தெலுங்கானாவில் சந்திரபாபு நாயுடு கட்சியுடன் காங்., இ.கம்யூனிஸ்ட் கூட்டணி.. சந்திரசேகரராவுக்கு செக்


ஹைதராபாத்: தெலுங்கானா மாநில அமைச்சரவையின் சிபாரிசை ஏற்று, அம்மாநில சட்டசபையை கலைத்தார் ஆளுநர். பதவிக்காலம் முடிவடைய 9 மாதங்கள் உள்ள நிலையில் ஆட்சி கலைக்கப்பட்டது. அங்கு இந்த ஆண்டுக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இவ்வாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது, அப்போது தெலுங்கானாவிற்கும் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்குள்ள நிலையை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் குழுவை அமைத்துள்ளது. இடைக்கால முதல்வராக சந்திரசேகர் ராவ் தொடர்கிறார்.

இதனிடையே, பிஜேபி கூட்டணியில் இருந்து விலகிய தெலுங்கு தேசம், காங்கிரசுடன் கூட்டணியை அமைத்துள்ளது. காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை இணைந்து கூட்டணியை அமைத்துள்ளன.

நேற்று மாலையில் இந்த மூன்று கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் ஆளுநரை சந்தித்து பேசினார்கள், அப்போது மாநிலத்தில் சட்டசபையை கலைக்க வேண்டும், ஜனாதிபதி ஆட்சியை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள்.

முன்கூட்டியே தேர்தலை நடத்தும் நிலைக்கு தள்ளியதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்வோம் எனவும் புதிய கூட்டணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

The Congress, Chandrababu Naidu's Telugu Desam Party and the CPI have formed an alliance in Telangana, where assembly polls are expected to take place later this year.