தங்க ஒட்டியானம்.. 10 கோடி சொத்து.. ஆந்திராவில் பெண்களின் திருமண எதிர்பார்ப்பு குறித்து பெண் வீடியோ

  • ஹைதராபாத்: தெலுங்கு மாநிலங்களில் உள்ள பெண்களின் திருமண எதிர்பார்ப்புகள் மற்றும் பெண் வீட்டாரின் நிபந்தனைகள் குறித்து ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ, சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நம்மூரைப் போலவே தற்போது ஆந்திராவிலும் படித்த பெண்கள் மற்றும் பெண் வீட்டாரிடையே திருமண எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக உள்ளதை அந்தப் பெண் அம்பலப்படுத்தியுள்ளார்.

    Advertisement

    ஆந்திராவைச் சேர்ந்த அந்தப் பெண் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:

    Advertisement

    "எனக்குத் தெரிந்த உறவினர் ஒருவர், தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்க்குமாறு கூறினார். கையோடு மாப்பிள்ளைக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்று சில விஷயங்களையும் பட்டியலிட்டார். அவர் கூறியதை அப்படியே கூறுகிறேன்...

    மாப்பிள்ளை இந்தியாவில் பணிபுரிபவராக இருந்தால், ஆண்டுக்குக் குறைந்தபட்சம் ₹40 லட்சம் வருமானம் (Package) இருக்க வேண்டும்.

    வெளிநாட்டில் பணிபுரிபவராக இருந்தால், ஆண்டுக்கு ₹1 கோடி வருமானத்துடன் H1B போன்ற விசாக்களும் வைத்திருக்க வேண்டும்.

    எங்கள் பெண்ணுக்கு 30 வயது இருக்கும் நிலையில், இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் 2-3 ஆண்டுகள் மட்டுமே இருக்க வேண்டும்.

    Advertisement

    மணமகனின் தந்தைக்குக் குறைந்தது ₹10 கோடி மதிப்பிலான சொத்துகள் இருக்க வேண்டும்.

    மாப்பிள்ளை நல்லவனா, குணமானவனா என்பதற்கெல்லாம் கடைசியாகத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    அதுமட்டுமின்றி, திருமணத்தின்போது பெண்ணுக்குத் தங்கத்தாலான இடுப்புப் பட்டை (ஒட்டியாணம்) பரிசாக வழங்கப்பட வேண்டும்." என்று கூறினார்.

    அதேபோல, மாதம் ₹15,000 மட்டுமே சம்பாதிக்கும் மற்றொரு பெண்ணின் நிபந்தனைகளைப் பற்றிக் குறிப்பிட்ட அந்தப் பெண்:

    "ஆண்டுக்கு ₹10 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை வருமானம் ஈட்டும் ஒருவரை, அந்தத் தொகை மிகக் குறைவு என்று கூறி அப்பெண் நிராகரித்துள்ளார். குறைந்தபட்சம் ஆண்டுக்கு ₹25 லட்சம் வருமானமும், ₹5 கோடி மதிப்பிலான சொத்துகளும் இருக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். மணமகனின் தந்தை மிகச் சிறந்த பொருளாதார நிலையில் இருக்க வேண்டும்; அதேபோல் திருமணத்திற்குப் பிறகு பெற்றோரிடமிருந்து தனிக்குடித்தனம் செல்ல மாப்பிள்ளை தயாராக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதனைப் பார்த்த ஆந்திர நெட்டிசன்கள், "இதெல்லாம் ரொம்ப ஓவர்!" என்று வாயைப் பிளந்தபடி புலம்பி வருகிறார்கள்.

    ஆந்திராவைப் பொறுத்தவரை நன்கு படிக்க வேண்டும்; படித்து முடித்தவுடன் அமெரிக்கா பறக்க வேண்டும்; அங்குள்ள நல்ல ஐடி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, H1B விசா வாங்கிச் செட்டில் ஆக வேண்டும் என்பதே பலரது கனவாக உள்ளது. அங்குள்ள திரைப்படங்களில் கூட கதையின் நாயகன் அல்லது மாப்பிள்ளை அமெரிக்காவில் இருந்து வருவதாகவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஏனெனில், அமெரிக்காவில் செட்டில் ஆவதே பலரின் பிரதான இலக்காக இருக்கிறது.

    அப்படி செட்டில் ஆனவர்களுக்கு ஆந்திராவில் 'சிவப்புக் கம்பள வரவேற்பு' அளிக்கப்பட்டு, நல்ல வசதியான பெண்ணும் மனைவியாகக் கிடைப்பார். ஆனால் மற்றவர்களுக்குத் திருமணம் அவ்வளவு எளிதாக அமைவதில்லை. தற்போதும் பல இளம் பெண்கள், அமெரிக்காவில் செட்டில் ஆன மாப்பிள்ளைகளையே அதிகம் விரும்புவது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Marriage expectations of girls in Telugu states. Min 40L package if in India, 1Cr if he's abroad along with H1B, etc. Age gap should be 2-3 yrs, while she's 30yr old.