அசாமில் ஷாக்! விபத்தில் சிக்கிய இந்திய விமானப்படை விமானம்! 5 பேர் பலி

  • ஜோர்ஹாட்: அசாம் மாநிலம் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படைக்கு (IAF) சொந்தமான ஏஎன்-32 (AN-32) ரக போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

    Advertisement

    இந்த விபத்து குறித்த முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. விபத்தில் 5 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    AN-32 என்பது ரஷ்ய தயாரிப்பு போக்குவரத்து விமானமாகும். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் இந்திய விமானப்படையில் இந்த விமானம் பணியாற்றியதாக சொல்லப்படுகிறது. இந்த விமானம் விபத்தில் சிக்கியபோது, விமானிகள் 5 பேர் மட்டுமே இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    English Summary

    IAF: The Indian Air Force (IAF) has stated that an AN-32 transport aircraft belonging to the force met with an accident at the Jorhat airbase in Assam.