தொடர் சரிவில் ரூபாய் மதிப்பு.. என்.ஆர்.ஐக்களே உதவுங்கள்.. மத்திய அரசு வேண்டுகோள்!


டெல்லி: தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவதால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் உதவியை கோரி உள்ளது.

இந்திய பொருளாதாரத்திற்கு இது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தினமும் ரூபாய் மிக மோசமான நிலையை அடைந்து இருக்கிறது.

நேற்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 72.67 ரூபாயை தொட்டது. இன்று மேலும் சரிந்தது. 21 பைசா இன்று சரிந்தது. இதனால் தற்போது 1 டாலருக்கு நிகரான மதிப்பு 72.88 ரூபாய் ஆகியுள்ளது.

ஆர்பிஐ தலையிடுமா

இந்த நிலையில்தான், தொடர்ந்து ரூபாய் மதிப்பு சரிவதால் இதில் ஆர்பிஐ தலையிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாரத்திற்குள், ரிசர்வ் வங்கி இந்த பிரச்சனையில் தலையிட வாய்ப்புள்ளது. மோடி தலைமையிலான அரசு இதற்கான அழைப்பை விடுத்துள்ளது. இது பண மதிப்பை கொஞ்சம் அதிகரிக்கும்.

என்ன செய்யும்

ரிசர்வ் வங்கி தன்னுடைய கையிருப்பில் உள்ள அமெரிக்க டாலர்களை சந்தையில் திறந்துவிடும். இதனால் சந்தையில் டாலரின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் அதன் தேவை குறையும். இதனால், இந்திய ரூபாயின் மதிப்பில் குறிப்பிட தகுந்த உயர்வு ஏற்படும்.

என்ன உதவி

ஆனால் ரிசர்வ் வங்கியிடம் முன்பு போல் அதிக டாலர் கையிருப்பு இல்லை. தற்போது அந்நியச் செலாவணி கையிருப்பு 400 பில்லியன் டாலர்களாக உள்ளது. இதனால் அதிக டாலர்களை பெற, மோடி அரசு வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் உதவியை நாடியுள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்தியாவிற்கு அமெரிக்க டாலரில் பணம் அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

அனுப்பி வருகிறார்கள்

ஏற்கனவே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவதால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் குடும்பத்திற்கு பணம் அனுப்புவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்போது பணம் அனுப்பினால் அதிக லாபம் கிடைக்கும் என்று அனுப்புகிறார்கள். இதனால் சிலர் கடன் வாங்கி கூட பணம் அனுப்புகிறார்கள். சிலர் அடுத்த மாத சம்பளங்களை முன்பணமாக வாங்கியுள்ளனர். இதனால் டாலர் மதிப்பு விரைவில் குறையலாம்.

Have a great day!
Read more...

English Summary

BJP seeks NRI support to restore Ruppe fall.