நெஞ்சில் குடியிருக்கும் விஜயவாடா மக்களே.. தெலுங்கில் உரையாற்றிய முதல்வர் விஜய்! பேசியது என்ன?

  • விசாகப்பட்டினம்: தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் இன்று ஆந்திர மாநிலம் சென்றார். கனக துர்கை அம்மன் கோவிலில் வழிபாடு நடத்திய முதல்வர் விஜய், அதன்பிறகு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இல்லம் சென்று ஆலோசனை செய்தார். பின்னர் புன்னமி காட்டில் உள்ள உத்சவ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்சியில் முதல்வர் விஜய் தெலுங்கில் உரையாற்றினார்.

    Advertisement

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெறும் உத்சவ் விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய் இன்று ஆந்திரா சென்றார். விஜயவாடாவில் நடைபெறும் உத்சவ் விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முதலவர் விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Advertisement

    அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனா, புஸ்சி ஆன்ந்த் ஆகியோரும் நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பேசினார். தெலுங்கு மொழியில் முதல்வர் விஜய் பேசியது அனைவரையும் கவனிக்க வைத்தது. விஜய் பேசியதாவது:-

    இரு மாநில வளர்ச்சி குறித்து சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோசனை நடத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நவராத்ரி நிகழ்ச்சியில் பங்கேற்றதை எனது பாக்கியமாக கருதுகிறேன்.

    Dummy முதலமைச்சர்.. பஞ்ச் டயலாக் சிஎம்? ஆந்திராவுக்கு பறந்தது இதற்காக தானா? விட்டு விளாசிய உதயநிதி!
    Advertisement

    சிறப்பான வரவேற்பு அளித்த ஆந்திர மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். விழாவுக்கு அழைத்த சந்திரபாபு நாயுடுவுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார். சில நிமிடங்கள் மட்டுமே பேசிய விஜய், தனது உரையை முடிக்கும் போது, என் நெஞ்சில் குடியிருக்கும் விஜயவாடா மக்களே எனக்கூறி தனது உரையை நிறைவு செய்தார். விஜய் இவ்வாறு கூறியதும் அங்கு இருக்கும் மக்கள் ஆர்பரித்தனர்.

    English Summary

    Vijay: Tamil Nadu Chief Minister Joseph Vijay visited Andhra Pradesh today. After offering prayers at the Kanaka Durga Temple, Chief Minister Vijay visited the residence of Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu for consultations. Later, he participated in an event held at the Utsav Grounds in Punnami Ghat, where he delivered a speech in Telugu.