நச்சுவாயு உருவாக்கி இந்திய மக்களை கொல்ல திட்டம்.. ஜெய்ஷ் இ பயங்கரவாதிகள் பகீர் பிளான்! 5 பேர் கைது


  • காந்தி நகர்: வெடிகுண்டு தயாரிப்பு, நச்சுவாயுக்களை உருவாக்கி பொதுமக்களை கொல்வது உள்பட 40 வகையான பயங்கரவாத யுத்திகளுடன் சதித்திட்டம் தீட்டி வந்த 5 ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் பயங்கரவாத ஒழிப்பு படையினரிடிம் சிக்கிய இந்த 5 பேர் பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Advertisement

    குஜராத் மாநிலத்தில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. கடந்த 2 வாரத்தில் மட்டும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த 8 பேரை குஜராத் பயங்கரவாத ஒழிப்பு படையினர் கைது செய்னர்.

    Advertisement

    இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சில முக்கிய தகவல்கள் கிடைத்தன. அதன்படி தொடர்ந்து தற்போது 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதில் 4 பேர் பதான் மாவட்டம் சித்தாபூரை சேர்ந்தவர்கள். அவர்களின் பெயர்கள் பிலால் அபித் ஷிரா (வயது 24), முகமது அயூப் கடிவாலா (22), முகமது அயூப் சன்சரா என்ற முகமது காளி ( 20), முகமது ஹாசன் ஹனிப் கரிதியா என்ற ஹாசன் ஹைதர்புரி (20) என்பதாகும். இன்னொருவன் பனஸ்கந்தா பகுதியை சேர்ந்தவன். அவனது பெயர் ஷபி ரேஸ் முக்கி என்ற ஷாபி (21).

    Advertisement

    இப்போது கைதான 5 பேரும் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அப்துல்லா என்ற ஜெய்ஷ் இ பயங்கரவாத தவைன் தலைமையில் செயல்பட்டு வந்துள்ளனர். பொதுமக்களை கொல்லும் வகையில் சதித்திட்டம் தீட்டி செயல்பட்டு வந்துள்ளனர்.

    வெடிகுண்டு தயாரிப்பு, குறிப்பாக ஐஇடி வகை குண்டு தயாரிப்பு, நச்சுவாயுக்களை உருவாக்கி பொதுமக்களை கொல்வது, துப்பாக்கி பயிற்சி உள்பட 40 வகையான யுத்திகளை கற்று வைத்துள்ளனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 8 முறை வெடிகுண்டு சோதனைகளை நிகழ்த்த முயன்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

    Advertisement

    அதுமட்டுமின்றி காஷ்மீர் இளைஞர்களை இந்த அமைப்பில் சேர்க்கம் பணியையும் முன்னெடுத்துள்ளனர். மேலும் இவர்களிடம் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசார் தொடர்பான பேச்சுக்கள் அடங்கிய பென்டிரைவ், அவர் தொடர்பான புத்தகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

    இவர்கள் கார், மோட்டார் சைக்கிள்களில் சென்று உளவு பார்த்துள்ளனர். அகமதாபாத்தில் உள்ள 'கார்டன் - ஸ்டைல்' ஹோட்டலில் தாக்குதல் நடத்த அவர்கள் சதித்திட்டம் தீட்டி வந்த நிலையில் பயங்கரவாத ஒழிப்பு படையினரிடம் சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Five Jaish e Mohammed terrorists have been swiftly arrested while plotting attacks using 40 different terrorist tactics, including bomb-making and the use of toxic gases to kill civilians. Shocking details have emerged regarding these five individuals, who were apprehended by the Gujarat Anti-Terrorist Squad.