறங்கியுள்ளது. இதற்காக பிரம்மாண்ட மாநாட்டை நடத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹைதராபாத் தொடர்ச்சியாக பல முதலீடுகளை ஈர்த்து வந்தது. ஐடி துறையில் பெங்களூரை மிக வேகமாக நெருங்கி வந்தது. ஆனால், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அரசு அமைந்த பிறகு, தெலுங்கானாவுக்கு போட்டியாக முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கையில் ஹைதராபாத் இறங்கியது. இதனால் பல முதலீடுகள் ஆந்திரா பக்கம் சென்றது. இதனால் விழித்து கொண்ட தெலுங்கானா இப்போது முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

    Advertisement

    தெலுங்கானா முதலீடு

    தெலங்கானாவில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை தெலுங்கானா அரசு நடத்துகிறது. "Invest Telangana" என்ற பெயரில் நடத்தப்படும் இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநாட்டை சிறப்பாக நடத்தவும், பல்வேறு துறைகள் மற்றும் அரசு அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும் சிறப்பு வார் ரூம் கூட உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த 'Invest Telangana' இரண்டாவது மாநாடு வரும் டிசம்பர் 7-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா தலைமையில் புதன்கிழமை அமைச்சரவை துணைக் குழு ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் என். உத்தம் குமார் ரெட்டி, டி. ஸ்ரீதர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டுக்கான பணிகளை கண்காணிக்கவும், பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் வார் ரூம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    வார் ரூம்

    மேலும், இந்த வார் ரூம் செயல்பாடுகளை மேற்பார்வையிடவும் ஒரு மூத்த அதிகாரியை நியமிக்க தலைமை செயலாளர் சஞ்சய் ஜாஜுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலில் மாநாட்டில் பங்கேற்க உள்ள முக்கிய விருந்தினர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு எந்தவித தாமதமும் இல்லாமல் அழைப்புகளை அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக ஏற்கனவே பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளனர். வல்லுநர்களையும் அரசு அதிகாரிகளையும் ஒருங்கிணைந்து வேலை செய்ய வைக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    பக்கா பிளான்

    பொதுவாக முதலீட்டாளர் மாநாடு நடத்தும்போது, ஏகப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால், எவ்வளவு முதலீடு உண்மையில் வந்தது என்றால் அது பெரிய கேள்விக்குறியாகவே இருக்கும். இதையும் கருத்தில் கொம்டு கடந்த முறை நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டின்போது பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், அந்த ஒப்பந்தங்களில் தற்போது எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்ய தனியாக ஒரு சிறப்புக் குழுவும் அமைக்கப்பட உள்ளது.

    Advertisement

    விரிவான நடவடிக்கை

    தெலுங்கானாவை மீண்டும் முதலீட்டுக்கான முக்கிய இடமாக முன்னிறுத்தும் வகையில், மாநாட்டுக்கு முன்பாக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விரிவான ரோட்ஷோகளை நடத்தவும் அமைச்சரவை குழு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சர்வதேச மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை நேரடியாக சந்தித்து, தெலுங்கானாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து எடுத்துரைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மாநாடு தொடர்புடைய பணிகளை தொடர்ந்து கண்காணிக்கவும் தலைமை செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

    English Summary

    Telangana is stepping up efforts to attract domestic and global investments with the investor summit(முதலீடுகளை ஈர்க்கும் தெலுங்கானா அரசு): Invest Telangana latest news in tamil.