மியூசியத்தில் இருந்து திருடிச்சென்ற தங்க டிபன் பாக்ஸில் தினமும் மூக்கு முட்ட வெட்டிய கொள்ளையன்!!


ஹைதராபாத் மியூசியத்தில் இருந்து திருடிச்சென்ற தங்க டிபன் பாக்ஸில் கொள்ளையன் ஒருவன் தினமும் சாப்பாடு வைத்து சாப்பிட்டது தெரியவந்துள்ளது.

ஹைதராபாத்: மியூசியத்தில் இருந்து திருடிச்சென்ற தங்க டிபன் பாக்ஸில் கொள்ளையன் ஒருவன் தினமும் சாப்பாடு வைத்து சாப்பிட்டது தெரியவந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருங்காட்சியகத்தில் நிஜாம் மன்னர் பயன்படுத்திய பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைரத்தால் ஆன பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மும்பைக்கு பயணம்

இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் கொள்ளையர்கள் தங்க டிபன் பாக்ஸை மும்பைக்கு திருடிச்சென்றது தெரியவந்தது.

5 நட்சத்திர ஹோட்டல்

இதைத்தொடர்ந்து மும்பையில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள், மும்பையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர்.

தடுத்த சென்டிமென்ட்

இருவரும், அருங்காட்சியகத்தில்
இருந்த பழமை வாய்ந்த தங்கத்திலான குரானை கொள்ளையடிக்கவே திட்டமிட்டனர்.
சென்டிமென்ட் தடுத்ததால் அதனை கொள்ளையடிக்கும் முடிவை கைவிட்டு டிபன் பாக்ஸை திருடி சென்றனர்.

தங்க டிபன் பாக்ஸில் சாப்பாடு

தங்கத்திலான டிபன் பாக்ஸ், துபாய் சந்தையில் 30 அல்லது 40 கோடி ரூபாய் வரை விலைபோக வாய்ப்பு உள்ளது. கொள்ளையடித்த நாளில் இருந்து கைதாகும் வரை, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், தங்க டிபன் பாக்சில்தான் தினமும் உணவை சாப்பிட்டுள்ளார்.

Have a great day!
Read more...

English Summary

A thief has stolen golden tiffin box from hydrabad musiam. The thief was eating food in thegolden tiffin box untill he caught to police.