என்னுடைய அந்தரங்க வீடியோ, புகைப்படங்களை பரப்பினால் கடும் நடவடிக்கை .. நடிகை சுரேகா வாணி வார்னிங்

  • ஹைதராபாத்: என்னுடைய தனிப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அனுமதியின்றி பகிரப்பட்டு வருவதாக கவலை தெரிவித்துள்ள நடிகை சுரேகா வாணி, அதனைப் பகிர்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார். தெலுங்கு நடிகை சுரேகா வாணியின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இன்று காலை முதலே சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வந்த நிலையில் , இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

    Advertisement

    'ஜபர்தஸ்த்', 'பத்ரா', 'சீதம்மா வாகிட்லோ சிரிமல்லே செட்டு', 'ரேஸ் குர்ரம்', 'தூக்குடு' உள்ளிட்ட பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை சுரேகா வாணி. இவர் தமிழில் விஜய்யின் ஜில்லா, மெர்சல், மாஸ்டர்; அஜித்தின் விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதேபோல் அனபெல் சேதுபதி, மதில் மேல் காதல், உத்தம புத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், உதயம் NH4 உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

    Advertisement

    49 வயதாகும் நடிகை சுரேகா வாணியின் தனிப்பட்ட அந்தரங்க புகைப்படங்களை சிலர் பகிர்ந்து வருகிறார்கள். இதுபற்றி எச்சரிக்கை விடுத்துள்ள அவர், தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்கள் தனது அனுமதியின்றி பகிரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்குக் காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

    திண்டுக்கல்லில் கல்விப்பணிக்காக கிறிஸ்தவ அமைப்புக்கு தரப்பட்ட 2000 கோடி நிலம்.. ஐகோர்ட் கேள்வி

    சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள கடுமையான அறிக்கையில், மீம் பக்கங்கள், ஊடக நிறுவனங்கள், யூடியூப் சேனல்கள் மற்றும் தனிநபர்களுக்கு நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட எந்தவொரு உள்ளடக்கத்தையும் பகிரவோ, மறுபதிவு செய்யவோ அல்லது பதிவேற்றம் செய்யவோ வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

    Advertisement

    தொடர்ந்து அவற்றைப் பகிர்பவர்கள் யார் என்பது கண்டறியப்படும் என்றும், அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்ட பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

    மேலும், வியூஸ்களை அதிகரிப்பதற்காகவும், பாலோயர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும் மற்றும் விளம்பரப் பிரபலத்தை அதிகரிப்பதற்காக இந்தச் சம்பவத்தை யாரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் சமூக வலைதளப் பயனர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது என்றும், ஒருவரின் அனுமதியின்றி அவருடைய தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தவோ பகிரவோ யாருக்கும் உரிமை இல்லை என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

    Advertisement
    ஆசை காட்டிய புரோக்கர்.. ரோல்ஸ் ராய்ஸ் கார் தருவதாக ஆஃபர்! சினிமா மேனேஜரின் முகத்திரையை கிழித்த நடிகை

    இந்தச் சம்பவம் இணையதளத் தனியுரிமை மற்றும் சமூக வலைதளங்களில் தனிப்பட்ட தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்த விவாதத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. தனது தனியுரிமையை மீறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டிருப்பதை நடிகை சுரேகா வாணியின் எச்சரிக்கை தெளிவுபடுத்தியிருக்கிறது.

    English Summary

    Actress Surekha Vani has expressed concern over a private video of hers being shared on social media without her consent, and has issued a stern warning that legal action will be taken against those who circulate it. This warning comes as private photographs and videos of the Telugu actress began spreading rapidly across social media platforms earlier today.