கழற்றப்பட்ட சட்டை.. பனியனுடன் நின்ற சீனியர் எதிர்க்கட்சி எம்எல்ஏ.. சட்டசபை வாசலில் பரபரப்பு

  • ஹைதராபாத்: தெலங்கானா சட்டசபை கூட்டத்தொடர் இன்று திங்கள்கிழமை பரபரப்புடன் தொடங்கியது. தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை எனக் கூறி, எதிர்க்கட்சியான பிஆர்எஸ் எம்எல்ஏக்கள் கருப்பு டி-ஷர்ட் அணிந்து சட்டசபைக்கு வந்த நிலையில், அவர்களை வாசலிலேயே போலீசார் தடுத்து நிறுத்தியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

    Advertisement

    தமிழ்நாட்டை போலவே இப்போது தெலுங்கானாவிலும் சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் நிலையில், பிஆர்எஸ் கட்சி எதிர்க்கட்சியாக உள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என சொல்லி, அதை விமர்சிக்கும் வகையில் கருப்பு டி-ஷர்ட் அணிந்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வந்தனர்.

    Advertisement

    கருப்பு டிசர்ட்

    காங்கிரஸை விமர்சிக்கும் வகையிலான வாசகம் இடம்பெற்ற கருப்பு டி-ஷர்ட்டுகளை அணிந்திருந்த பிஆர்எஸ் எம்எல்ஏக்கள், சட்டசபை வளாகத்துக்குள் செல்ல முயன்றனர். ஆனால், எந்தவொரு வாசகமும் இருக்கும் டி-ஷர்ட்டுகளையும் சட்டசபைக்குள் அனுமதிக்க முடியாது என போலீசார் தெரிவித்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    தள்ளுமுள்ளு

    பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி. ராமா ராவ், துணைத் தலைவர் டி. ஹரிஷ் ராவ், முன்னாள் அமைச்சர் ஜி. ஜகதீஷ் ரெட்டி உள்ளிட்ட பலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த தள்ளுமுள்ளில் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சட்டசபை வாசல் அருகே நின்றிருந்த பிஆர்எஸ் பெண் எம்எல்ஏக்களையும் போலீசார் அங்கிருந்து தள்ளியதாக அக்கட்சியினர் குற்றஞ்சாட்டினர். குற்றம்சாட்டியது. பி. சபிதா இந்திரா ரெட்டி, கோவா லட்சுமி ஆகியோருடன் இருந்த எம்எல்ஏ வி. சுனிதா லட்சுமா ரெட்டியின் கால்களை போலீசார் மிதித்ததாகவும், இதனால் காயம் ஏற்பட்டதாகவும் பிஆர்எஸ் தெரிவித்துள்ளது.

    Advertisement

    மேலும், தங்கள் எம்எல்ஏக்களின் உதவியாளர்களிடம் போலீசார் அத்துமீறி நடந்துகொண்டதாகவும், ராமா ராவின் பிஆர்ஓ மகேஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் பிஆர்எஸ் குற்றம்சாட்டியுள்ளது.

    சரமாரி கேள்வி

    கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்த உரிமை இருக்கும் நிலையில், தெலுங்கானாவில் பிஆர்எஸ் எம்எல்ஏக்களை மட்டும் ஏன் தடுக்க வேண்டும் என கே.டி. ராமா ராவ் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்த அனுமதிக்கப்படும் நிலையில், தெலுங்கானாவில் பிஆர்எஸ் உறுப்பினர்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    Advertisement

    வாசகம் அடங்கியிருந்த டி சர்ட்டை போலீசார் மறுத்ததைத் தொடர்ந்து, ஹரிஷ் ராவ் உள்ளிட்ட பிஆர்எஸ் எம்எல்ஏக்கள் தங்களது டி-ஷர்ட்டுகளை கழற்றினர். அதன் பிறகு சட்டசபைக்குள் தங்களை அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரினர். ஆனால், போலீசார் அவர்களை கைது செய்து தெலுங்கானா பவனுக்கு அழைத்து சென்றனர். அதே நேரத்தில் சாதாரண உடையில் வந்திருந்த பிஆர்எஸ் உறுப்பினர்கள் சட்டசபைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    1000 நாள் ஆச்சு

    முன்னதாக பிஆர்எஸ் எம்எல்ஏக்கள் கன் பார்க்கில் உள்ள தெலுங்கானா தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு சட்டசபைக்கு சென்றனர். அப்போது பேசிய மாஜி முதல்வர் கேசிஆரின் மகன் கே.டி. ராமா ராவ், "பல்வேறு தரப்பினரின் பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்க சட்டசபை கூட்டத்தொடரை ஒரு மாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும். அரசு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என அனைத்து தரப்பினரின் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க வேண்டும்.

    Advertisement

    காங்கிரஸ் அரசு 420 வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்திருந்தது. 100 நாட்களுக்குள் அவற்றை நிறைவேற்றுவதாக உறுதியளித்திருந்தனர். இதனால் தான் மக்கள் அவர்களுக்கு வாக்களித்தனர். ஆனால், 1,000 நாட்கள் கடந்தும் அவற்றை நிறைவேற்றவில்லை. தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக அரசிடம் கேள்வி எழுப்ப போகிறோம்" என்றார்.

    English Summary

    Tension erupted outside the Telangana Assembly after BRS MLAs wearing black T-shirts with slogans criticising the Congress government(தெலுங்கானா சட்டசபையில் குழப்பம்): Telangana Assembly latest news in tamil.