தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கே ஆபத்து? அமைச்சரவையில் வெடித்த குழப்பம்.. அமைச்சர் பதவி பறிபோனது!

  • ஹைதராபாத்: ரேவந்த் ரெட்டி தலைமையிலான தெலுங்கானா அரசில் வனத்துறை அமைச்சராக இருந்தவர் சுரேகா.. இவருக்கும் ரேவந்த் ரெட்டிக்கும் இடையே நீண்ட காலமாக அரசியல் மோதல் இருப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் சுரேகாவின் மகள் சுஷ்மிதா நேரடியாக ரேவந்த் ரெட்டியை கடுமையாக விமர்சித்தார். இது பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், சுரேகா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    தெலுங்கானா காங்கிரஸில் நீடித்து வந்த உட்கட்சி மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அங்கு வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகாவை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்க முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.. சுரேகாவை நீக்குவதற்கான பரிந்துரை ஆளுநர் சிவ் பிரதாப் சுக்லாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    என்ன நடந்தது?

    சுரேகாவின் மகள் கொண்டா சுஷ்மிதா படேல், ரேவந்த் ரெட்டியை கடுமையாக விமர்சித்து வந்தார். அந்த சர்ச்சை காரணமாகவே இப்போது சுரேகா அமைச்சரின் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    சமீபத்தில் பார்க்காலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ரேவந்த் ரெட்டி, தற்போதைய காங்கிரஸ் எம்எல்ஏ ரேவூரி பிரகாஷ் ரெட்டியை மீண்டும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார். இதற்கு அமைச்சர் சுரேகாவின் மகன் சுஷ்மிதா படேல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவர், "எனது பகுதியான கொண்டாவுக்கு வந்து பிரகாஷ் ரெட்டியை மீண்டும் தேர்ந்தெடுக்குமாறு ஏன் கேட்கிறீர்கள்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

    Advertisement

    சுஷ்மிதா கோபம்

    அடுத்த தேர்தலில் பார்க்கால் தொகுதியில் போட்டியிட சுஷ்மிதா விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படும் நிலையில், ரேவந்த் ரெட்டி அவரது பெயரை தவிர்த்துவிட்டு ரேவூரி பிரகாஷ் வெல்ல வேண்டும் என சொன்னதால் சுஷ்மிதா கோமடைந்துள்ளார். அத்தோடு நிற்காமல் ரேவந்த் ரெட்டியும் அவரது சகோதரர்களும் மாநிலத்தை சுரண்டுவதாகவும், ரூ.200 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மற்றும் ஷெல் நிறுவனம் தொடர்பாகவும் சுஷ்மிதா குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முதல்வரை சுற்றியுள்ளவர்கள் கமிஷன் அரசியல் செய்வதாகவும் அவர் விமர்சித்தார்.

    விளக்கம்

    சுஷ்மிதாவின் பேச்சுக்கு தெலுங்கானா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது தாயான சுரேகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர். இதையடுத்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு சுரேகாவிடம் விளக்கம் கேட்டது. ஆனால், தனது மகளின் கருத்துகளுக்கு தான் பொறுப்பேற்க முடியாது என்று சுரேகா தெரிவித்தார். உறவினர் என்பதற்காக மட்டும் மற்றொருவரின் அரசியல் கருத்துகளுக்கு விளக்கம் கேட்பது சரியாக இருக்காது என்றும் கூறினார்.

    Advertisement

    இருப்பினும், இந்த விளக்கத்தால் தெலுங்கானா காங்கிரஸ் தலைமை திருப்தி அடையவில்லை. சுரேகாவை அமைச்சரவையில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படியே இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட போதிலும், தான் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேற போவதில்லை என்று சுரேகா தெரிவித்துள்ளார்.

    மாற்றம்

    இது மட்டுமின்றி தெலுங்கானாவில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. தெலுங்கானா திட்டக்குழு துணை தலைவர் பதவியில் இருந்த ஜி. சின்னா ரெட்டியின் நியமனம் ரத்து செய்யப்பட்டு, கத்வால் விஜயலட்சுமி புதிய துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா மகளிர் ஆணையத் தலைவராக நெரெல்லா சாரதாவும், காகத்தியா நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய தலைவராக முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் சுதா ராணியும் நியமிக்கப்பட உள்ளனர். இப்படி அங்கு உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது.

    English Summary

    Telangana Chief Minister Revanth Reddy has ordered the removal of Forest Minister Konda Surekha from the cabinet(தெலுங்கானா அமைச்சரவையில் மாற்றம்): Telangana politics latest news in tamil.