ரயில் சக்கரங்களுக்கு இடையே அமர்ந்து 250 கிமீ தூரம் பயணித்த இளைஞர்? சாத்தியமா - ரயில்வே விளக்கம்
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் ஜபல்பூரில் எக்ஸ்பிரஸ் ரயிலின் சக்கரங்களுக்கு இடையே உள்ள ஆக்சிலில் அமர்ந்து 250 கிலோமீட்டர் தூரம் இளைஞர் பயணித்ததாக வீடியோ வெளியாகி உள்ளது. அதனை ரயில்வே நிர்வாகம் முற்றிலுமாக மறுத்துள்ளது.
குறைந்த கட்டணத்தில் நீண்டதூரம் பயணம் செய்ய வேண்டுமானால் பொதுமக்களின் முதல் சாய்ஸ் ரயிலாக தான் இருக்கும். ரயிலிலேயே படுக்கை வசதி, உணவு வசதி, கழிவறை வசதி உள்ளதோடு, பஸ், விமானங்களை காட்டிலும் ரயில் பயணத்தை அதிகமானவர்கள் விரும்புகின்றனர்.

இருப்பினும் இப்போதும் ரயில் டிக்கெட் எடுக்க முடியாமல் பலரும் ரயிலின் பாத்ரூமில் அமர்ந்து பயணிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் ஒரு வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோ மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் எடுக்கப்பட்டுள்ளது. வீடியோவில் நின்ற ரயிலின் அடியில் சக்கரங்களுக்கு நடுவே உள்ள ஆக்சிலில் இளைஞர் ஒருவர் அமர்ந்து இருக்கிறார். அவரை பார்த்ததும் சிலர் வெளியே அழைக்கின்றனர். பயந்துபோய் வெளியே இளைஞர் வருகிறார். அவரிடம் விசாரணை நடக்கிறது.
இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் பரவி வரும் சூழலில் அந்த இளைஞர் மத்திய பிரதேசத்தின் இடார்சியில் இருந்து ஜபல்பூர் வரை 250 கிலோமீட்டர் தொலைவுக்கு ரயிலின் அடிப்பகுதியில் அமர்ந்து பயணித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் அந்த இளைஞர் மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை ரயில்வே அதிகாரிகள் அங்கிருந்து அனுப்பி வைத்ததாக தகவல்கள் பரவி வருகிறது.
இதனை பார்க்கும் பலரும் ஆச்சரியம் அடைகின்றனர். அதாவது ரயிலில் நின்றபடி 250 கிலோமீட்டர் பயணிப்பதே பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் நிலையில் இளைஞர் ஒருவர் ரயிலின் அடியில் சக்கரங்களுக்கு இடையே அமர்ந்து பயணித்து இருப்பதை ஆச்சரியமாக பார்க்கின்றனர். இதற்கிடையே தான் ரயில்வே சார்பில் இந்த தகவல் மறுக்கப்பட்டுள்ளது. அதாவது பயணியால் ஒருபோதும் 250 கிலோமீட்டர் தொலைவுக்கு ரயிலுக்கு அடியில் சக்கரங்களுக்கு இடையே அமர்ந்து பயணிக்க முடியாது. இது தவறான தகவல் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே வாரியத்தின் தகவல் மற்றும் பப்ளிசிட்டி பிரிவு செயல் இயக்குநர் திலிப் குமார் கூறுகையில், ‛‛ரயிலுக்கு அடியில் சக்கரங்களுக்கு நடுவே ஆக்சிலில் அமர்ந்து 250 கிலோமீட்டர் தூரம் இளைஞர் பயணித்து இருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது. அது அடிப்படை ஆதாரமற்றது. அந்த இளைஞர் ரயிலின் அடியில் மறைந்து தான் இருந்தார்.
நின்ற ரயிலில் அடியில் தான் அவர் ஏறி அமர்ந்துள்ளார். ரயில் நகரும்போது சக்கரங்களுக்கு இடையே அமர்ந்து யாராலும் பயணிக்க முடியாது. இருப்பினும் அப்படியான தகவலுடன் வீடியோ எடுத்தவர்கள் வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அதனை சில ஊடகங்கள் எந்த விசாரணையும் செய்யாமல் பதிவு செய்துவிட்டன. இதனால் இந்த தகவல் முழுக்க முழுக்க பொய்யானது'' என்று கூறியுள்ளார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications