இனியும் தாங்க முடியாது! எல்லை மீறிய ஆன்லைன் ட்ரோலிங்.. அரசு வேலையையே விட்ட ஆசிரியை

  • ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் புக்யா கவுதமி என்பவர் போட்ட சில ரீல்ஸ் இன்ஸ்டாகிராமில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் சாடியிருந்த நிலையில், அவருக்கு எதிரான ஆன்லைன் ட்ரோல்களும் அதிகரித்தன. இதை தாங்க முடியாமல் அவர் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். சுமார் 12 ஆண்டுகளாக ஆசையாக செய்த ஆசிரியர் பணியில் இருந்து கண்ணீருடன் விலகுவதாக அவர் கூறியிருக்கிறார்.

    Advertisement

    அரசு பணிகளில் இருப்போர் எப்போதும் தனியார் சார்ந்த விஷயங்களை புரோமோட் செய்யக்கூடாது. ஆனால், இந்த விதிகளை பற்றி கவலையில்லாமல் சிலர் ஏதேதோ தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள். அதுவே அவர்களுக்கு எதிராகவும் போய்விடுகிறது. அப்படியொரு சம்பவம் தான் தெலுங்கானாவில் நடந்துள்ளது.

    Advertisement

    ராஜினாமா

    கம்மம் மாவட்டம் மாமில்லகுடேம் அரசு உயர்நிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தவர் புக்யா கவுதமி.. இவர் தான் தனது ஆசிரியர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அதில் கடந்த சில மாதங்களாக சந்தித்த அவமானம், மன அழுத்தம் மற்றும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருவதாகவும் இனியும் இதை தாங்க முடியாது என்றும் சொல்லி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    என்ன நடந்தது

    கடந்த ஜனவரி மாதம் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் குறிப்பிட்ட தனியார் பள்ளியில் மாணவர்களை சேர்க்குமாறு அவர் சொன்னதாக தெரிகிறது. அரசு பள்ளியில் வேலை செய்துவிட்டு இதுபோல தனியார் பள்ளியில் மாணவர்களை சேர சொல்வது எந்த விதத்தில் நியாயம் என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பினர். இது கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றது. அதைத் தொடர்ந்து புக்யா கவுதமி மீது நடவடிக்கை எடுத்த கல்வி துறை அதிகாரிகள் அவரை, பணியிடை நீக்கம் செய்தனர்.

    Advertisement

    இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், சர்ச்சைக்குரிய ரீல்ஸ் அனைத்தும் தனது வீட்டில் தான் படமாக்கப்பட்டவை என்றும், பள்ளி நேரத்தில் எந்த வீடியோவும் பதிவு செய்யவில்லை என்றும் விளக்கம் அளித்தார். மேலும், கடந்த 12 ஆண்டுகளாக தனது ஆசிரியர் பணியை முழு அர்ப்பணிப்புடன் செய்ததாகவும் தெரிவித்தார். சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு பிறகு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டாலும், மாவட்ட கல்வி அதிகாரியால் தான் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டதாக புக்யா கவுதமி வேதனை தெரிவித்துள்ளார்..

    அவமானப்படுத்தினர்

    மீண்டும் பணியில் சேர்க்குமாறு அதிகாரிகளை சந்திக்க சென்றபோது, பல மணி நேரம் காத்திருக்க வைத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். தன்னை சந்திக்கவே விடாமல் அலைக்கழித்ததாகவும் கடைசியாக சந்தித்த போதும் தன்னிடம் விளக்கம் கேட்காமலேயே தன்னை கண்டித்ததாகவும் அவர் கூறியுள்ளார். பணியிடத்தில் ஏற்பட்ட இந்த மன அழுத்தமும், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்த ட்ரோலிங் காரணமாக தனது மனநிலையை கடுமையாக பாதித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    ராஜினாமா

    தான் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பழங்குடியினர் குடும்பத்தை சேர்ந்தவர் தான் என்றும், தனது தந்தை மற்றும் கணவரின் சப்போர்ட் செய்ததாலேயே ஆசிரியர் பணிக்கு வந்ததாகவும் புக்யா கவுதமி கூறியுள்ளார். ஏழை மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்பதே தனது வாழ்க்கை லட்சியம் என்றும் வழக்கமான வகுப்புகளை தாண்டி மாணவர்களுக்கு சிறப்பு ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளையும் நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும், தன்னை பற்றி புரிந்து கொள்ளாமல் ஆன்லைன் டிரோலிங் தொடர்ந்ததால் பணியில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக அவர் பதிவிட்டுள்ளார்.

    சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான ஆசிரியர்களில் ஒருவராக புக்யா கவுதமி அறியப்படுகிறார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 3.28 லட்சம் பாலோயர்ஸ்கள் உள்ளனர். தனது பணியை ராஜினாமா செய்வதாக இவர் பகிர்ந்த போஸ்ட் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.

    English Summary

    Telangana government school teacher Bhukya Gauthami has resigned after facing suspension, online trolling(அரசு வேலையில் இருந்து ராஜினாமா செய்த தெலுங்கானா மருத்துவர்): Telangana Teacher quits her govt job.