ஹைதராபாத்: ஒரு குடும்பத்துக்குள் ஏற்பட்ட சொத்துப் பிரச்சனை கடைசியில் எந்த அளவுக்குப் போயிருக்கிறது தெரியுமா? தெலங்கானாவில் கணவனை மரத்தில் கட்டி வைத்து கண்மூடித்தனமாக அடித்து துவைத்துள்ளார் மனைவி.. இதில் அந்த கணவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.. கணவனை அடித்தே கொன்ற பெண், போலீசில் சரணடைந்து விட்டார்.. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டம், அக்கன்னப்பேட்டை மண்டலத்தில் உள்ள சேவாலால் மகாராஜ் தண்டா பகுதியில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
உயிரிழந்தவர் பானோத்து பகவான் (43). இவரது மனைவி மாலோத்து ராஜேஸ்வரி. சுமார் 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இந்த 2 பேருக்குமே இது 2-வது திருமணம் என்கிறார்கள்.. ராஜேஸ்வரிக்கு முதல் திருமணம் மூலம் ஒரு மகள் இருக்கிறார். பகவானைத் திருமணம் செய்த பிறகு அவர்களுக்கு மேலும் ஒரு மகளும், ஒரு மகனும் பிறந்துள்ளனர். ஆக, குடும்பத்தில் 3 பிள்ளைகள். ராஜேஸ்வரியின் முதல் கணவர் மூலம் கிடைத்த சொத்தாக, ஹனுமகொண்டாவில் ஒரு வீடு இருக்கிறதாம்.. அந்த வீடு முதல் திருமணத்தில் பிறந்த மூத்த மகளின் பெயரில் இருந்துள்ளது. இந்த வீட்டை தன்னுடைய 2 பிள்ளைகளுக்கும் சேர்த்து மொத்தம் 3 பாகங்களாக சமமாக பிரிக்க வேண்டும் என்று பகவான் சொல்லி உள்ளார்.. ஆனால், அதற்கு ராஜேஸ்வரி சம்மதிக்கவில்லையாம். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருக்கும் ஒரே வீட்டை யாருக்குப் பிரித்துக் கொடுப்பது என்ற பிரச்சனை, குடும்பத்துக்குள் தொடர்ந்து மோதலையும், சண்டையையும் ஏற்படுத்தி வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு ராஜேஸ்வரி தன்னுடைய அம்மா வீட்டுக்குச் சென்றிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்ற பகவான், சொத்துப் பிரச்சனை தொடர்பாக மீண்டும் தகராறில் ஈடுபடுள்ளார்.. அப்போது அவர் மது அருந்தியிருந்ததாகவும் கூறப்படுகிறது.. வாக்குவாதம் முற்றிய நிலையில், ராஜேஸ்வரி பகவானின் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவியிருக்கிறார்.. அத்துடன் கணவரை மரத்தில் கட்டிவைத்து தாக்கியிருக்கிறார்.. இரும்புக் கம்பியால் கணவனின் தலையிலேயே ஒரே போடாக போட்டாராம்.. இதில் பகவான் ரத்த வெள்ளத்தில் உயிரிந்துள்ளார்.. கணவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ராஜேஸ்வரி போலீசில் சரணடைந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பகவானின் உடலை போஸ்ட் மார்ட்டத்துக்காக அனுப்பி வைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.. இதற்கிடையே, ராஜேஸ்வரியின் முதல் திருமணத்தில் பிறந்த மகளுக்கும் இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்களாம்.. அத்துடன் ராஜேஸ்வரியின் தந்தையின் பங்கு குறித்தும் விசாரணை நடக்கிறதாம். சொந்தமாக உழைக்காமல் அடுத்தவர் சொத்துக்கு ஏன் ஆசைப்படுகிறாய்? என்று ராஜேஸ்வரி கேட்டதால், இந்த பிரச்சனை கொலை வரை சென்றதாக சொல்கிறார்கள்.. ஆனால், பகவான் குடிபோதையிலேயே இருப்பவராம்.. முதல் மனைவி கொலை தொடர்பாக பகவான் மீது ஏற்கெனவே வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.. எனினும், ஒரேயொரு வீட்டை யாருக்குப் பிரித்துக் கொடுப்பது என்ற கேள்வியில் தொடங்கிய குடும்பத் தகராறு, உயிரிழப்பு வரை சென்றிருப்பது அங்குள்ள மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது.தெலங்கானா தம்பதி
திருநெல்வேலியில் ஆண் நண்பருக்குத் தங்க நகைகளைக் கொடுத்த மனைவி.. கணவனுக்கு காத்திருந்த ட்விஸ்ட்!
பாகப்பிரிவினை கேட்டு தகராறு
போலீஸ் ஸ்டேஷனிலும் தீராத பிரச்சனை.. நள்ளிரவில் தூங்கிய மனைவி! திருப்பூர் கணவன் செய்த அதிர்ச்சி செயல்
2வது கணவனை காலி செய்து..