திருப்பதி லட்டில் அதென்ன நீளமா தொங்குது.. வைரல் வீடியோவை பார்த்து கொதித்த திருமலை! பயங்கர வார்னிங்

  • ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், உலகப்புகழ்பெற்ற ஸ்ரீவாரி லட்டு பிரசாதம் குறித்து சோஷியல் மீடியாவில் பரவிவரும் வீடியோ ஒன்ற, கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புனிதமான லட்டு பிரசாதத்திற்குள் நூல் இருப்பதாக அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.. இதை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சியடைந்து விட்டார்கள்.. எப்போது பார்த்தாலும் திருப்பதி லட்டு வைத்தே அவதூறுகளை சிலர் கிளப்பி வரும் நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் இப்போது கொந்தளித்து விட்டது.. என்ன நடந்தது?

    Advertisement

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் தொடர்பாக சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.

    Advertisement

    அதில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாங்கப்பட்ட லட்டு ஒன்றில் நூல் போன்ற பொருள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்த வீடியோ முற்றிலும் உண்மைக்கு மாறானது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.. இது தொடர்பான கண்டன அறிக்கையில் உள்ளதாவது:

    திருப்பதி தேவஸ்தானம்

    "திருப்பதி ஏழுமலையான் கோவிலின் இணையற்ற புனிதத்தன்மைக்கும் உலகளாவிய நற்பெயருக்கும் திட்டமிட்டுத் திட்டமிட்டு களங்கம் விளைவிக்கும் கேவலமான சதி வேலைகளின் ஒரு பகுதியாகவே இதுபோன்ற போலியான காணொளிகள் வடிக்கப்பட்டு வருகின்றன. கோடிக்கணக்கான பக்தர்களின் ஆழ்ந்த ஆன்மீக நம்பிக்கைகளைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் தீய வதந்திகளைப் பக்தர்கள் யாரும் நம்ப வேண்டாம்.

    Advertisement

    எந்தவிதமான உண்மையும் இல்லாமல், சற்றும் சரிபார்க்கப்படாத இதுபோன்ற காணொளிகளை எக்காரணம் கொண்டும் சமூக வலைத்தளங்களில் பகிர்வதோ அல்லது மற்றவர்களுக்கு அனுப்புவதோ கூடாது, அவ்வாறு பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும். சந்தேகத்திற்கிடமான எந்த தகவலாக இருந்தாலும் அதுபற்றி உடனடியாக தேவஸ்தான அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளது.

    லட்டு பிரசாதம்

    இதனிடையே, ஸ்ரீவாரி லட்டு பிரசாதம் தயாரிக்கப்படும் புனித நடைமுறைகளை தேவஸ்தான நிர்வாகம் விளக்கமாக தெரிவித்துள்ளது.. இதுகுறித்து அதிகாரிகள் சொல்லும்போது, "தினமும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கப்பட்டுவரும் லட்டுக்கள் அனைத்தும் மிகமிகப் பக்தி சிரத்தையுடனும், எந்தவொரு சிறிய சமரசத்திற்கும் இடமின்றி கடுமையான தூய்மை நெறிமுறைகளைப் பின்பற்றியும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    Advertisement

    ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்களின் நேரடி மற்றும் தீவிர மேற்பார்வையின் கீழ் லட்டு தயாரிப்புப் பணிகள் வினாடி வினாடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அத்தனை மூலப்பொருட்களும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இயந்திரங்கள் மூலம் துல்லியமாகப் பரிசோதிக்கப்பட்ட பிறகே சமையல் கூடத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. இதனால் லட்டு தயாரிப்பில் எந்தவிதமான மாசுகளும் அல்லது வெளிப்பொருட்களும் தற்செயலாகக்கூட கலப்பதற்கான வாய்ப்பே இல்லை.

    திருமலை தேவஸ்தானம் விளக்கம்

    பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் எங்கு எத்தகைய சந்தேகங்கள் எழுந்தாலும், அதனை உடனடியாக சமூக வலைத்தளங்களில் அவதூறாகப் பதிவிட்டு பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது. மாறாக, , உடனடியாகத் திருப்பதி தேவஸ்தான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு நேரடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    Advertisement

    கோவில் மற்றும் பிரசாதம் தொடர்பான அனைத்து விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கும் தேவஸ்தானத்தின் முறையான தகவல்களை மட்டுமே பக்தர்கள் முழுமையாக நம்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

    பக்தர்களின் ஆன்மீக உணர்வுகளுக்கு தொடர்ந்து மதிப்பளித்து வரும் தேவஸ்தானத்தின் இந்த அதிரடி நடவடிக்கைகள் இப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், சோஷியல் மீடியாவில் பரவும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளியும் வைத்துள்ளன....!!!

    English Summary

    Tirupati Laddu Viral Video.. What Is Hanging From the Laddu? Tirumala Tirupati Devasthanam Issues Strong Warning