ரோல் மாடலாக மாறிய ஒற்றை அதிகாரி? இனி நாடு முழுவதும் உணவு பொருட்களுக்கு புது கட்டுப்பாடு!

  • டெல்லி: மும்பையில், பள்ளி வளாகங்களுக்கு அருகே அதிக இனிப்பு, உப்பு கொண்ட உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று அதிகாரி துக்காராம் முண்டே போட்ட உத்தரவு பெற்றோர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் பேக்கெட் செய்யப்பட்ட உணவு பொருட்களில் சர்க்கரை எவ்வளவு சேர்க்கப்பட்டிருக்கிறது, உப்பு எவ்வளவு உள்ளது என்பது தெளிவாக குறிப்பிட புதிய உத்தரவை மத்திய அரசு வெளியிட இருக்கிறது.

    Advertisement

    இந்தியாவில் நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகள் மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு புதிய உத்தரவை வெளியிட யோசித்த வருவது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    இன்ஸ்டாகிராம், யூடியூப் ஷார்ட்ஸ் திறந்தலே நிச்சயம் புட் விலாகர் வீடியோக்கள் இருக்கும். இந்த கடையில இதை சாப்பிட்டு பாருங்க.. அந்த கடையில அதை சாப்பிட்டு பாருங்க.. நைட்டு ரெண்டு மணிக்கு வந்து பிரியாணி சாப்பிடுங்க (நாங்க ஏன்டா நடு ஜாமத்துல சுடுகாட்டுக்கு போகனும்?) என்று கோடிக்கணக்கில் வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. பிரச்சனை என்னவெனில், இதையெல்லாம் சாப்பிடுவதால் ஏற்படும் உடல் நலக்கோளாறுகள் குறித்து யாரும் பேசுவதில்லை என்பதுதான்.

    இப்படி இருக்கையில் கடைகளில் பேக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவு பொருட்களில் அதிகப்படியான கொழுப்பு, உப்பு, சர்க்கரை சேர்க்கப்பட்டிருந்தால்.. அதை கொட்டை எழுத்தில் குறிப்பிட வேண்டும் என்று மத்திய அரசு புதிய உத்தரவை வெளியிட இருக்கிறது. வாங்குபவர்கள்.. தாங்கள் சாப்பிடும் பொருட்களில் என்ன இருக்கிறது என்பதை தெளிவாக புரிந்துக்கொள்ள இந்த நடைமுறை உதவும்.

    Advertisement

    இந்த யோசனையை மத்திய அரசு புதியதாக யோசித்து திடீரென அமல்படுத்த முன்வரவில்லை. ஏற்கெனவே இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இருக்கின்றன. இந்த வழக்குகுள் குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏன் நடைமுறைப்படுத்துவதில் லேட் ஆகிறது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. எனவேதான் மத்திய அரசு புதிய யோசனையை தற்போது முன்வைத்துள்ளது.

    ஒரு சிப்ஸ் பாக்கெட் வாங்குகிறோம் எனில்.. அதில் உள்ள உணவின் அளவு என்ன? ஊட்டச்சத்துகள் எவ்வளவு? (சிப்ஸ் பாக்கெட்டில் ஊட்டச்சத்து எங்க இருக்கப்போகுது?) சேர்க்கப்பட்டிருக்கும் மசாலாக்களின் விவரம் குறித்து புதிய மதிப்பீட்டு முறைகளை உருவாக்க உணவு ஒழுங்குமுறை ஆணையம் திட்டமிட்டிருக்கிறது. இப்படி வெளிப்படையாக போட்டால்.. வாங்குபவர்கள் கவனித்து வாங்குவார்கள் என்று பலரும் இந்த யோசனைக்கு வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள்.

    Advertisement

    பார்ப்போம்.. மத்திய அரசின் இந்த நல்ல யோசனை எவ்வளவு சீக்கிரத்தில் அமல்படுத்தப்படுகிறது என்று.

    English Summary

    India Weighs Front-of-Pack Health Warnings: An order issued by official Tukaram Mundhe, prohibiting the sale of food items with high sugar and salt content near school premises in Mumbai, had been welcomed by parents. Against this backdrop, the Central Government is set to issue a new directive requiring the clear labeling of added sugar and salt content on packaged food products across the country.