தமிழ்நாட்டில் பில்லி சூனியம் வச்சுட்டாங்க.. தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பரபர குற்றச்சாட்டு

  • ஹைதராபாத்: தெலுங்கானாவில் எதிர்க்கட்சியாக உள்ள பிஆர்எஸ் கட்சியினர் தனது ஆட்சிக்கு எதிராக பில்லி சூனியம் வைப்பதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார். தெலுங்கானாவில் மழை பெய்யக்கூடாது.. வறட்சி ஏற்பட வேண்டும் என்பதற்காக தமிழகத்திற்கு சென்று பில்லி சூனியம் வைத்துள்ளதாகவும் சாடியுள்ளார்.

    Advertisement

    தெலுங்கானாவில் இப்போது ரேவ்ந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. கடந்த 2023 முதலே ரேவந்த் ரெட்டி தான் முதல்வராக இருந்து வருகிறார். அந்த தேர்தலில் காங்கிரஸ் பிரம்மாண்ட வெற்றியை பெற்றதால் எதிர்க்கட்சியினருக்கு அங்கு போதிய வாய்ஸ் இல்லை. இதற்கிடையே தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, அங்கு எதிர்க்கட்சியாக உள்ள பிஆர்எஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார்.

    Advertisement

    பில்லி சூனியம்

    பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவரான ஹரிஷ் ராவும் அவரது ஆதரவாளர்களும் அண்டை மாநிலங்களுக்கு சென்று பில்லி சூனியம் உள்ளிட்ட பிளாக் மாஜிக் பூஜைகள் மற்றும் மாந்திரீக சடங்குகளை செய்ததாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தெலங்கானாவில் வறட்சி ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த சடங்குகள் செய்யப்பட்டதாக ரேவந்த் ரெட்டி சாடியுள்ளார்.

    முலுகு மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ரேவந்த் ரெட்டி, எதிர்க்கட்சியுடன் தொடர்புடைய ஒருவர் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவுக்குச் சென்று பில்லி சூனிய பூஜைகள் மற்றும் மாந்திரீகச் சடங்குகளை செய்ததாகக் கூறினார். தெலங்கானாவில் மழை பெய்யாமல் போக வேண்டும் என்றும், இதனால் மக்கள் பாதிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் விரும்பியதாக ரேவந்த் ரெட்டி குற்றஞ்சாட்டினார்.

    Advertisement

    தமிழ்நாட்டிற்கு சென்று!

    இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "சிலர் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டுக்கு சென்று வறட்சி ஏற்பட வேண்டும்.. மக்கள் உயிரிழக்க வேண்டும்.. அரசு மீது அவப்பெயர் ஏற்பட வேண்டும் என அகோரா பூஜைகளை செய்தனர். இதுபோன்ற தீய எண்ணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எத்தனை மாந்திரீக பூஜைகள் செய்தாலும் கடவுள் அவர்களுடன் இல்லை. கடவுள் எங்களுடன் இருக்கிறார். ஏனென்றால் நாங்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இருக்கிறோம்.

    அவர்கள் செய்த மாந்திரீக பூஜைகளுக்கு எந்தவொரு பலரும் கிடைக்கவில்லை. தெலங்கானாவில் இப்போது நல்ல மழை பெய்து வருகிறது. மோசமான வானிலை நிலவும் போதிலும் எல்லம்பள்ளி திட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அவர்கள் மாந்திரீக பூஜைகளை செய்தாலும் கூட கடவுள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது" என்றார்.

    Advertisement

    தெலுங்கானா

    தெலுங்கானாவை பொறுத்தவரை அங்கு வழக்கமாக ஜூலை இறுதியில் தொடங்கும் மழை செப்டம்பர் வரையிலும் தொடரும். மாநிலம் முழுக்க சீராக மழை பெய்யும். இந்தாண்டு ஓரளவுக்கு மழை இருந்தாலும் கூட எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. இந்த சூழலில் தான் எதிர்க்கட்சிகள் மாந்திரீக பூஜைகளை செய்து மழையை தடுத்துவிட்டதாக ரேவந்த் ரெட்டி சாடியுள்ளார்.

    மறுப்பு

    அதேநேரம் ரேவந்த் ரெட்டியின் குற்றச்சாட்டுகளை பிஆர்எஸ் கட்சியின் ஹரிஷ் ராவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தன் மீது இதுபோல அவதூறான குற்றச்சாட்டுகளை சொல்வதன் மூலம் ஆட்சியில் உள்ள பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப முதல்வர் முயல்வதாக அவர் குற்றஞ்சாட்டினார். அவர் மேலும், "இதை எல்லாம் கண்டு நான் அச்சப்பட மாட்டேன்.

    Advertisement

    விவசாயிகள், மாணவர்கள் மற்றும் தெலங்கானா மக்களின் சார்பாக அரசிடம் தொடர்ந்து கேள்வி எழுப்புவேன். மேலும், பல்வேறு தரப்பினரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தொடர்ந்து எழுப்புவேன். அரசின் செயலற்ற தன்மை குறித்து கேள்வி எழுப்புவதை நிறுத்த போவதில்லை" என்றார். மேலும், இதுபோன்ற பொய்யான குற்றச்சாடுகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதற்கு முன்பும் கூட ஹரிஷ் ராவ் மாந்திரீக பூஜை செய்ததாக தெலங்கானா காங்கிரஸ் தலைவர் மகேஷ் குமார் கவுட் மற்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சமா ராம்மோகன் ரெட்டி ஆகியோர் கூறியிருந்தனர். இப்போது தெலுங்கானா முதல்வரே இதுபோல பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    English Summary

    Telangana CM Revanth Reddy has accused BRS leaders of performing black magic rituals in Tamil Nadu(மாந்திரீக செயல்கள் குறித்து தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு): Telangana CM Revanth Reddy on Black Magic allegation.