போராட்டத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்த போலீஸ்! டான்ஸ் ஆடிய மாணவர்கள்! ராஞ்சியில் இளைஞர்கள் சம்பவம்

  • ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு தேர்வாணையத்தின் முறைகேடுகளுக்கு எதிராக இன்று மாணவர்கள், இளைஞர்கள் சட்டமன்றம் நோக்கி பேரணி சென்றனர். பேரணியின்போது, காவல் துறையினர் தண்ணீரை அடித்து மாணவர்களை கலைக்க முயன்றனர். ஆனால் மாணவர்கள் தண்ணீரில் ஹாயாக டான்ஸ் ஆடிய சம்பவம் ஆட்சியாளர்களை டென்ஷனாக்கியிருக்கிறது.

    Advertisement

    முன்னதாக பீகாரிலும் இதேபோல, மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது, தண்ணீர் பீரங்கியை காவல்துறை பயன்படுத்தியது. ஆனால் இதற்கெல்லாம் அசைந்து கொடுக்காத மாணவர்கள், தண்ணீரில் டான்ஸ் ஆடி போலீஸை ஆட்டம் காண வைத்திருந்தனர்.

    Advertisement

    ஜார்க்கண்ட் மாணவர்கள்

    நம்மூரில் டிஎன்பிஎஸ்சி மாதிரி ஜார்க்கண்டில், ஜேபிஎஸ்சி தேர்வுகள் மூலம் அரசு பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வு ஆணையத்தில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்கிறது, தேர்வு வினாத்தாள் லீக் ஆகி.. காசுக்காக விற்கப்படுகிறது.. இதனால் நியாயமான முறையில் படித்து தேர்வு எழுதுபவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று மாணவர்கள் கொந்தளித்தனர்.

    இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், முறைக்கேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சட்டமன்றம் முற்றுகை

    இன்று மாணவர்கள், இந்த கோரிக்கையை முன்வைத்து ஜார்க்கண்ட் சட்டமன்றம் நோக்கி பேரணி சென்றனர். ஆயிரக்கணக்கில் மாணவர்களும், இளைஞர்களும் திரண்டு வருவதை பார்த்த காவல்துறையினர் அவர்களை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. தடியடியும் நடத்தி பார்த்தாச்சு.. கடைசியாக சட்டமன்றத்திற்கு செல்லும் சாலையில் உள்ள ஜெகந்நாத்பூர் கோயில் அருகே மாணவர்கள் கடைசி தடுப்பை நெருங்கியபோது பதற்றம் அதிகரித்தது.

    Advertisement

    சம்பவம் செய்த இளைஞர்கள்

    மாணவர்களை கலைக்க கடைசியாக காவல்துறையினர் தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தினர். சட்டமன்றத்திற்கும் மாணவர்களுக்கும் இடையில் வெறும் 200 மீ இடைவெளிதான்.. அடுத்து என்ன நடக்குமோ? மாணவர்கள் இப்படியே கலைந்து செல்வார்களா? அல்லது மேலும் முன்னேறி வருவார்களா? என்று போலீசும், மொத்த அரசு அமைப்பும் உச்ச கட்ட டென்ஷனில் இருந்தது. அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், 'மேகம் கருக்குது' என்கிற பாடலின் இந்தி வெர்சன் சாங் பாடி.. தண்ணீர் பீரங்கியிலிருந்து வந்த தண்ணீரில் ஹாயாக டான்ஸ் ஆடினர்.

    இந்த இடத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. சமீபத்தில் பீகாரில் இதேபோல போராடிய மாணவர்கள் மீது தண்ணீர் அடிக்கப்பட்டபோது.. மாணவர்கள் டான்ஸ் ஆடியிருந்தனர். அதே பேட்டனை.. இங்கேயும் மாணவர்கள் ஃபாலோ செய்திருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ சோஷயில் மீடியாக்களில் பரவலாக ஷேரான நிலையில், GenZ இளைஞர்களின் போராட்ட வடிவம் இப்படித்தான் ஜாலியாக இருக்கும். அதே நேரத்தில் கோரிக்கைகளில் உறுதியாக இருப்பார்கள் என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

    Advertisement

    ராகுல் காந்தியின் டபுள் ஸ்டாண்ட்

    மறுபுறம், இந்த போராட்டம் ராகுல் காந்திக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜார்க்கண்டில் இப்போது காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி சார்பில் மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டை முற்றுகையிட்டு அதிரடி காட்டியிருந்தார்.

    ஆனால் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம் குறித்து பெரியதாக எதையும் பேசவில்லை. யார் வீட்டையும் முற்றுகையிட கிளம்பவில்லை. இதெல்லாம் ராகுல் காந்தியின் டபுள் ஸ்டாண்டை காட்டுகிறது என்று பாஜக விமர்சிக்க தொடங்கியிருக்கிறது.

    English Summary

    Jharkhand: Students and youths in Jharkhand marched towards the Legislative Assembly today to protest against irregularities in the state public service commission. During the march, police attempted to disperse the students using water cannons; however, the sight of students happily dancing amidst the water jets has left the authorities agitated.