தனுஷ் – ஜிவி பிரகாஷ் குமார் உள்பட 10 பேருக்கு தேசிய விருது.. முழு லிஸ்ட் இதோ

  • காந்தி நகர்: இந்தியாவின் 72வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இந்த விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று வழங்கினார். அதன்படி நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் உள்பட தமிழ் திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு 10 தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:

    Advertisement

    72வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ் சினிமாவிற்கு மொத்தம் 10 தேசிய விருதுகள் கிடைத்தன. இந்த விருதுகள் இன்று வழங்கப்பட்டன.

    Advertisement

    குஜராத் மாநிலம் ஏகதா நகரில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு அனைத்து திரைக்கலைஞர்களுக்கும் தேசிய விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

    நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் மொத்தம் 3 தேசிய விருதுகளை வென்றது.

    * அதன்படி சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை 'அமரன்' திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் பெற்றார்.

    * சிறந்த எடிட்டருக்கான தேசிய விருதை 'அமரன்' திரைப்படத்தின் எடிட்டர் கலைவாணன் பெற்றார்.

    * சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை 'அமரன்' திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பெற்றார்.

    Advertisement

    இதையடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மகாராஜா' திரைப்படத்துக்கு 2 தேசிய விருது வழங்கப்பட்டது.

    * அதன்படி சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான தேசிய விருது 'மகாராஜா' படத்தின் சண்டை பயிற்சியாளர் அனல் அரசுக்கு வழங்கப்பட்டது.

    * சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை 'மகாராஜா' படத்தில் நடித்த சச்சனா நமிதாஸ் வென்றார். இவர் 'மகாராஜா' திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு தங்கையாக நடித்துள்ளார்.

    நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்துக்கு 2 தேசிய விருதுகளும், ராயன் திரைப்படத்துக்கு ஒரு தேசிய விருதும் கிடைத்தது.

    * சிறப்பு பிரிவில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்திற்காக சிறந்த நடிகராக தனுஷ்க்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

    Advertisement

    * தேசம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்டவற்றின் சிறப்பு பிரிவில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்துக்கு சிறந்த Feature Film பிரிவில் தேசிய விருது வழங்கப்பட்டது.

    * சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய விருது நடிகர் தனுஷ் இயக்கி நடித்த'ராயன்' திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது. இதற்கான விருதை படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் சார்பில் கவேரி கலாநிதி பெற்று கொண்டார்.

    * நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான 'மெய்யழகன்' திரைப்படத்துக்கு சிறப்பு பிரிவில் பெஸ்ட் சவுண்ட் மிக்சிங்கிற்காக (சிறந்த ஒலிக்கலவை)சவுண்ட் இன்ஜினியர் சுரேன்.ஜிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

    * Non Feature films பிரிவில் சிறந்த ஒலிக்கலவை பிரிவல் தமிழில் வெளியான ப்ளூ என்ற ஆவணப்படத்தின் சவுண்ட் இன்ஜினியர் டிஎஸ் ஹரிஹர சுதனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

    English Summary

    India's 72nd National Film Awards were announced recently. President Droupadi Murmu presented the awards today. In total, 10 National Awards were conferred upon individuals from the Tamil film industry, including actor Dhanush and music composer G.V. Prakash Kumar. The details are as follows: