மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் உட்பட 8 சிட்டிங் எம்பிக்களை கழற்றிவிட்ட பாஜக! உ.பியில் அதிரடி திருப்பம்

  • லக்னோ: அகிலமே ஆடினாலும்.. ஆடாத கோட்டை எங்கள் உத்தரப் பிரதேச பாஜக கோட்டை என்று அக்கட்சி தலைவர்கள் பெருமையாக பேசி வந்த நிலையில்.. கோட்டையில் பெரிய ஓட்டை விழுந்திருக்கிறது. உத்தரப் பிரதேச ராஜ்யசபா தேர்தலில் தற்போதய மத்திய அமைச்சராக இருக்கும் ஹர்தீப் சிங் பூரி உட்பட 8 சிட்டிங் எம்பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காமல் பாஜக கழற்றிவிட்டிருக்கிறது.

    Advertisement

    மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சராக இருப்பவர்தான் ஹர்தீப் சிங் பூரி. மூத்த அரசியல் தலைவர். மூத்தவர்களால்தான் கட்சியே வழிநடத்தப்படுகிறது என்று சொன்ன பாஜகவினர்.. தற்போது இந்த மூத்த தலைவரை மூலையில் உட்கார வைத்திருக்கிறார்கள். இவர் கடந்த 2018 முதல் உத்தரப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். ஆனால் இந்த முறை பாஜக தலைமை அவரை கழற்றிவிட்டிருக்கிறது.

    Advertisement

    கழற்றிவிடப்பட்ட 8 எம்பிக்கள்

    அதேபோல மத்திய இணையமைச்சர் பி.எல்.வர்மா, கட்சியின் மூத்த தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங், நீரஜ் சேகர், சீமா திவேதி, பிரிஜ் லால் மற்றும் கீதா சாக்யா என கழற்றிவிடப்பட்டவர்களின் லிஸ்ட் பெரியதாக நீண்டுக்கொண்டே போகிறது.

    Gen Z இளைஞர்களின் போராட்டங்கள் மத்திய அரசின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்.. ராஜ்யசபா தேர்தல் விஷயத்தில் கட்சித் தலைமை இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

    மோடியின் பிளான் என்ன?

    அதாவது ஹர்தீப் சிங் மற்றும் பி.எல்.வர்மாவின் எம்பி பதவிக்காலம் வரும் நவ.25ம் தேதியுடன் நிறைவடைகிறது. எம்பி பதவி நிறைவடைந்தாலும், அதிகபட்சமாக 6 மாதங்கள் வரை மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள், அமைச்சரவையில் நீடிக்க முடியும். அரசியலமைப்பு சட்டம் 75(5) இந்த சலுகையை கொடுத்திருக்கிறது. ஆனால், தற்போது ராஜ்ய சபா எம்பி தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதால், இவர்கள் வேறு மாநிலத்திலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்படுவார்களா? அல்லது அமைச்சரவையில் எம்பியாக இல்லாமல் நீடிக்கப்படுவார்களா? இல்லையெனில் நவம்பரில் மத்திய அமைச்சரவையில் பெரிய மாற்றம் ஏற்படுமா? என்றும் கேள்வி எழுந்திருக்கிறது.

    Advertisement

    உ.பி ராஜ்யசபா தேர்தல்

    உத்தரப் பிரதேசத்தின் 10 காலியிடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் அக்.16 அன்று நடைபெற உள்ளது. பாஜக தனது பலத்தின் அடிப்படையில் 8 இடங்களை எளிதாக வெல்ல முடியும். சமாஜ்வாதி கட்சி தனது தரப்பில் ராம் கோபால் யாதவ் உட்பட 2 வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. எனவே உ.பி மாநிலங்களவை தேர்தல் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    Gen Z இளைஞர்களின் போராட்டம்

    டெல்லியிலும், மும்பையிலும் ஏற்கெனவே இளைஞர்கள் தீவிர போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். அவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துக்கொண்டே செல்கிறது. ஏற்கெனவே டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த போராட்டம் காரணமாக மத்திய பாஜக அரசு, தனது அமைச்சரவையிலிருந்து கல்வியமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதானை விட்டுக்கொடுத்திருந்தது. இப்போது தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகிறது.

    Advertisement

    அமைச்சரவையில் மாற்றம்

    இளைஞர்களின் போராட்டங்களை எதிர்கொள்ள ஆளும் பாஜகவுக்கு இளைஞர் சக்தி தேவைப்படுகிறது. குறிப்பாக மத்திய அமைச்சரவையில் இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம், அவர்களை வைத்து.. நாட்டில் உள்ள இளைஞர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார் என்பதை தெரிவிக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே நவம்பரில் அமைச்சரவையில் அதிரடி மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

    அமைச்சர்களின் பதவிக்காலம் முடிந்த பின்னர் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

    English Summary

    While BJP leaders had proudly proclaimed Uttar Pradesh as their unshakeable stronghold—a fortress that would stand firm even if the rest of the nation wavered—a massive breach has now appeared in that very bastion. For the Rajya Sabha elections in Uttar Pradesh, the BJP has dropped eight sitting MPs—including Union Minister Hardeep Singh Puri—denying them a chance for re-nomination.