பேய் விரட்டக்கூடாது.. குடும்ப தொழில் வேண்டாம் என மகனையே சாமி பீடத்தில் பலி கொடுத்த பூசாரி

  • காந்தி நகர்: குஜராத்தில் தன்னை போலவே பேய் விரட்டும் குடும்ப தொழிலை செய்யக்கூடாது என்று பெற்ற 10 வயது மகனையே சாமி பீடத்தில் தலையை முட்டவைத்து கொன்ற சம்பவம் அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது.

    Advertisement

    ஒவ்வொரு பெற்றோரும் தன்னை போல் தனது மகன்/மகள் வாழ்க்கையில் கஷ்டப்படக்கூடாது என நினைக்கின்றனர். நீங்கள் ஒரு வேலை செய்கிறீர்கள்.. அந்த வேலையில் வருமானம் குறைவாக உள்ளது. சமூகத்தில் மதிப்பு இல்லை என்றால் என்றால் அந்த பணியை மகன் செய்யக்கூடாது என நினைப்பது இயல்பு தானே.

    Advertisement

    அப்படியென்றால் என்ன செய்வீர்கள்? மகனை வேறு படிப்பை படிக்க வைப்பீர்கள். இன்னொரு துறையின் மீதான ஆர்வத்தை அவருக்கு வளர்க்க முயற்சிப்பீர்கள். ஆனால் இங்கே ஒருவர் தனக்கு அடுத்து தனது குடும்ப தொழிலை செய்யக்கூடாது என்பதற்காக பெற்ற மகனின் தலையையே சாமி பீடத்தில் மோத வைத்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

    இந்த சம்பவம் நடந்த இடம் குஜராத் மாநிலம் சனாந்த் நகர் அருகே உள்ள வின்சியா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ் (வயது 37). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பெயர் பாரதி பென். இந்த தம்பதிக்கு 10 வயதில் மகன் உள்ளார். அவரது பெயர் கரண். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி பாரதிக்கும், நரேஷ்க்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

    Advertisement

    இதில் கோபம் கொண்ட பாரதி தனது தாய் வீட்டிற்கு சென்றார். மகன் நரேஷ்க்கு பள்ளியில் தேர்வு உள்ளதால் அவரை உடன் அழைத்து செல்லவில்லை தாய் பாதி. அவர் மட்டுமே சென்றார். இதனால் நரேஷ் தனது மகன் கரண் உடன் வீட்டில் வசித்து வந்தார் நரேஷ் கூலி தொழிலாளி வேலை செய்தாலும் கூட பூசாரியாகவும் இருக்கிறார்.

    தனது வீட்டின் அருகே ஜோகனி மாதா சாமி பீடம் உள்ளது. இங்கு பூஜை செய்யும் நரேசை நிறைய பேர் தேடிச்செல்வார்கள். குறி கேட்பது, பேய்களை விரட்ட சொல்வது, நோய்களை குணப்படுத்த பூஜைகள் என்று பல்வேறு விஷயங்களை நரேஷ் செய்து வந்தார். இதற்கு முன்பு நரேஷின் தந்தை செய்த இந்த தொழிலை தற்போது அவர் செய்து வருகிறார். வீட்டு அருகே ஜோகனி மாதா தெய்வத்துக்கான பீடம் உள்ளது.

    Advertisement

    நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் இந்த பீடத்தின் அருகே இருந்து ஒருவர் அலறும் சத்தம் கேட்டது. நரேஷ் தான் அங்கு பூஜை பணிகளை செய்வார். மேலும் யாராவது அவரிடம் பேய்விரட்ட வந்திருக்கலாம் என்று அக்கம்பக்கத்தினர் நினைத்தனர். ஆனால் அதன்பிகு சத்தம் வரவில்லை.

    பிறகு இரவு 10.30 மணியளவில் அக்கம்பக்கத்தினர் ஜோகனி மாதா பீடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு ஒரு கட்டிலில் 10 வயது கரண் இறந்து கிடந்தார். தலையில் இருந்து ரத்தம் கொட்டியிருந்தது. இன்னொரு கட்டிலில் நரேஷ் தூங்கி கொண்டிருந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கரண் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நரேசை பிடித்து விசாரித்தனர்.

    Advertisement
    டார்க்கெட்டான இந்திய கப்பல்.. திடீர் அட்டாக்கில் துடிதுடித்து பலியான குஜராத் மாலுமி.. ஓமனில் பதற்றம்

    விசாரணையில் தனது மகனை தானே கொன்றதை நரேஷ் ஒப்புக்கொண்டார். போலீசில் வாக்குமூலம் அளித்தார். அதில், ''எனது தந்தையை போல் நானும் குறிசொல்லுவது, பேய்களை விரட்டுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். இந்த தொழில் என்னுடன் முடிவடைந்துவிட வேண்டும். என் மகன் இந்த தொழிலை செய்யக்கூடாது. இதனால் அவனை கொன்றுவிட்டேன்.

    தோட்டத்தில் இருந்து அவனது காலை பிடித்து இழுத்து வந்து கட்டையால் தாக்கினேன். பிறகு பீடத்தில் தலையை மோதி கொன்றேன்'' என்றார். இதுதொடர்பாக நரேஷ் மீது அவரது மனைவி பாரதி பென் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நரேசை கைது செய்துள்ளனர்.

    English Summary

    In Gujarat, a shocking incident has left everyone stunned: a man killed his 10-year-old son by repeatedly banging the boy's head against a ritual altar—all because he did not want his son to follow in his footsteps and take up the family profession of exorcism.