நைட்டியுடன் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளே யார்னு பாருங்க.. சிசிடிவியை பார்த்து அதிர்ந்த தெலுங்கானா போலீஸ்

  • ஹைதராபாத்: ஆம்புலன்ஸில் வந்தவர்கள், நைட்டி அணிந்து முகத்தையும் மறைத்துக்கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துப் பணத்தைக் கொள்ளையடித்திருக்கிறார்கள்.. தெலங்கானாவில் நடந்த இந்தச் சம்பவத்தில், கொள்ளையர்கள் பயன்படுத்திய ஆம்புலன்ஸ் உண்மையானதா? என்ற டவுட்டும் இப்போது எழுந்துள்ளது.. கொள்ளையர்கள் இப்படியெல்லாம்கூட திட்டம் போடுவார்களா என்று கேட்கும் அளவுக்கு நடந்திருக்கிறது இந்தச் சம்பவம்.. அப்படி என்ன நடந்தது?

    Advertisement

    தெலங்கானா மாநிலம், காமாரெட்டி மாவட்டம், காந்தாரி பகுதியில் சாலையோரத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் இருக்கிறது.. காலை நேரத்தில் இந்த ஏடிஎம் மிஷின் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்த உள்ளூர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்..

    Advertisement

    பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம்

    உடனடியாக போலீசாருக்குத் தகவல் தந்தார்கள்.. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அங்கு இருந்த தடயங்களைச் சேகரித்தனர்.. தடயவியல் உதவிக் குழுவும் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், ஏடிஎம் மையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.. அப்போதுதான் அதில் பதிவான காட்சிகளை கண்டு அதிர்ந்தனர்.

    அக்டோபர் 11-ம் தேதி அதிகாலை 1 மணி முதல் 1.30 மணிக்குள், இந்த எஸ்பிஐ ஏடிஎம் மையத்துக்கு ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது.. அதிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள் நைட்டி அணிந்திருந்தனர்.. முகத்தை மாஸ்க் போட்டு மறைத்திருந்தனர்.. பெண்கள் போல வேடமிட்டு வந்த அவர்கள், ஏடிஎம் இயந்திரத்தை உடைப்பதற்காக கட்டிங் கருவிகளையும் கொண்டு வந்திருந்தனர்..

    Advertisement
    கரூர் எஸ்பிஐ வங்கியில் 4 பேர்.. லாக்கரை உடைக்கும்போது என்ன நடந்தது தெரியுமா? அரண்ட அரவக்குறிச்சி

    கேஸ் கட்டர் மாஸ்க்

    பிறகு கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை வெட்டி உடைத்து, உள்ளே இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.. இந்தக் காட்சிகள் அனைத்துமே சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.. இதைடுத்து போலீசார் கொள்ளையர்கள் யார், சம்பவத்துக்கு முன்பு எங்கெல்லாம் சென்றார்கள், கொள்ளைக்குப் பிறகு எந்த வழியாகத் தப்பிச் சென்றார்கள் என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

    ஆனால், இந்த ஏடிஎம்மிலிருந்து எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்பது, இதுவரை போலீசாருக்கே தெரியவில்லையாம்.. மிஷினல் இருந்த பணத்தின் இருப்பை கணக்கிட்ட பிறகுதான், எவ்வளவு ரூபாய் திருடப்பட்டது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும் என்கிறார்கள்.

    Advertisement

    ஆம்புலன்ஸில் ஏன் வரணும்

    அதேபோல், கொள்ளையர்கள் பயன்படுத்திய ஆம்புலன்ஸ் உண்மையான ஆம்புலன்ஸ்தானா அல்லது வேறு வாகனத்தை ஆம்புலன்ஸ் போல மாற்றிப் பயன்படுத்தினார்களா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.. கொள்ளையடிப்பதற்கு எதற்காக ஆம்புலன்ஸை பயன்படுத்தினார்கள்? அது கொள்ளையர்களுக்கு எப்படிப் பயன்பட்டது? சாலைகளில் எளிதாகச் செல்லவும், யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்கவும் இந்த வண்டியை பயன்படுத்தினார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

    வங்கி டெபாசிட், செல்வ மகள் சேமிப்பு, பொன்மகன் சேமிப்பு, பிஎப் சேமிப்பு உள்ளவர்களுக்கு குட்நியூஸ்

    தெலங்கானா சம்பவம்

    சில வாரங்களுக்கு முன்பு, தெலங்கானாவின் கரீம்நகர் புறநகர்ப் பகுதிகளில் இதேபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.. அதாவது செப்டம்பர் 19-ம் தேதி துர்ஷெட், திம்மாபூர் பகுதிகளில் இருந்த 2 எஸ்பிஐ ஏடிஎம்களை குறிவைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்..

    Advertisement

    அந்த சம்பவங்களிலும் கேஸ் கட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளன.. அப்போதும், இதேபோல நைட்டியுடன் வந்து, சிசிடிவி கேமராவை தடுக்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகின..

    அதனால், காமாரெட்டியில் இப்போது நடந்த கொள்ளைக்கும், கரீம்நகர் பகுதியில் ஏற்கெனவே நடந்த கொள்ளை முயற்சிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.. ஆனால், இந்த சம்பவங்கள் அனைத்தையும் ஒரே கும்பல் செய்ததாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை..

    நைட்டி, மாஸ்க், ஆம்புலன்ஸ், கேஸ் கட்டர் எனத் திட்டமிட்டு வந்த இந்தக் கொள்ளையர்கள் யார்? அவர்கள் பயன்படுத்திய வாகனம் உண்மையானதா? ஏற்கனவே நடந்த சம்பவங்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? சிசிடிவி காட்சிகளையும் சேகரிக்கப்பட்ட தடயங்களையும் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்..!!!

    English Summary

    Telangana SBI ATM incident.. Who Was This Nightie-Clad Visitor? CCTV Left Police Stunned