நான் செய்த அந்த ஒரு தவறு.. இப்போ நினைச்சாலும்.! மனசு விட்டு பேசிய ஜெகன் மோகன் ரெட்டி.. பின்னணி

  • அமராவதி: கடந்த காலங்களில் பாஜகவின் மத்திய அரசு கொண்டு வந்த பல மசோதாக்களை நாடாளுமன்றத்தில் ஆதரித்தவர் முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. இதற்கிடையே கடந்த 2023ல் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான சட்டத்தை தனது கட்சி ஆதரித்தது தவறு என்று இப்போது ஜெகன் மோகன் ரெட்டி ஒப்புக்கொண்டுள்ளார்.

    Advertisement

    ஆந்திராவில் 2019ம் ஆண்டு முதல் 2024 வரை முதல்வராக இருந்தவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி. இவர் இப்போதும் சரி, முதல்வராக இருந்தபோதும் சரி பாஜகவின் என்டிஏ கூட்டணியில் நேரடியாக இல்லை. இருப்பினும், பாஜகவுடன் எந்தவொரு மோதல் போக்கும் இல்லாமல் இருந்தார். மேலும், நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டு வந்த பல மசோதாக்களுக்கும் கூட்டணியில் இல்லை என்றாலும் கூட ஆதரவளித்திருந்தார்.

    Advertisement

    பெரிய தவறு

    அப்படி தான் 2023ல் கொண்டு வரப்பட்ட தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பான திருத்த சட்டத்தை இவரது கட்சி ஆதரித்து இருந்தது. பிரதமர், ஒரு மத்திய அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இணைந்து தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் முறை வர இந்த சட்ட திருத்தம் தான் காரணம். இந்த குழுவில் எதிர்க்கட்சி தலைவர் இருந்தாலும் கூட பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர் என ஆளும் தரப்பில் இருந்து இருவர் இருப்பதால் எதிர்க்கட்சியின் வாய்ஸ் எடுபடாமல் போய்விடும்.

    Advertisement

    ஜெகன் மோகன் ரெட்டி

    இந்த சூழலில் தான் 3 ஆண்டுகள் கழித்து, அந்த சட்டத்தை ஆதரித்தது தனது கட்சி செய்த தவறு என்று ஜெகன் மோகன் ரெட்டி ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் முறையில் சீர்திருத்தங்களையும் அவர் வலியுறுத்தியுள்ளார். தேர்தலை நடத்தும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளை நியமிப்பதில் ஆளும் தரப்புக்கு மட்டும் அதிகாரம் இருக்கக்கூடாது என்று ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார். பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெற்றிருந்த முந்தைய தேர்வுக் குழுவை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்..

    Advertisement

    வருந்துகிறோம்

    இது குறித்து அவர் கூறுகையில், "முன்பு ஆளும் கட்சியே தேர்தல் ஆணைய நியமனங்களை மேற்கொள்ள அனுமதிக்கும் நடைமுறையை ஒய்எஸ்ஆர்சிபி ஆதரித்தது. ஆனால், இன்று அந்த சட்டத்தை ஆதரித்ததற்கு வருந்துகிறோம். நாங்கள் தவறு செய்துவிட்டோம். ஒரு மாணவரே தனக்கான தேர்வாளரை நியமிக்க முடியாது. நடுநிலையான அமைப்பால் நியமிக்கப்படாவிட்டால், நேர்மையான தேர்தல் ஆணையர் மீதுகூட விமர்சனங்கள் எழக்கூடும்" என்றார்.

    உள்ளாட்சி தேர்தல்

    மேலும், ஆந்திர பிரதேசத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல்களை சுட்டிக்காட்டிய ஜெகன் மோகன் ரெட்டி, ஆளும் தெலுங்கு தேசம் கட்சி தேர்தலில் முறைகேடு செய்து ஜனநாயகத்தைச் சீர்குலைப்பதாக குற்றம்சாட்டினார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதைத் தடுக்க முயற்சிகள் நடைபெறுவதாக கூறிய அவர், பல இடங்களில் வேட்புமனுக்கள் பறிக்கப்பட்டதாகவும், கட்சி தொண்டர்கள் தாக்கப்பட்டதாகவும் சாடினார்.

    Advertisement

    போலீசார் இதில் பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த மத்திய துணை ராணுவ படைகளை உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஆந்திராவில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Jagan Mohan Reddy has admitted that the YSR Congress Party made a mistake by supporting law governing the appointment of the Chief Election Commissioner(மத்திய அரசை கடுமையாக சாடிய ஜெகன் மோகன் ரெட்டி): Jagan Mohan Reddy latest news in tamil.