விடிய விடிய வீட்டில் சத்தம்.. 7 வயது குழந்தைக்கு விஷயம் தெரியாது.. 20 கி.மீ ஓடிய கணவர்! ஏன் தெரியுமா

  • கொல்கத்தா: விடிய விடிய மனைவியுடன் சண்டை போட்டாராம் கணவர்.. பிறகுதான் அந்த அதிர்ச்சி காரியத்தை செய்துள்ளார்.. இப்படியொரு காரியத்தை செய்துவிட்டு, 20 கிமீ ஓடி, இன்னொரு அதிர்ச்சி காரியத்தை செய்துள்ளார்.. மொத்த கொல்கத்தாவும் ஆடிப்போயுள்ளது.. இதுகுறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டு வந்தாலும், பரபரப்பு இன்னமும் அங்கு அடங்கவில்லை.. அப்படியென்னதான் நடந்தது? யாரிந்த நபர்?

    Advertisement

    மேற்கு வங்காள மாநிலம் ஹூக்ளி மாவட்டம் ரிஷ்ரா பகுதியில் உள்ளது நதுன்கிராம் என்ற இடம்.. இங்குதான் வசித்து வருபவர்தான் தீபங்கர் சர்க்கார் (39). தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு மொனிகா சர்க்கார் (31) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

    Advertisement

    விடிய விடிய தகராறு

    ஆரம்பத்தில் சந்தோஷமாகவே இவர்களின் வாழ்க்கை சென்றுள்ளது.. சமீபகாலமாகத்தான் இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவர்களுக்குள் மறுபடியும் ஒரு சண்டை வெடித்துள்ளது. விடிய விடிய இந்த வாக்குவாதம் நீடித்திருக்கிறது.. சனிக்கிழமை அதிகாலையில், ஆத்திரத்தின் உச்சிக்கே போன தீபங்கர் சர்க்கார், கத்தியை எடுத்து வந்து மனைவி மொனிகாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டார்.

    சனிக்கிழமை காலை 8 மணிக்கு அந்த வீட்டிற்கு வேலைக்காரி வந்துள்ளார். கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தால் ரத்த வெள்ளத்தில் மொனிகா சர்க்கார் சடலமாக கிடந்ததை கண்டு அலறி வெளியே ஓடி வந்துவிட்டார்.. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், தாயின் சடலத்திற்கு அருகிலேயே எதுவுமே அறியாமல் அவர்களது 7 வயதுக் குழந்தை தூங்கி கொண்டிருந்ததாம்.

    Advertisement

    7 வயது குழந்தை

    வேலைக்காரியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டுக்காரர்கள், உடனடியாக ரிஷ்ரா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்தப் பிஞ்சு குழந்தையை மீட்டு, அவளது பாட்டி வீட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருந்த தீபங்கர் சர்க்காரைத் தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது.

    இதனிடையே மனைவியைக் கொலை செய்துவிட்டு வீட்டை விட்டு ஓடிய தீபங்கர் சர்க்கார், ரிஷ்ராவிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொல்கத்தா நகரத்திற்கு சென்றுள்ளார்... மன உளைச்சலில் சுற்றிய அவர், அன்று மதியம் 3 மணியளவில் கொல்கத்தாவின் பெல்காச்சியா மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்தார். அந்த நேரத்தில் வந்த மெட்ரோ ரயிலின் முன்பாக திடீரென பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

    Advertisement

    20 கிலோமீட்டர் ஓடிய கணவன்

    இந்த தற்கொலை சம்பவத்தால் கொல்கத்தா மெட்ரோவின் புளூ லைன் ரயில் சேவைகள் சுமார் 50 நிமிடங்கள் ஸ்தம்பித்தன... மெட்ரோவில் பாய்ந்த நபரின் உடலை மீட்ட உல்டாடாங்கா பகுதி போலீசார், விசாரணையின் முடிவில் அவர்தான் ரிஷ்ராவில் மனைவியைக் கொலை செய்துவிட்டுத் தேடப்பட்டு வந்த தீபங்கர் சர்க்கார் என்பதை உறுதி செய்தனர்.

    இந்தத் சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையை கையில் எடுத்தனர்.. அப்போதுதான் இது கள்ளக்காதல் காரணமாக நடந்த பயங்கரம் என்பது தெரியவந்தது.

    Advertisement

    யாருக்கு கள்ளக்காதல்

    அதாவது தீபங்கர் சர்க்காருக்கு வேறொரு பெண்ணுடன் தவறான இருந்து வந்துள்ளது.. அந்த பெண்ணுக்கும் திருமணமாகிவிட்டதாம்.. இன்னொரு குடும்பத்தை கெடுக்கக்கூடாது, அந்த பெண்ணுடனான உறவை துண்டிக்கும்படி மொனிகா அடிக்கடி கணவனை கண்டித்து வந்துள்ளார்.. இதுதான் இவர்களுக்குள் சண்டையாக வெடித்துள்ளதாக, அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் சொல்லி உள்ளனர்..

    ஆனால் மொனிகாவின் உறவினர்களோ, வேறு காரணம் சொல்கிறார்கள்.. தீபங்கருக்கு மோனிகா மீது சந்தேகம் இருந்ததாகவும், வேறு யாருடனோ தன்னுடைய மனைவி பழகுவது பிடிக்காமல், மொனிகாவை கண்டித்ததாகவும் சொல்கிறார்கள்.. இப்படி மாறிமாறி புகார் சொல்வதால், நிஜமாகவே கள்ளக்காதலில் இருந்தது என்று இதுவரை போலீசுக்கு தெரியவில்லையாம்.

    Advertisement

    எனினும், இந்த சம்பவத்தில் 3வதாக ஒரு நபருக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால், அந்த கோணத்திலுலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.. இதுகுறித்து முழுமையாக விசாரித்து வருவதாக ஸ்ரீராம்பூர் காவல்துறை துணை ஆணையர் அர்னாப் பிஸ்வாஸ் செய்தியாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    English Summary

    Kolkata Family Tragedy: What Happened to the Husband Found 20 km Away? A 7-Year-Old Still Doesn't Know the Truth