ஜெகன் மோகன் ரெட்டிக்கு வந்ததே கோபம்.. 90% இடங்களில் படுதோல்வி! உச்சக்கட்ட கோபத்தில் சொன்ன பாயிண்டு

  • அமராவதி: ஆந்திராவில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி முறைகேடுகளில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். ஜனநாயக அமைப்புகள் மீதான நம்பிக்கையை சந்திரபாபு நாயுடு சிதைத்துவிட்டதாகவும், தேர்தலை நியாயமாக நடத்தியிருந்தால் அவரால் வெற்றி பெற்றிருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    ஆந்திராவில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் சந்திரபாபு நாயுடு என்டிஏ கூட்டணி மிக பெரிய வெற்றியை பதிவு செய்தது. கிட்டத்தட்ட 90%க்கு மேலான இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி வென்றது. மொத்தம் 13 மாநகராட்சிகளில் 12ல் என்டிஏ வென்றது. 87 நகராட்சிகள் / நகர பஞ்சாயத்துகளில் 79ல் என்டிஏ வென்றது.

    Advertisement

    ஜெகன் மோகன் ரெட்டி

    ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதற்கிடையே தடேபள்ளியில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி, உள்ளாட்சி மிக பெரிய முறைகேடு நடந்ததாக சாடியுள்ளார். தேர்தலில் வேட்புமனு தாக்கல் தொடங்கி வாக்கு எண்ணிக்கை வரை பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டினார்.

    பல இடங்களில் தங்கள் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் தடுக்கப்பட்டதாகவும், சில இடங்களில் தங்கள் வேட்பாளர்களை கட்டாயப்படுத்தி வேட்புமனுக்களை வாபஸ் பெற வைக்கும் நிகழ்வுகளும் நடந்ததாக ஜெகன் குற்றம்சாட்டினார். மேலும், முறையான காரணங்கள் இல்லாமல் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

    Advertisement

    முறைகேடு

    அவர் மேலும், "ஆளும் தெலுங்கு தேசம் கட்சி போலீஸ் மற்றும் அரசு நிர்வாகத்தை தனது அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களை மிரட்டுவதற்கு போலீசார் தெலுங்கு தேசம் கட்சியினருடன் இணைந்து செயல்பட்டனர். வேட்புமனு பரிசீலனையின்போது தேர்தல் அதிகாரிகள் முறைகேடுகளுக்கு உதவினர். தேர்தலை கண்காணிக்க வேண்டிய மாநில தேர்தல் ஆணையமும் சுதந்திரமாக செயல்படவில்லை. ஆளும் கட்சியின் விருப்பத்திற்கு ஏற்பவே செயல்பட்டது.

    மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் எங்கள் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் வாக்குப்பதிவு நடக்கும் இடத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். சிலர் போலீஸ் ஸ்டேஷனிலேயே அடைத்து வைக்கப்பட்டனர். தெலுங்கு தேசம் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றியது, போலி வாக்குகளையும் பதிவு செய்தனர். மேலும், எங்கள் தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. இதை எல்லாம் தடுக்க வேண்டிய போலீசார் அமைதியாக இருந்தனர்.

    Advertisement

    வரலாறு காணாத அடக்குமுறை

    கடந்த சட்டசபை தேர்தல் சமயத்தில் தெலுங்கு தேசம் கட்சி இஷ்டத்திற்கு வாக்குறுதிகளை அளித்திருந்தனர். குறிப்பாக, சூப்பர் சிக்ஸ், சூப்பர் செவன் என ஏதேதோ சொன்னார்கள். இதை செய்ய முடியவில்லை என்பதால் அவர்கள் தேர்தலில் முறைகேடு செய்து, ஜனநாயகத்தையே சீர்குலைத்தனர். நாட்டின் தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அடக்குமுறைகளை எழப்பட்டது. இப்படி மோசடி செய்து தான் சந்திரபாபு நாயுடு வென்றுள்ளார்" என்றார்.

    தோல்வி ஆனாலும் வெற்றி!

    தேர்தலில் தங்கள் கட்சி தோல்வியடைந்திருந்தாலும், மக்களின் மனங்களில் வெற்றி பெற்றுள்ளதாக ஜெகன் தெரிவித்தார். அவர் மேலும், "சந்திரபாபு வென்றார். ஆனால் தோற்றுவிட்டார். நாங்கள் தோற்றோம். ஆனால் மக்களின் இதயங்களில் வெற்றி பெற்றுள்ளோம்" என்று அவர் கூறினார். முறைகேடுகள் மூலமாகவும், மக்களின் வாக்குகளை மதிக்காமலும் கிடைக்கும் வெற்றியை மக்களின் உண்மையான தீர்ப்பாகக் கருத முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

    English Summary

    YSR Congress chief Y.S. Jagan Mohan Reddy has accused the ruling TDP of misusing the police to manipulate Andhra Pradesh local body elections(சந்திரபாபு நாயுடுவை விளாசிய ஜெகன் மோகன் ரெட்டி): Jagan Mohan Reddy Accuses Chandrababu Naidu latest news in tamil.