நாங்கள் என்ன செய்வது.. பெட்ரோல் விலையை அரசுதான் குறைக்க வேண்டும்.. டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு


டெல்லி: பெட்ரோல், டீசலின் விலையை நீதிமன்றம் குறைக்க முடியாது, மத்திய அரசுதான் அதில் முடிவெடுக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சில மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை சந்தித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நேற்று விற்கும் விலையிலேயே இன்றும் விற்கிறது. தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.91ஆகும். டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.13 ஆகும்.

இந்த நிலையில் பெட்ரோல் விலையை குறைக்க கோரி சில நாட்களுக்கு முன் டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. டெல்லியை சேர்ந்த பூஜா மகாஜன் என்பவரால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது.

இதை டெல்லி ஹைகோர்ட் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி கே ராவ் விசாரித்தனர். இதில் தற்போது முக்கிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி பெட்ரோல், டீசல் விலையை முறைப்படுத்த முடியாது. இதை செய்வது எங்களுடைய வேலை கிடையாது. இது அரசின் பொருளாதார கொள்கை தொடர்பானது.

இதில் பல விஷயங்களை மாற்றி அரசுதான் விலையை குறைக்க வேண்டும். இது அவர்களின் தனிப்பட்ட முடிவு. மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் தலையிட முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதேசமயம் பெட்ரோல் விலைஉயர்வுக்கு காரணம் கேட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு இதில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி நவம்பர் 16ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Delhi HC dismisses PIL against hike in petrol/ diesel prices.