நீங்கலாம் மனுஷனே கிடையாது.. 8 மாதம் போராடி இன்ஸ்டா பிரபலம் சுத்தப்படுத்திய நதியை 30 நாளில் நாறடித்த மக்கள்! வீடியோ

  • போபால்: மத்திய பிரதேசத்தில் பிளாஸ்டிக் உள்பட பிற கழிவுகளில் நிரம்பி வழிந்த அஜ்னார் நதியை 'பிட்டு தபாஹி' என்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் 8 மாதம் போராடி சுத்தம் செய்து வெளியிட்ட வீடியோ கவனம் பெற்றது. இந்த வீடியோ வெளியான ஒரு மாதத்திலேயே தற்போது அந்த நதி மீண்டும் மாசுடைந்துள்ளது. பொதுமக்கள் வீசிய குப்பைகளால் அந்த நதி மோசமான நிலையில் உள்ளதாக 'பிட்டு தபாஹி' வெளியிட்ட வீடியோ அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

    Advertisement

    ''எதையுமே ஆக்குவது கடினம்... அழிப்பது எளிது'' என்று சொல்வார்கள். அதற்கு உதாரணமாக தான் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பியாரோ நகரில் அஜ்னார் என்ற நதி ஓடுகிறது. இந்த நதியில் ஏராளமானவர்கள் புனித நீராடுவார்கள்.

    Advertisement

    அதுமட்டுமின்றி பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கும் இந்த நிதி தண்ணீரால் பயன்பெற்று வருகின்றனர். ஆனால் இந்த நதி சமீபத்தில் மாசடைந்தது. நதியில் தண்ணீர் ஓடினாலும் கூட அதனை மறைக்கும் அளவுக்கு பிளாஸ்டிக் உள்பட பிற கழிவுகள் அதிகளவில் மிதந்தன.

    இதனை பார்த்து கவலையடைந்தார் பியாரோ நகரில் வசித்து வுரும் சுரேந்திர சிங் சவுத்ரி என்ற பிட்டு தபாஹி. இவருக்கு 21 வயது ஆகிறது. கல்லூரியில் பிஎஸ்சி படிப்பை படித்து வருகிறார். இதனால் அவர் எப்படியாவது நதியை சுத்தப்படுத்த வேண்டும் என்று நினைத்தார்.

    கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி அதற்கான பணியை தொடங்கினார். 8 மாதங்கள் வரை அவர் தனி ஆளாக போராடி கடந்த செப்டம்பர் மாதத்தில் அஜ்னார் நதியை தூய்மைப்படுத்தினார். இடையிடையே அவருக்கு பலரும் உதவி செய்தாலும் கூட பிட்டு தபாஹியின் விடா முயற்சியால் இது சாத்தியமானது.

    Advertisement

    பிட்டு தபாஹியின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்தன. அவர் அதிக கவனம் பெற்றார். நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் 'ஓஷன் கிளீனப்' என்கிற சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி போயன் ஸ்லாட், தங்களது அமைப்பில் இணைந்து பணியாற்ற பிட்டு தபாஹிக்கு அழைப்பு விடுத்தார்.

    இந்நிலையில் தான் தற்போது 4 வாரங்களில் மீண்டும் அன்ஜார் நதி மாசடைந்துள்ளது. இதுதொடர்பான வீடியோவை மீண்டும் பிட்டு தபாஹி வெளியிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.

    பிட்டு தபாஹி கூறுகையில், ''எனது 8 மாத கடினஉழைப்பு இப்படி வீணாகி போகும் என்று நான் ஒருபோதும் நினைத்து கூட பார்க்கவில்லை'' என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் பலரும் பொதுமக்களை விமர்சனம் செய்து வருகின்றனர்.

    English Summary

    A video released by Instagram personality ‘bittu Tabahi'-showing the cleanup of the Ajnar River in Madhya Pradesh after an eight-month-long struggle to clear it of plastic and other waste-had garnered significant attention. However, within just a month of that video's release, the river has become polluted once again. A new video shared by ‘Bittu Tabahi' reveals the river's deplorable state due to garbage discarded by the public, leaving everyone dismayed.