இளைஞரின் வங்கி கணக்கிற்கு வந்த ரூ.10,000 கோடி.. ரூ.10,000 சம்பளம் வாங்கியவருக்கு காத்திருந்த ஷாக்

  • ஜெய்ப்பூர்: மாதம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கும் 22 வயது மெடிக்கல் ஊழியரின் வங்கி கணக்கில் திடீரென்று ரூ.10 ஆயிரம் கோடி பணம் வரவு வைக்கப்பட்டு இருந்த சம்பவம் நடந்துள்ளது. என்ன நடந்தது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியில் உள்ள சலாசர் பஸ் நிலையத்தின் அருகே நிர்மல் மெடிக்கல் உள்ளது. இந்த மெடிக்கலில சமீர் கான் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு மாத சம்பளம் ரூ.10 ஆயிரம்.

    Advertisement

    இவர் கடந்த 28 ம் தேதி தனது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய விரும்பினார். இதற்காக அவர் வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கியின் செயலியை திறந்தார். அதில் பேலன்ஸ் செக் செய்து பார்த்தார்.

    அப்போது பேலன்ஸ் பூஜ்ஜியம் என காண்பித்தது. மேலும் அதில் ரூ.10 ஆயிரம் கோடி Lien தொகையை காண்பித்தது. இதனால் அந்த சமீர்கான் அதிர்ச்சியடைந்தார். வங்கி கணக்கில் அவருக்கு சொந்தமான ரூ.55 ஆயிரம் இருந்தது. அதனையும் அவரால் பயன்படுத்த முடியாத அளவுக்கு வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டது. இதனால் சமீர் கான் அதிர்ச்சியடைந்தார்.

    Advertisement

    உடனடியாக மெடிக்கல் உரிமையாளர் தீரஜ் சர்மாவிடம் கூறினார். இருவரும் சிகார் சைபர் கிரைம் போலீசுக்கு சென்று சம்பவம் பற்றி தெரிவித்தனர். திடீரென்று சமீர் கான் அக்கவுண்ட்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வந்துள்ளதும், தற்போது வங்கி கணக்கில் உள்ளமொத்த பணமும் முடக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். போலீசார் அவர்களை வங்கிக்கு செல்லும்படி கூறினர். இருவரும் வங்கிக்கு சென்று பார்த்தனர். அப்போது வங்கி ஊழியர்கள் பிரச்சனையை சரிசெய்தனர்.

    ''தொழில்நுட்ப கோளாறு காரணமாக வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் கோடி காட்டுகிறது. இதனால் வங்கி கணக்கு முடக்கப்பட்டது'' என்று கூறி அந்த பிரச்சனையை சரிசெய்து கொடுத்தனர்.

    English Summary

    A 22-year-old medical worker, who earns a monthly salary of Rs. 10,000, suddenly found Rs. 10,000 crore credited to his bank account. Let’s take a look at what happened.