ஹைதராபாத் சொகுசு பண்ணை வீட்டில் கஞ்சா, மதுவுடன் விருந்து.. 108 மாணவ, மாணவிகள் சிக்கினார்கள்

  • ஹைதராபாத் : ஹைதராபாத் புறநகரில் உள்ள கம்மேட்டா கிராமத்தில் உள்ள சொகுசு பண்ணை வீட்டில், நடந்த பார்ட்டியில் கஞ்சா மற்றும் மதுபானம் பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. சட்டவிரோதமாக நடந்த இந்த விருந்து கொண்டாட்டம் தொடர்பாக தொடர்பாக தகவல் அறிந்து செவெல்லா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த விருந்து கொண்டாட்டத்தில் பங்கேற்ற 108 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

    Advertisement

    தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகரில் உள்ள செவெல்லா போலீசார் தெரிவித்த தகவலின்படி, இன்ஸ்டாகிராம் மூலம் இந்தப் பார்ட்டிக்கு குறிப்பிட்ட நபர் ஏற்பாடு செய்துள்ளார். அந்த பார்டியில் பங்கேற்பாளர்களிடம் இருந்து தலா ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை வசூலித்துள்ளார். மேலும், உரிய கலால் துறை அனுமதியின்றி அங்கு மதுபானங்களும் வழங்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    3 மாணவர்கள் கஞ்சா பயன்படுத்தியது பரிசோதனையில் உறுதி

    வார இறுதி பார்ட்டி கலாச்சாரம் ஹைதராபாத்திலும் இருக்கிறது. அப்படித்தான் அக்டோபர் 30யான நேற்று வெள்ளிக்கிழமை வார இறுதி என்பதால், ஹைதராபாத் புறநகரில் உள்ள கம்மேட்டா கிராமத்தில் உள்ள சொகுசு பண்ணை வீட்டில் கஞ்சா, மதுவுடன் விருந்து மற்றும் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டம் நடந்துள்ளது. இது பற்றி ரகசிய தகவல் செவெல்லா போலீசாருக்கு தெரியவந்தது.இ தையடுத்து நடத்திய சோதனையில், பலரும் மது போதையில் தள்ளாடியபடி நடனம் ஆடியபடி இருந்துள்ளனர். அனைவருக்குமே போதைப்பொருள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    பொதுப் போக்குவரத்தில் ஆண்களுக்கு இனி பாதுகாப்பு இல்லையா? நெட்டிசன் எழுப்பிய கேள்விகள்
    Advertisement

    இதில், பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தவர் உட்பட 3 மாணவர்கள் கஞ்சா பயன்படுத்தியிருப்பது பரிசோதனையில் உறுதியானது. பார்ட்டிக்கு ஏற்பாடு செய்த நபரிடமிருந்து கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, போதைப்பொருள் மற்றும் மனநிலையைப் பாதிக்கும் பொருட்கள் தொடர்பான சட்டமான NDPS சட்டம் மற்றும் கலால் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    மேலும், கஞ்சா பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்ட மூன்று மாணவர்களும் போதைப் பழக்கத்திலிருந்து மீள்வதற்கான சிகிச்சை மற்றும் ஆலோசனைத் திட்டத்தில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    71 மாணவர்கள், 37 மாணவிகள் பங்கேற்பு

    உரிய அனுமதியின்றி பண்ணை வீட்டில் பார்ட்டி நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், செவெல்லா போலீசார் சிறப்பு நடவடிக்கைக் குழுவினரின் (SOT) உதவியுடன் சோதனை நடத்தினர்.

    Advertisement

    இந்தப் பார்ட்டியில் 71 மாணவர்களும், 37 மாணவிகளும் என மொத்தம் 108 பேர் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்டு ஃபைனான்சியல் அனாலிசிஸ் ஆஃப் இந்தியா (ICFAI) மற்றும் ஐசிஎஃப்ஏஐ பிசினஸ் ஸ்கூல் (IBS) கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் என்பது தெரியவந்தது.

    'நீங்கள் செய்தது ஸ்கேம்'.. பெங்களூரு சௌபிகாவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்.. என்ன நடந்தது?

    7 கார்கள், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

    பண்ணை வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது, விசாரணையின் ஒரு பகுதியாக 7 கார்கள், 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 70 செல்போன்களை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து செவெல்லா காவல் நிலைய ஆய்வாளர் நரேந்திர ரெட்டி கூறுகையில், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

    English Summary

    108 Students Found at Farmhouse Party in Hyderabad’s Chevella. Police raided an alleged party at a farmhouse in Chevella and found 108 students. Four tested positive for cannabis consumption. Police reportedly seized ganja, 7 cars, 3 bikes and 70 mobile phones. Further investigation is underway,