தெலுங்கானா தர்காவில் பகீர் சம்பவம்.. கணவனின் போனை தொட்ட மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

  • ஹைதராபாத்: தெலுங்கானாவில் போலியான அடையாளத்துடன் ஒருவர் நடமாடி வந்துள்ளார்.. தன்னுடைய பெயரை மறைத்துவிட்டார்.. ஊரை மறைத்து விட்டார்.. தன்னை ஆதரவற்றவர் என்றும் சொன்னார்.. அனாதை என்றும் நாடகமாடினார்.. இதையெல்லாம் உண்மை என்று நம்பியிருக்கிறார்கள் பரிதாப தம்பதி.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா? போலி ஆசாமியின் உண்மை பின்னணியைக் கேட்டுப் காவல்துறையினரே அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்..!!

    Advertisement

    தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள குண்ட்ரெட்டிபள்ளி கிராமத்தை சேர்ந்த தம்பதி மன்னே மற்றும் சுஜாதா.. இவர்கள் 6 ஆண்டுகளுக்கு முன்பு மேட்சல் பகுதியில் அமைந்துள்ள கவுகூர் தர்காவிற்கு வழிபாட்டிற்காக சென்றிருந்தனர்.

    Advertisement

    அப்போது அங்கு அறிமுகமான நபர் ஒருவர், தான் ஆதரவற்ற அனாதை என்றும், தனக்கு இந்த உலகத்தில் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாருமே இல்லை என்றும் சொல்லி பரிதாபமாக பேசியிருக்கிறார்.. அவரது பேச்சை நம்பிய மன்னே தம்பதியினர், அவருக்கு உதவ எண்ணி தங்களது கிராமத்திற்கே அழைத்து வந்து தங்களோடு தங்க வைத்துக் கொண்டனர்.

    அனாதை என்று சொன்ன நபர்

    நாளடைவில் மன்னேவின் குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமாக பழக தொடங்கிய அந்த நபர், மன்னேவின் 2வது மகளிடம் காதலை வளர்த்து வந்துள்ளார்.

    அனாதையான தனக்கு, இப்படியொரு ஆதரவும், அன்பும் கிடைப்பது இந்த குடும்பத்தில்தான் என்றெல்லாம் அடிக்கடி சொல்லி கொண்டேயிருப்பாராம் அந்த நபர்.. இதையும் உண்மையென பெற்றோர் நம்பி வந்துள்ளனர். தன்னுடைய மகளை காதலிக்கிறார் என்று தெரிந்தும்கூட, அந்த காதலை ஏற்றுக் கொண்டுள்ளனர். அதனால் கடந்த மே மாதம் தன் மகளை அவருக்கு முறைப்படி திருமணமும் செய்து வைத்தனர்.

    Advertisement

    செல்போனில் அதிர்ச்சி

    திருமணத்திற்கு பிறகும் அந்த நபர் வேலை விஷயம் என்று காரணம் சொல்லி அடிக்கடி மியாபூர் பகுதிக்கு சென்று வருவதையே வழக்கமாக கொண்டிருந்தார். அடிக்கடி கணவர் மியாபூர் பகுதிக்கு செல்வது மனைவிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.. அதனால் கணவரை கண்காணிக்க துவங்கினார்.. அவருக்கு எந்த க்ளூவும் கிடைக்கவில்லை.. ஒருநாள் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது செல்போனை எடுத்து பார்த்தபோது மனைவிக்கு தூக்கி வாரிப்போட்டுள்ளது.

    செல்போனில் கணவர் பல பெண்களுடன் தகாத முறையில் இருக்கும் ஆபாச வீடியோக்கள் நிறைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.. பிறகு கணவர் வீட்டுக்கு வந்ததுமே, இந்த வீடியோக்களை காட்டி கேள்வி எழுப்பினார்.. மனைவியிடம் செல்போன் சிக்கிவிடும் என்பதை கணவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. இதனால் தன் தவறை மறைக்க மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.. அத்துடன் அன்றைய இரவே கிராமத்தை விட்டுத் தப்பி ஓடிவிட்டார்.

    Advertisement

    மதமும் பெயரும் வேறு

    சில நாட்கள் கழித்து அவர் மீண்டும் கிராமத்திற்கு வந்தார்.. இதை கேள்விப்பட்ட மனைவி, உடனே கிராம மக்களிடம் நடந்த அனைத்து விஷயங்களையும் சொன்னார்.. இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் அந்த நபரை வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர்... அப்போதுதான் அந்த நபர், உண்மை அனைத்தையும் ஒன்றுவிடாமல் கக்கினார்..

    அதாவது இந்த நபருக்கு சொந்த ஊரில் அம்மா, தம்பி இருக்கிறார்களாம்.. உண்மையான மதத்தை மறைத்துவிட்டு, போலியான மத அடையாளத்துடன் வாழ்ந்து வந்ததையும், தன்னுடைய பெயர் ஹேமந்த் கிடையாது, நசார் என்றும் சொன்னார்..

    தீவிர விசாரணை

    இறுதியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நசாரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்..

    Advertisement

    ஆதரவற்றவர் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக், தங்கள் வீட்டிற்குள் சேர்த்து, தங்கள் பெண்ணையும் அவருக்கு கல்யாணம் செய்து வைத்த அந்த தம்பதியோ, இப்போது இடிந்து போய் உட்கார்ந்துள்ளனர்..!!!

    English Summary

    Telangana Dargah Love Trap! Wife Shocked After Finding Husband's Mobile Phone Videos