நடுங்கிய ஹோட்டல் நிர்வாகம்.. 2 நாட்களாக ரெஸ்பான்ஸ் இல்லை.. ரூம் கதவை திறந்தபோது அதிர்ச்சி!

  • ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் அறையில் அமெரிக்காவை சேர்ந்த 41 வயது நபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இரண்டு நாட்களாக அவர் செல்போனை கூட எடுக்காமல் இருந்த நிலையில், ஹோட்டல் ஊழியர்கள் மாஸ்டர் சாவி மூலம் அறையை திறந்து பார்த்தபோது அவர் படுக்கையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    Advertisement

    இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக ஹைதராபாத் இருக்கிறது. இதனால் பிஸ்னஸ் சார்ந்த மீட்டிங்குகளில் பங்கேற்க வெளிநாடுகளை சேர்ந்த பலரும் ஹைதராபாத் வருகிறார்கள். அப்படி ஹைதராபாத் வந்த ஒருவர் தான் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

    Advertisement

    மர்ம மரணம்

    தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள எஸ்எல்என் டெர்மினஸ் வளாகத்தில் செயல்படும் மேரியட் எக்ஸிகியூட்டிவ் அபார்ட்மென்ட்ஸ் ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த மிட்செல் பிரையன் லீ என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பிஸ்னஸ் ரீதியான பயணமாக ஹைதராபாத் வந்திருந்த நிலையில், ஹோட்டல் அறையிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்கா இடைக்கால தேர்தல்.. டிரம்ப் தோற்றால் அடுத்து என்ன நடக்கும்? பெரிய சிக்கலே இருக்கு!

    மிட்செல் பிரையன் லீ தனது பிஸ்னஸ் பார்ட்னரான டேவிட் என்பவருடன் கடந்த நவம்பர் 2-ம் தேதி ஹைதராபாத் வந்துள்ளார். இருவரும் கச்சிபௌலியில் உள்ள மேரியட் எக்ஸிகியூட்டிவ் அபார்ட்மென்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்தனர். லீ அந்த ஹோட்டலின் 12வது மாடியில் தங்கியிருந்தார். இந்நிலையில் நவம்பர் 4ம் தேதி மாலை முதல் லீயை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை. அவரை தொடர்புகொள்ள பலமுறை முயற்சி செய்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால் ஹோட்டல் ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    Advertisement

    மாஸ்டர் சாவி

    இதையடுத்து நவம்பர் 5ம் தேதி மாலை சுமார் 6.30 மணியளவில் ஹோட்டல் ஊழியர்கள் மாஸ்டர் சாவியை பயன்படுத்தி லீ தங்கியிருந்த ரூமை திறந்துள்ளனர். அப்போது அவர் படுக்கையில் அசைவற்ற நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக 108 அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து ஹோட்டலுக்கு வந்த மருத்துவ பணியாளர்கள் லீயை பரிசோதித்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஹோட்டல் நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தது.

    விரைந்த போலீசார்

    இதையடுத்து கச்சிபௌலி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஹோட்டல் ரூமை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர்கள், மிட்செல் பிரையன் லீயின் மரணம் தொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் உயிரிழந்ததற்கான காரணம் என்ன, நவம்பர் 4ம் தேதி மாலை முதல் அவர் செல்போன் கால்களுக்கு பதிலளிக்காததற்கான காரணம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தங்கியிருந்த ரூமில் வேறு யாராவது வந்து சென்றார்களா என்பது குறித்தும் விசாரணையில் கவனம் செலுத்தப்படுகிறது.

    Advertisement
    அடங்காத அமெரிக்கா.. ஈரானுக்கு உதவிய இந்திய தம்பதி + இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதார தடை! பின்னணி

    பிரேத பரிசோதனை

    தற்போது லீயின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே அவரது மரணத்துக்கான காரணம் குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் ஹைதராபாத் நட்சத்திர ஹோட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    US Man Found Dead in Hyderabad latest news in tamil(அமெரிக்க இளைஞர் இந்தியாவில் மரணம்): US Man died in India.