சினிமாவை மிஞ்சிட்டாங்க! எம்பி காருக்கு தீ வைத்த தெலுங்கு தேசம் கட்சியினர்! உள்ளாட்சி தேர்தலால் கலவரம்

  • அமராவதி: ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது. முதல் நாளான இன்றே தெலுங்கு தேசம் கட்சியினருக்கும், எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையில் கலவரம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் எம்பி மிதுன் ரெட்டி சென்ற காரினை வழிமறித்து தெலுங்கு தேசம் கட்சியினர், காரினை எரித்திருக்கும் சம்பவம் தெலுங்கு படங்களை விஞ்சும் அளவிற்கு இருக்கின்றன.

    Advertisement

    ஆந்திராவில் மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 28ஆம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான ஒன்றே ஆளும் கட்சியான தெலுங்கு தேசன், ஜனசேனா மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி வேட்பாளர்கள் பலரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    Advertisement

    அதேபோல் எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்ய முயற்சித்தனர். ஆனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகிகள் பல்வேறு சம்பவங்களை அரங்கேற்றி இருக்கின்றனர். இந்த இரு கட்சியினரின் மோதலால் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளிலும் கலவர சூழல் ஏற்பட்டுள்ளது.

    அதிலும் உச்சமாக அன்னமய்யா மாவட்டம் பூதலப்பட்டு மற்றும் ராயசோட்டி பகுதிகளில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்பி மிதுன் ரெட்டி தனது கட்சியின் வேட்பாளர்களை அழைத்து கொண்டு வேட்புமனு தாக்கல் செய்வதற்காக காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென தெலுங்கு தேசம் கட்சியினர் எம்பி மிதுன் ரெட்டியின் காரினை வழிமறுத்து குறுக்கே பாய்ந்துள்ளனர்.

    Advertisement
    சின்ன ஸ்டூலை நகர்த்தி விஜய் செய்த காரியம்.. சந்திரபாபு நாயுடு இன்ப அதிர்ச்சி! தமிழகத்துக்கு லாபம்?

    இரு தரப்புக்கும் இடையில் நடந்த மோதல் காரணமாக கார்களுக்கு தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது எமி பி மிதுன் ரெட்டி மற்றும் அவரின் கன்மேன்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய நிலை உருவாகியது. இதன்பின் வாகனங்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    அதேபோல் வேட்பாளர்களும், தெலுங்கு தேசம் கட்சியினரும் கட்டையால் தாக்கும் வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக தெலுங்கு சினிமாவில் வரும் மசாலா படங்களில் தான் இப்படியான சம்பவங்கள் காட்டப்படும். ஆனால் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், ரீல் அல்ல தம்பி.. இதுதான் ரியல் என்று கட்சியினர் செயல்பட்டு வருவதாக பார்க்கப்படுகிறது.

    English Summary

    Local Body Poll: TDP Leaders attacks YSR Congress MP Mithun Reddy Car ahead of Local Body Polls