தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை உடனே கைது பண்ணுங்க.. உச்சகட்ட டென்ஷனில் மம்தா பானர்ஜி!

  • கொல்கத்தா: SIR விவகாரத்தில் தேர்தல் ஆணையர்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்டு செயல்படாத தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் (SIR) மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளதாக தேர்தல் ஆணையத்திற்குள்ளேயே இருந்து குற்றச்சாட்டுகள் கிளம்பியிருக்கின்றன. இது தற்போது தீவிர விவாதங்களை கிளப்பி இருக்கின்றன.

    Advertisement

    மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில், 15 ஆண்டு கால மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை உடைத்து பாஜக வரலாற்று சாதனை வெற்றியை பெற்றது. ஆனால், இந்த தேர்தலுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆர் பணிகள்தான் தற்போது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

    மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் திருத்த பணிகள் மூலம் ஒட்டுமொத்தமா 90 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதில் 60 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் சந்தேகத்திற்குரியதாக மாற்றப்பட்டு நீதித்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டன. அந்த ஆய்வுக்குப் பிறகு நீதித்துறை அதிகாரிகள் 32.68 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் தக்க வைக்க உத்தரவிட்டனர். மீதம் இருந்த 27.14 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன.

    Advertisement

    நீதித்துறை அதிகாரிகள் தகுதியானவர்கள் என்று அறிவித்து, வாக்காளர் பட்டியலில் தக்கவைக்கப்பட்ட 16.10 லட்சம் வாக்காளர்களை.. பட்டியலில் இருந்து நீக்க கோரி யாரோ சிலர் தீர்ப்பாயங்களில் மேல்முறையீடு செய்துள்ளனர். இப்படி முறையீடு செய்ய யார் அனுமதி கொடுத்தது? என்பதுதான் பெரிய பிரச்சனையாக வெடித்திருக்கிறது. தலைமை ஆணையரை தவிர மற்ற 2 ஆணையர்களும் இதை கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

    தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி மூன்று பேர் அடங்கிய குழுவும் இணைந்து தான் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சந்து இது குறித்து கூறுகையில், "மக்களவைத் தேர்தல் ஆணையர்களான எங்களுக்கோ அல்லது மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கோ தெரியாமல்.. தேர்தல் ஆணையத்தின் சார்பில் இந்த 16.10 லட்சம் வாக்காளர்களுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய யார் அதிகாரம் கொடுத்தது? இதை செய்தது யார்?" என்று எழுத்துப்பூர்வமான கேள்வி எழுப்பி கடிதம் எழுதியுள்ளனர்.

    Advertisement

    தேர்தல் ஆணையத்தின் ஐடி பிரிவு இயக்குனர் ஜெனரல் சீமா கண்ணா மேற்பார்வையிடும் மென்பொருள், டெல்லியில் இருந்தபடியே கீழ்மட்ட தேர்தல் அதிகாரிகளின் கட்டுப்பாடுகளை முடக்கி தன்னிச்சையாக பெயர்களை சேர்க்கவும் நீக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையர்கள் இருவர் கடந்த மே மாதமே சுட்டிக் காட்டியுள்ளனர். இதனைத் தான் முன்பே 4 முறை புகாராக கொடுத்து இருந்ததாக டிஎம்சிஎம்பி மகுவா மொய்த்ரா கூறியுள்ளார்.

    இப்படியாக பிரச்சனை சீரியஸாக வெடித்திருக்கும் நிலையில், பாஜகவின் ஐடி விங் போல தேர்தல் ஆணையத்தின் சாப்ட்வேர் குழு செயல்பட்டுள்ளது என்றும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

    English Summary

    Arrest CEC Gyanesh Kumar immediately: Former West Bengal Chief Minister Mamata Banerjee has demanded the immediate arrest of Chief Election Commissioner Gyanesh Kumar for acting without seeking the views and advice of the Election Commissioners regarding the SIR issue.